Blog

/Blog

ஏதோ சொல்கிறது

எங்கோ கேட்கும் காலடி ஓசை ஏதோ சொல்கிறது இங்கும் அங்கும் அதிரும் சலங்கை இரவை ஆள்கிறது குங்கும வாசம் கமழ்கிற திசையில் காட்சி மலர்கிறது அங்கயற் கண்ணி ஆளும் பிரபஞ்சம்  அவளால் சுழல்கிறது எத்தனை உயிர்கள் உறங்கவைத்தாளோ எங்கே மறைத்தாளோ புத்தம் புதிதாய் உயிர்களைப்  படைத்து பூமியில் இறைத்தாளோ வித்தகி அவளின் விருப்பங்கள் தானே விடியலென் றாகிறது நர்த்தனம் புரியும் நளின மலர்ப்பதம் நம்முடன் வருகிறது பீடங்கள் ஆள்பவள் பீஜங்கள் எல்லாம் புனிதத்தின் விதையாகும் மூடங்கள் எரிக்கிற ...

ஈஷாவில்..ஒருநாள் மௌனத்தில்..

எல்லா சொற்களும் என்முன் வரிசையாய்… நில்லாச் சொற்களும் நங்கூரமிட்டன; பொல்லாச் சொற்கள் பொடிப்பொடி ஆயின; சொல்லாச் சொற்கள் சுரக்கவே யில்லை; பசித்தவன் எதிரில் பந்தி விரித்தும் ரசித்தேன் அன்றி ரணமெதும் இல்லை; முந்திக் கொள்கிற முந்திரிச் சொற்கள் மந்திர மௌனத்தின் மதுவில் ஊறின; கண்கள் இரண்டும் கோமுகி ஆகிட பண்கள் மலர்ந்து பாடல் கனிந்தது; மூன்றாம் கண்ணின் மெல்லிய திறப்பாய் ஊன்றிய திருவடி உணரும் சிலிர்ப்பாய் தேனின் ஒருதுளி திரளும் தவிப்பாய் ஆன்ற மௌனம் அளிக்கும் அற்புதம்; ...

தந்தையாய் வந்த குரு

(ஈஷாவின் உணவரங்கமான பிக்‌ஷா ஹாலில் உருவான பாடல்) எனது தந்தை சோறிடுவான் என் சிரசில் நீறிடுவான் என்மனதில் வேர்விடுவான் என்னுடனே அவன் வருவான் காலங்களோ அவனின்புஜம் கவிதைகளோ அவனின் நிஜம் தூலமிது அவனின் வரம் தொடர்ந்து வரும் குருவின் முகம் ஆடும்மனம் ஓய்ந்தபின்னே ஆணவமும் சாய்ந்தபின்னே தேடுமிடம் குருநிழலே தேடிவரும் அவன்கழலே தேம்புவது தெரியாதா தேவையென்ன புரியாதா சாம்பலிது உயிர்க்காதா சேர்த்துகொள்வாய் குருநாதா வைகறையின் வெளிச்சமவன் வெண்ணிலவின் குளிர்ச்சியவன் கைகளிலே அனிச்சமவன் கருணையெனும் சுபிட்சமவன் ...

அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள் ….

வந்தவர் போனவர் வகைதெரியாமல்  சொந்தம் பகையின் சுவடறியாமல்  சந்தடி ஓசைகள் சிறிதுமில்லாமல் செந்துர ஒளியாய் சந்திரப் பிழிவாய்……    அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள்  செந்நிறப் பட்டில் சூரிய ஜரிகை  கண்கள் மூன்றினில் கனிகிற மழலை  பொன்னொளிர் திருவடி பொலிகிற சலங்கை  தன்னிழல் மடியிலும் தாய்மை ததும்ப..   அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள்   ஏதுமில்லாத ஏக்கத்தின் முடிவாய்  பாதையில்லாத பயணத்தின் தெளிவாய்  பேதமில்லாத பார்வையின் கனிவாய்  வேதம்சொல்லாத விடைகளின் வடிவாய்..  அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள்  ...

எங்கள் இறைவா சரணம்

களிற்று வடிவே கலியின் முடிவே கண்ணிறை அழகே சரணம் ஒளிக்கும் ஒளியே ஓமெனும் ஒலியே ஒப்பில் முதலே சரணம் துளிர்க்கும் தருவில் தோன்றும் தளிரே துணையே திருவே சரணம் களிக்கும் மகவே கருணைக் கனலே கணபதி  நாதா சரணம் சந்தம் செழித்த செந்தமிழ் உகந்த சந்தனப் பொலிவே சரணம் தந்தம் ஒடித்த தயையே எங்கள் தலைவிதி அழிப்பாய் சரணம் விந்தை நிகழ்த்தும் வித்தக நலமே வெற்றியின் தலைவா சரணம் சிந்தை திருத்தி ஆலயமென்றால் சரியென்று நுழைவோய் சரணம் ...
More...More...More...More...