விடிந்துவிடும்!
வெளிச்சம் என்பது எழும்போது -அதன் வேலைகள் எல்லாம் தொடங்கிவிடும் ஒளியின் கீற்றுகள் வரும்போதே – இருள் உயிர்ப்பை இழந்து ஒடுங்கிவிடும் துளித்துளியாய் அது பறந்தாலும் – அதன் தீட்சண்யங்கள் தெரிந்துவிடும் ஒளிபோல் நிகழட்டும் உன் வாழ்க்கை – இந்த உலகின் திசைகள் விடிந்துவிடும். மின்னலின் வெளிச்சம் நிலையல்ல – ஆனால் மழையை மண்ணுக்குத் தருகிறது சின்ன வெளிச்சம் இருந்தாலும் – அதன் செயலால் நன்மை வருகிறது உன்னையும் என்னையும் இவ்வுலகில் – வரும் ஊழிவரை வைக்கப் போவதில்லை ...
2016 நவராத்திரி – 9
அன்னையர் மூவர் மூன்று சுடர்களின் ஒருமையிலே-இங்கு மோனம் வளர்க்குது வாழ்வெனும் தீ தோன்றும் கலைகள் செல்வங்கள் -உடன் திகழும் வீரத்தில் ஒளிர்ந்திடும் தீ தேன்துளி சுமக்கிற மொட்டைப்போல்-இந்த தேகத்தின் உள்ளே ஒளிர்கிற தீ நான்மறை போற்றிடும் நாயகியர்-அவர் நல்லருள் ஒளியாய் சுடர்கிற தீ மண்ணில் மலரும் உயிருக்கெல்லாம்-அந்த மாதர்கள்மூவரும் துணையிருப்பார் கண்ணில் தெரிகிற காட்சிக்கெல்லாம்-அந்தக் காரியக் காரிகள் வழிவகுப்பார் பண்ணில் இசையாய் ஒருத்திவந்தாள்-நல்ல பொன்னாய் பொருளாய் ஒருத்திவந்தாள் பண்ணிடும் காரியம் பொலிவுறவே-அன்னை பராசக்தி என்றும் துணையிருந்தாள் கலைமகள் ...
2016 நவராத்திரி – 8
சரண்புகுந்தோம் அகலின் நுனியில் அவள்சிரிப்பு-அதில் ஆயிரம் கேள்விக்கு விடையிருக்கும் நகரும் கோள்கள் அவள்கணக்கு-அதில் நிகழ்கணம் என்றொரு ஜதியிருக்கும் பகலும் இரவும் அவள்புரட்டு-அதில் பகட்டு நாடகம் மறைந்திருக்கும் இகமும் பரமும் அவள் படைப்பு-அதில் எல்லையின்மையின் லயமிருக்கும் கன்னியின் சிறுவிரல் அசைவினிலே-யுகம் கனவென அரும்பும் கலைந்திருக்கும் அன்னையின் கடையிதழ் புன்னகையில்-அட ஆயிரம் காவியம் அரும்பிநிற்கும் முன்னைச் சிவனின் நுதல்விழியில்-அவள் மூலத் திருக்கனல் ஒளிர்ந்திருக்கும் தன்னை எதிலும் நிறைத்தவளின்- பெரும் தயவால் பிரபஞ்சம் உயிர்த்திருக்கும் மேதையர் நிகழ்த்தும் பேதைமைகள்-அட மூடர்கள் படைக்கும் ...
2016 நவராத்திரி – 7
அரணானாள் அன்னை காலம் எனும் பகடை கையில் உருட்டுகிற மூல விடுகதை மோகினி நீ – நீலம் படர்ந்த விழியாலே பராம்மா என்னைத் தொடர்ந்த வினையகலத் தான் வெய்யில் விழிபார்த்தே வேதக் குயில்கூவும்’ கையில் கிளிவைத்த காமினி-வையகம் வாழப் பதம்வைத்து வந்தவளே நின்முன்னே தாழத் தலைதந்த னை. மூசென்னும் வண்டு முரலும் குரல்கேட்டே ஆசு கவிபாட ஆக்கினாய்- ஓசையைப் பொற்றாளம் தன்னில் பொதிந்தளிந்த மாதரசி மற்றாரை நாடும் மனம்? ஒன்பான் இரவுகளில் உன்கோயில் முன்றிலில் நின்றாரைக் காக்கும் ...
2016 நவராத்திரி – 6
ஆட்டிப் படைக்கிறவள் அகல்களில் ஒளிர்பவளோ -அவள் ஆனந்த பைரவியோ பகலெனும் பார்வையினால் -என் பவவினை எரிப்பவளோ கொலுமுகம் காண்பவளோ-அவள் குமரியை ஆள்பவளோ நிலவென எழுபவளோ-என் நிழலெனத் தொடர்பவளோ சலங்கையில் அதிர்பவளோ -அவள் சாமுண்டி மலையினளோ கலங்கிடும் பொழுதினிலே-என் கவலைகள் துடைப்பவளோ ஶ்ரீபுரம் ஆள்பவளோ -அவள் சிந்துர நிறத்தினளோ ஶ்ரீசக்ர ரூபிணியோ-என் சிறுமைகள் பொறுப்பவளோ ஏதென்று சொல்லுவதோ-அவள் எங்கெங்கும் நிறைந்தவளோ மாதங்கி மாரியென்றே-இந்த மாநிலம் காப்பவளோ ...
2016 நவராத்திரி – 5
திருமகள் பெருங்கருணை ஒரு தடவை…ஒரே தடவை உன்விழி என்மேல் படவேண்டும் வரும் தினங்கள் ..வளர்பிறையாய் வாழ்வில் வெளிச்சம் தரவேண்டும் திருமகளே,,,திசைமுழுதும் தனங்கள் வளங்கள் மிகவேண்டும் பெருநிலனில் பயிர்களெல்லாம் பசுமை பொங்கி வரவேண்டும் ஆமொருநாள் பாற்கடலில் அவதரித் தாய்நீ அழகாக பூமியெனும் தாய்மடியில் பிறந்தாய் சீதை வடிவாக பாமாநீ ராதைநீ பாடும் ஆண்டாள் நீதானே நாமசுகம் மீட்டிவந்த நங்கை மீரா நீதானே பாமகளாம் நாமகளும் பாவை உனக்கு மருமகளாம் ஆமையென வந்தவனே அழகில் சிறந்த நாயகனாம் சேமமெலாம் தருபவள்நீ ...