4.உங்கள் செல்வாக்கு வட்டம்
“யுத்தம் என்று வரும்போது, அதில் எல்லாமே எளிது. ஆனால் எது மிகவும் எளிதோ அதுதான் மிகவும் கடினம்”. இது சீனப்பழமொழி. ஒரு தயாரிப்பு, பயன்படுத்த மிகவும் எளிது என்பதே வாடிக்கையாளர்களுக்கு சொல்லப்படுகிற செய்தி. ஆனால் அந்தத் தயாரிப்பை அவ்வளவு எளியதாய் வடிவமைக்க எவ்வளவோ கடினமான நிலைகளை அவர்கள் கடந்து வந்திருக்க வேண்டும். மார்க்கெட்டிங் என்பது, ஒரு தயாரிப்பைக் கையாள்வது எவ்வளவு சுலபம் என்பதை கஷ்டப்பட்டு சொல்கிற காரியம். சந்தைப்படுத்துவதில், சரியான உத்திகள் கையாளப்பட்டால் அதுவரை எத்தனை சிரமப்பட்டிருந்தாலும் ...
3.எது உங்கள் சந்தை?
1967. அகமதாபாத்துக்கு வந்தார் அந்த இளைஞர். துணிக்கடைகள் முன்பு தன் காரை நிறுத்தி, துணிச் சுருள்களைத் தானே தோள்களில் சுமந்து உள்ளே வருவார். துணிக்கடை முதலாளிகளிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்வார். “ரொம்ப சாதாரணமான குடும்பத்திலிருந்து வருகிறேன். நான், என் சகோதரர்கள், இன்னும் சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து நரோடாவில் ஆலை தொடங்கி உள்ளோம். நாளொன்றுக்கு 5000மீட்டர்கள் துணி உற்பத்தி செய்கிறோம். துணிகளை ஹோல்சேலாக வாங்குபவர்கள், புகழ்பெற்ற ஆலைகளின் மிரட்டலுக்கு பயந்து எங்கள் துணிகளை வாங்க மறுக்கிறார்கள். ...
2. அபிப்பிராயங்களால் மெருகேறும் உங்கள் ஆளுமை!
மார்க்கெட்டிங் துறையில் களத்தில் குதிப்பதற்கு முன்னால், நிஜத்தைத் தெரிந்து கொள்ள நிறைய நேரம் செலவிடுங்கள். உங்களைப் பற்றிய நிஜங்கள் உங்கள் அனுபவத்திலும் மூத்தவர்களிடமிருந்து கிடைக்கும். சில சமயம் மிக மிக சிறியவர்களின் வார்த்தைகளிலிருந்தும் கிடைக்கும். பொதுவாக, முன்பின் தெரியாத குழந்தைகளிடம் மூன்று நான்கு நிமிடங்களுக்குள் உங்களால் பழகிவிட முடிகிறதென்றால், மார்க்கெட்டிங் துறையில் மளமளவென்று முன்னேறுவீர்கள் என்று அர்த்தம். குழந்தைகள், புதிய விஷயங்களை எப்போதும் தேடுகின்றன. அதிலும் சுவாரஸ்யமான விஷயங்களை விரும்புகின்றன. நீங்கள் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்து சில ...
1. மார்க்கெட்டிங் மந்திரங்கள்
கோவில்களில் மந்திரம் சொல்பவர்கள், சில செய்கைகளையும் செய்வார்கள். அவற்றுக்கு முத்திரைகள் என்று பெயர். வேலையில் ஜெயிப்பவர்களுக்கு, வெற்றிக்கான மந்திரங்கள் மட்டும் போதாது. முத்திரை பதிக்கும் விதமாக செயல்படுவதும் அவசியம். தமிழ்நாட்டில் இப்போது புதிதாக ஒரு கலாசாரம் பரவுகிறது. பேக்கரிகளில், டை அணிந்து கொண்டு, நடுத்தர வயதுக்காரர் ஒருவரும், அவரெதிரே ஓரிரு இளைஞர்களும் வந்தமர்வார்கள். ஆளுக்கொரு டீ சொல்லி, அதன்பிறகு பிஸ்கட் சொல்லி, பதினைந்து முதல் இருபது நிமிடங்களுக்குள் நேர்காணலையே நடத்தி முடித்துவிடுகிறார் டை கட்டியவர். எதிரே கை ...
24. எதற்காக நிர்வகிப்பது?
ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென்று சில இலக்குகளைக் கொண்டிருக்கும் என்றாலும் நிர்வாகத்தின் அடிப்படைத் தன்மைகள் சிலவற்றை ஆராய்ந்து பார்ப்பது பொது மேன்மைக்கான இலக்குகளைப் புரிந்துகொள்ள உதவும். பீட்டர் டிரக்கர் இது குறித்து சில அடிப்படை வழிகாட்டுதல்களை வழங்குகிறார். 1. வளங்களும், செயல்களுக்கான விளைவுகளும் தொழிலுக்கு வெளியில்தான் இருக்கின்றன. 2. செயல்களுக்கு விளைவுகள் வருவதென்பது புதிய வாய்ப்புகளை முயன்று பார்ப்பதில் இருக்கிறதே தவிர சிக்கல்களைகத் தீர்த்துக் கொண்டிருப்பதில் அல்ல. 3. நல்ல விளைவுகள் ஏற்பட வேண்டுமென்றால் வாய்ப்புகளை தீவிரமாக நெருங்க ...
23. தோல்வியின் தோள்களில் வெற்றி
புதிய அம்சங்களை முயன்று பார்ப்பதில் பலருக்கு இருக்கிற தயக்கமே தோற்றுவிடுவோம் என்கிற அம்சம்தான். அந்த அச்சம் இருக்கும் வரைக்கும் புதுமைகளை முயன்று பார்க்க வாய்ப்பே இல்லை. தோல்விகள் தீண்டப்படாத எந்த நிறுவனமும் வளர்ந்ததாக வரலாறு கிடையாது. வித்தியாசமான அனுபவங்களை கொள்முதல் செய்ய ஒரு நிறுவனத்திற்கு சரியான வாய்ப்பு தோல்விகள் தான். ஜே அன் ஜே நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் ப்ரூக், “நீங்கள் தோல்விகளை ஏற்கிற விருப்பத்தோடு இருக்க வேண்டும்” என்கிறார். “தவறுகளை ஏற்கும் துணிச்சல் வருகிற ...