புதிதாய் திருமணம் ஆனவர்க்கு பணமோ பொருளோ தருவீர்கள் புதுமனை புகுகுற உறவினர்க்கு பரிசுப் பொருட்கள் தருவீர்கள் புதிதாய் வாடிக்கையாளர் எனில் பரிசும் சலுகையும் தருவீர்கள்.. புதிதாய் ஆண்டு வருகிறதே புதிதாய் என்ன தருவீர்கள். உங்கள்…
உன்னுடைய பீடத்தை நீயே அமை; உன்னுடைய வேதத்தை நீயே சமை; உன்வலிமை உன்சிறுமை நீயே நினை; உன்கனவு மெய்ப்பட நீயே துணை; பொன்னுரசிப் பார்க்கையிலேபுரியுமதன் தரம் மின்னுரசி மழைபொழிய மண்ணெல்லாம் வளம் உன்னைவிதி உரசுகையில்…
பெய்யும் பனியை வெயில் தின்னும் படர்கிற கோடையை மழைதின்னும் செய்கிற பணியை காலம் தின்ன சிறிதும் வாய்ப்பு தர வேண்டாம் தூண்டில் புழுவை மீன்தின்னும் துடிக்கும் மீனை நாம் தின்போம் நீண்ட கனவை தயக்கம்…
குருவெனும் முழுநிலவு வளர்பிறை அதன்பரிவு அருள்நிழல் தரும் பொழுது அகிலமும் அவன்விழுது ஒளியினில் உயிர்நனைய ஒலியினில் இசைநனைய களிதரும் அமுதமென குருவருள் வரும்பொழுது நடுநிசி வரையினிலே நாதனின் குடிலினிலே உடைபடும் வினைமுழுதும் உன்னதன் அடிதொழுது…
“கலகல” வென்று சிரித்தால் என்ன கவலை வரும்போது “சிடுசிடு” வென்று இருப்பதாலே எதுவும் மாறாது ஒருசில நாட்கள் சூரியன் தூங்கும் ஒருசில நாட்கள் தவறாய்ப்போகும் நடக்கும் தவறு நமது லீலை சிரித்து விட்டுத் தொடர்க…
மூடிக் கிடந்த குளிர்பெட்டி – அதில் மூச்சினைத் தொலைத்துக் கிடந்தானே பாடி முடிந்த கீர்த்தனையாய் – எங்கள் பாட்டுடைத் தலைவன் தெரிந்தானே மேடுகள் ஏறிய ஜீவநதி – நெடும் மௌனத்தில் தூங்கிய தருணமிது கூடு…
காதில் விழுந்த கேலிச் சொற்களைக் காற்றில் எறியுங்கள் வீசிய பந்தாய் திரும்பிப் போகும்….. விட்டுத் தள்ளுங்கள் வாதம் செய்பவர் வழியில் வந்தால் விலகிச் செல்லுங்கள் வாழ்வில் நினைத்ததை அடைவதன் மூலம் வெற்றி கொள்ளுங்கள் குறுக்குப்பாதை…
யாரோ உருட்டிய பகடையிலே ஏதோ விழுவதா உன்வாழ்க்கை? ஊரோ உலகோ கொடுப்பதல்ல உனக்குள் இருப்பதே உன்வாழ்க்கை நீரோ நெருப்போ எதுவரினும் எல்லாம் நமது செயலாலே போரோ புகழோ எல்லாமே பழகும் நமது இயல்பாலே பத்து…
கருவி இசைத்துக் கற்றானா கருவில் இருந்தே பெற்றானா சரிகம பதநி சுரங்களெல்லாம் சுடர்விரல் நுனிகளில் உற்றானா வரிகளில் இசையைக் கண்டானா வானின் அமுதம் தந்தானா ஒருமுறை வந்த இசை மன்னன் உலகுக்கு மீண்டும் வருவானா…
வீசும் புயலை வெளியில் நிறுத்து பேசும் பேச்சில் பேரொளி மலர்த்து ஈசல் போலே இறகுதிராதே வாசல் திறக்கும் வாடி விடாதே தடங்கல்கள் எத்தனை தாண்டியிருக்கிறாய் மயங்கி நிமிர்ந்து மீண்டிருக்கிறாய் நடுங்கும் அவசியம் நமக்கினி இல்லை…




