திருமகள் பெருங்கருணை ஒரு தடவை…ஒரே தடவை உன்விழி என்மேல் படவேண்டும் வரும் தினங்கள் ..வளர்பிறையாய் வாழ்வில் வெளிச்சம் தரவேண்டும் திருமகளே,,,திசைமுழுதும் தனங்கள் வளங்கள் மிகவேண்டும் பெருநிலனில் பயிர்களெல்லாம் பசுமை பொங்கி வரவேண்டும் ஆமொருநாள் பாற்கடலில்…

வாழவைப்பாள் என்னை வெண்முகிலில் ஊஞ்சலிடும் வெண்ணிலவின் தோற்றம் வீணையடு வாணிதரும் வாஞ்சையே‘முன்’ னேற்றம் பண்ணழகில் பரதமெனும் பேரழகில் நாட்டும் பாரதியாள் பேரருளைப் பாடும்தமிழ் காட்டும் பூங்கரத்தில் ஜெபமாலை, புத்தெழுத்துச் சுவடி பொற்கரங்கள் வீணையினை பேரருளாய்…

  ஆளுவாய் ஆல வாயே!   பூடகப் பொய்கள் பார்த்து புன்னகை செய்து கொள்வாய்; நாடகத் திரைகள் எல்லாம் நாயகீ! நீக்கி வைப்பாய்; ஏடகத்து இருப்பாய்; எங்கள் எழுத்தெலாம் அபகரிப்பாய்; ஆடகப் பொன்னே &…

பாதங்கள் பற்றினால் பாரங்கள் நீக்கிடும் பைரவி சந்நிதானம் பெருநிலம் காப்பவள் திரிசூலம் மின்னிடப் பொலிவோடு நின்ற கோலம் கீதங்கள் ஒலித்திடும் கோயிலின் வாயிலில் கால்வைக்கும் அந்தநேரம் காருண்யரூபிணி காதோரம் “வா” என்று கூப்பிட்ட வாஞ்சை…

உன்கையில் உருவான உயிருள்ள பொம்மைகள் உன்போல பொம்மை செய்யும்; ஊர்கூடி சீர்கூடி உல்லாச கொலுவைத்து உன்பேரைப் பாடி உய்யும்; பொன்னள்ளித் தருகின்ற பூரணி! அபிராமி! பொற்பதம் பாடுகின்றோம்; புன்வினை நீக்கிடும் புண்ணியச் சந்நிதி பணிந்திடக்…

வானை அளக்கிற ஆற்றலுடன் இன்று வந்தனர் மானிடர் ஞானப்பெண்ணே – தன்னைத் தானும் அளக்கிற ஆற்றலினை -அவர் தேடிடச் சொல்லடி ஞானப்பெண்ணே! உச்ச வரம்புகள் இல்லாமலே – இன்று ஊதியம் காண்கிறார் ஞானப்பெண்ணே அச்சம்…

முன்னே ஒரு தடவை – உங்கள் முயற்சிகள் தோற்றிருந்தால் இன்னும் ஒரு தடவை – உங்கள் இயக்கம் தொடர்ந்திடட்டும் என்றோ விழுந்தவிதை – அதை எண்ணிக் கிடந்திருந்தால்… இன்னொரு தாவரமாய் – அது எப்படி…

மலிவு விலையில் மண்ணுலகெங்கும் பகைவர்கள் கிடைப்பார்கள்! மிகவும் விரைவாய் மனிதா உன்மேல் பழிசொல்ல நினைப்பார்கள்! தலைகுனியாமல் வாழ நினைத்தால் தடைகள் படைப்பார்கள்! தாண்டி வரும்வழி தெரிந்தவர்தானே சரித்திரம் படைப்பார்கள்! ஊரின் பழிச்சொல் ஒலிக்கட்டுமே உன்…

சமீப காலமாய், இலக்கியத் துறையில் புத்தெழுச்சி காண்கிறது பொள்ளாச்சி. பூபாலன், அம்சப்பரியா போன்ற கவிஞர்கள் நெறிப்படுத்தும் பொள்ளாச்சி இலக்கிய வட்டமும் இதற்குக் காரணம். மூத்த தலைமுறையில் பூத்த தமிழ்க் குறிஞ்சிகள் பலரின் தமிழ்மணத்தையும் இந்நகரம்…

(சாகித்ய அகாதெமியும் பொள்ளாச்சி என்.ஜி.எம். கலை அறிவியற் கல்லூரியும் நிகழ்த்திய அமரர்.அ.ச.ஞானசம்பந்தன் நூற்றாண்டு நினைவுக் கருத்தரங்கில் வாசித்த கட்டுரை) தத்துவவ நுட்பங்களையும் தமிழிலக்கியங்கள் முன்மொழியும் விழுமங்களையும், காவியங்களின் கவினுறு காட்சிகளையும் சொற்பொழிவுகள் வழியே மக்கள்…