Blog

/Blog

வெற்றிக் கோப்பை

உலகம் என்கிற வெற்றிக் கோப்பை உள்ளது உனக்காக! சிலசில தோல்விகள் வருகையில் உள்ளம் சிதறுவது எதற்காக? வாழ்க்கை வீசும் வேகப்பந்துகள்; வெறிகொண்டு நொறுக்கிவிடு! பாறை போன்றது வாழ்க்கை & அதனை உளிகொண்டு செதுக்கிவிடு! ஆடும் களங்களில் ஆளுமை செலுத்து அஞ்சி மயங்காதே! நாடக மனிதர்கள் பூடகச் சொல்லை நினைத்துக் கலங்காதே! காலம் உன்னை நம்புவது உண்மை கைகள் நடுங்காதே! நாளை உன்பேர் சாதனைச் சின்னம் நொடியும் தயங்காதே! ஆட்டம் தொடங்கிய பின்னால் எதற்கு வாட்டம்? முணு-முணுப்பு? நாட்டம் ...

துணையிருக்கும்

பொறுப்பில்லாத மனிதர்க்கு வாழ்க்கை பொம்மலாட்டம் போலிருக்கும் இறுக்கிய கயிறுகள் இழுக்கிற இழுப்பில் கைகால் அசையும் நிலையிருக்கும்! நெருப்பில்லாத மனதுக்கு வாழ்க்கை நாடகம் நடப்பது போலிருக்கும் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாய் நிலை புரியாத வலியிருக்கும் சலிப்புணராத மனிதர்கள் வாழ்க்கை சூரியவெளிச்சம் போலிருக்கும் முனைப்புடன் தினமும் முயற்சிகள் தொடங்கி முத்திரை பதிக்கும் வெறியிருக்கும்! களைப்புணராத பயணம்தான் வாழ்க்கை கனவைத் தொடுகிற பலமிருக்கும் உழைப்பெனும் அற்புதம் உணர்ந்தவர்க்கே உலகம் என்றும் துணையிருக்கும்! ...

வாழ்வு வரும்

சிறுத்தைகள் திரிகிற காடென்று சிறுமான் மேயாதிருப்பதில்லை; குறுகிய கவலையில் வாழ்பவர்கள் குறிக்கோள் என்றும் தொடுவதில்லை. பூமி பரந்தது அதிலுனக்குப் பாதை இருப்பது நிச்சயமே! ஆமை வேகம் உதறிவிட்டு நீயாய் எட்டிடு இலட்சியமே! காலம் எதையும் புரட்டிவிடும் கணப்பொழுதுக்குள் நிமிர்த்திவிடும் நாளை காட்சிகள் மாறிவரும் நினைத்தவை நிஜமாய் ஆகிவிடும்! சென்றதை நினைத்துப் புலம்பாதே செல்லும் திசையில் வெளிச்சம் வரும் என்றைக்கும் உள்ளம் கலங்காதே எண்ணம் போல வாழ்வுவரும். ...

மாற்றிவிடு

குப்பைகள் உரமாய் ஆகிறபோது கற்பனை நிஜமாய் ஆகாதோ – ஒரு கைப்பிடி தானியம் எறும்புகள் சேர்க்கும் நம்மால் சேமிக்க முடியாதோ? சொந்த முயற்சியில் சிலந்திதன் வலையை செய்துகொள்வதைப் பார்த்தாயோ – நீ சிந்தும் வியர்வையில் எந்த செயலையும் எளிதாய்த் தொடலாம் கேட்டாயோ? வாழும் வாழ்க்கை நிரந்தரமல்ல வகுக்கும் செயல்களை நிலையாக்கு! தாழ்வும் உயர்வும் தானாய் வராது உனது வெற்றியை உருவாக்கு! தாண்டிச் செல்லும் நொடிகளின் முதுகில் தனிப்பெரும் வெற்றிகள் ஏற்றிவிடு மீண்டும் மீண்டும் உன்னைத் தூண்டி மாறா ...

பூமிப்பந்துடன் கொண்டாடு

பூமிப்பந்துடன் கொண்டாடு வயல்களில் முளைவிடும் பயிர்களுக்கு வான்தரும் மழைத்துளி விருதாகும்! வியர்வை விதைக்கும் உழவருக்கு விளைச்சல் முழுவதும் விருதாகும்! முயற்சியை நம்பி உழைப்பவர்க்கு முன்னேற்றங்கள் விருதாகும்! துயரங்கள் துடைத்து எழுபவர்க்கு தொடரும் இன்பங்கள் விருதாகும்! அழுத்திடும் சோம்பலை அகற்றிவிடு அடுத்தவர் சோகம் துடைத்துவிடு எழுத்தினில் பேச்சினில் கனிவுகொடு ஏங்கும் யாருக்கும் துணிவுகொடு நிகழ்த்திய வெற்றிகள் கையளவு நீதொட இலக்குகள் வானளவு கழுத்தினில் விழுகிற பதக்கம்பெறக் குனிகிற பணிவே கடலளவு! விருதுகள் எல்லாம் முன்னோட்டம் வருகிற வெற்றிக்கு வெள்ளோட்டம் ...

நெடுஞ்சாலை

வாழ்க்கை என்பது நெடுஞ்சாலை வேகத்தடைகளும் இருக்கலாம் போக்குவரத்து நெரிசலை பார்த்துப் போனால் ஜெயிக்கலாம்! பச்சைவிளக்கு தெரிகையில் பயணம் தொடர்ந்தால் நல்லது லட்சியவிளக்கு தொடும்வரை எரிபொருள் மனதில் உள்ளது! எத்தனை பயணிகள் சாலையில்! எல்லோருக்கும் அவசரம்! எத்தனை தொலைவு பாதையோ அத்தனை பொறுமை அவசியம்! எங்கே போகிறோம் என்பதை எப்படிப் போகிறோம் என்பதை உங்கள் வரைபடம் காட்டினால் உங்கள் பயணம் வெற்றிதான்! பாதை தவறிப் போகையில் பயணம் குழம்பிப் போகலாம் ஏது திசையெனத் தெரிந்தவர் எல்லாம் ஊர்சென்று சேரலாம். ...
More...More...More...More...