அலறட்டும் உனது பகை
தீக்குச்சி சிறிது தீட்சண்யம் பெரிது திசைகளில் வெளிச்சமிடும்! நோக்கங்கள் சரியாய் உரசிடும் பொழுது நிச்சயம் வெற்றி வரும்! ஆக்கிடப் போகும் ஆயிரம் பணிகளின் பட்டியல் எழுதிவிடு! போக்கிய பொழுதுகள் போனால் போகட்டும் புதிதாய்ப் பிறந்துவிடு! மார்புக்கு குறியாய் விமர்சன அம்புகள் மற்றவர் செலுத்தட்டுமே! யார் சொல்லி என்ன உன் வழி உனது பயணம் நடக்கட்டுமே! ஊர் சொல்லும் வார்த்தைகள் உலவிடப் போவது உன் பலம் தெரியும் வரை! பேர்சொல்லும் விதமாய் படைத்திடு சாதனை அலறட்டும் உனது பகை! ...
வழி பிறக்கும்
கனவுகள் பருகிய கண்களுக்குக் காரிய வீரியம் வரவேண்டும்! மனதினில் மழைவிழும் தருணத்திலே முயற்சியின் விதைகள் எழவேண்டும்! காலத்தின் சுழற்சிகள் நிற்பதில்லை கடுங்குளிர் நடுவே தைபிறக்கும்! வேலைகள் தொடங்கி நடத்துகிற விபரம் இருந்தால் வழிபிறக்கும்! முன்னோர் பழமொழித் தூண்களிலே முட்டுக்கொடுத்தே நிற்காதே சொன்ன மொழிகளின் பொருளறிந்து செயலாய் மாற்ற மறக்காதே வார்த்தைகள் விதையாய் விழும்போது வாழ்க்கை முளைவிடும்; வளர்த்துவிடு; பார்த்தவை கேட்டவை உரமாகும் பூக்களை உனக்குள் மலர்த்திவிடு. ...
வெற்றியின் பாதை
வாழ்க்கை என்பது வார்க்கப்படுவது வேண்டிய விதமாய் வார்த்திடலாம்! சூழ்நிலை எப்படி இருந்தால் என்ன ஜெயிக்க நினைத்தால் ஜெயித்திடலாம் ஏழ்மையும் செல்வமும் தலைவிதியல்ல எதையும் முயன்றால் மாற்றிடலாம்! வாழத் தெரிந்து வாழ்வை நடத்திடு வானம் ஒருநாள் வசப்படலாம்! கற்ற கல்வியோ கதவுகள் திறக்கும் காற்றாய் நுழைவது உன்வேலை பெற்ற வாய்ப்போ சாவிகள் கொடுக்கும் புதையல் திறப்பது உன்லீலை! வெற்றி உனக்கொரு வலிமை கொடுக்கும் வென்றுகொண்டிருப்பது சுகபோதை! பற்றிய துறைகளில் முத்திரை பதித்தால் பூமிக்கு உன்கதை புது கீதை! அஞ்சிக் ...
தலைநிமிர்வாய்
வாரியும் கொடுக்கும் வாங்கியும் மறைக்கும் வாழ்க்கையின் கணக்கினை யாரறிவார்? ஆர்வமும் ஆற்றலும் சேர்ந்திடும் வேளையில் ஆயிரம் நலம்வரும் யார்தடுப்பார்? கூரிய நோக்குடன் நீசெல்லும் பாதையில் குறுக்கிடத் துணிந்து யார்வருவார்? வேர்விடும் கனவுக்கு நீர்விடத் துணிந்தால் வெற்றிகள் வருவதை யார்மறைப்பார்? எல்லாச் செயலுக்கும் எதிர்வினை உள்ளது இதைத்தான் விதியெனச் சொல்லுகிறார் நல்ல செயல்களை நாளும் புரிபவர் நன்மைகள் ஆயிரம் அள்ளுகிறார் வல்லவன் சறுக்குதல் நிகழ்ந்தாலென்ன விரைவாய் எழுவது சாத்தியமே! செல்கிற திசையெது? சரியாய்த் தெரிந்தால் ஜெயிப்பாய்! இதுதான் சூத்திரமே! ...
காற்று நீதானே
காட்டு மலர்களின் மீதேறி – அதோ காற்றுக் குழந்தையின் ஓட்டமென்ன? கூட்டம் கூட்டமாய் இலைகளெல்லாம் – அதைப் பார்த்து ரசிக்கிற ஆட்டமென்ன? பாதம் பதிகின்ற சுவடின்றி – தன் பாதை எதுவென்ற பயமின்றி மோதிப் பறக்குது காற்றடியோ – அதன் மோகக் கிறுக்குகள் பாரடியோ! மண்ணில் இருந்து மேல்கிளம்பி – அது மேகங் கிழித்து விளையாடும்! வண்ண மரங்கள் குலுங்கும்படி – அது வார்த்தைகள் சொல்லி உறவாடும்! நீயும் காற்றும் வேறில்லை – உன் நெஞ்சத்தில் இதனை ...
பேலியோ உங்களுக்கான உணவா??
“நீங்க இப்போ என்ன டயட்டில் இருக்கீங்க? இந்தக் கேள்வி இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டது. குறிப்பாக, இணையம் வழியாய் விதம்விதமான வாழ்க்கை முறைகள் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு அனைவருக்குமே இருக்கும் சூழலில், வித்தியாசமான உணவு முறைகள், விசித்திரமான உணவுப் பழக்கங்கள் என நிறையவே” கேள்விப்படுகின்றனர். ஆனால், சமீப காலத்தில், காட்டுத் தீ போல் பரவி வருவதோடு, பின்பற்றுபவர்களில் பெரும்பாலானவர்களால் மிகத் தீவிரமாக ஆதரிக்கப்படுவதும், பிரச்சாரம் செய்யப்படுவதுமான உணவுமுறை, பேலியோ உணவு முறை. இதன் அடிப்படையே, குகை மனிதனின் ...