வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!
நமது வீட்டின் முகவரி – 1 கல்யாணமாகிக் கொஞ்ச காலம் ஆனதுமே எல்லோரும் கேட்பது, “ஏதும் விசேஷமா?” என்றுதான். விசேஷம் என்றால் தீபாவளி பொங்கலையா கேட்கிறார்கள்? குழந்தைப் பேறு பற்றித்தான் கேட்கிறார்கள். குழந்தையின் சிரிப்பும் பேச்சும் இருந்தால் தினமும் தீபாவளிதான். மகிழ்ச்சிப் பொங்கல்தான். உங்கள் குடும்ப வாரிசு குருத்து விடுகிற சம்பவம் மட்டுமல்ல, குழந்தைப்பேறு. அது, இந்த சமூகத்தோடு சம்பந்தப்பட்டது. கருவிலிருக்கும் குழந்தையை பெற்றோர் அவரவர் வாழ்க்கைமுறைக்கும் அணுகுமுறைக்கும் ஏற்ப பாதிக்கவோ, சோதிக்கவோ செய்யலாம் என்பது மருத்துவ ...
21. சவால்கள் சுகமானவை
சின்ன வயதில் தேர்வுக்குத் தயாரான நினைவு இருக்கிறதா? ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும் விழுந்து விழுந்து படிக்கும்போதோ எழுதிப் பார்க்கும் போதோ மானசீகமாக தேர்வைத்தான் எழுதிக் கொண்டிருப்போம். எது தயாரிப்பு? எது தேர்வு என்று தெரியாத அளவு தீவிரம் மனதில் குடி கொண்டிருக்கும். தேர்வுக்கு முன்பே தேர்வெழுதும் நிமிஷங்களை மானசீகமாக வாழ்கிற மாணவன் வெற்றிக்கனியை எட்டிப் பறிப்பது போல, ஒரு தயாரிப்பின் உருவாக்க நிலையிலேயே அதன் மார்க்கெட்டிங் அம்சங்கள் பற்றியும் எந்த நிறுவனம் சிந்திக்கிறதோ அந்த நிறுவனம் வெற்றி ...
20. முயற்சித்துப் பார்க்கலாமே!
மார்க்கெட்டிங் என்ற சொல்லின் உட்பொருளை விரிவுபடுத்திக்கொண்டே போனால் அதன் அடிநாதம், நம்பிக்கையைப் பெறுவதுதான். இந்த உலகம் யாரை நம்புகிறது ஏன்ற கேள்விக்கு விடை தெரிந்தால் இதில் அடுத்தடுத்த படிகளை வெகு சுலபமாகக் கடந்து விடலாம். தனித்தன்மை உள்ளவர்களை உலகம் நம்புகிறது. தனித்தன்மையை யாரெல்லாம் வெளிப்படுத்துகிறார்களோ, அவர்களையெல்லாம் உலகம் நம்புகிறது. இந்தியச் சூழலில் ஒரு மனிதருக்கு ஒவ்வொரு வாரமும் 56 மணிநேரங்கள் வேலையில் கழிகின்றன. மேலும் 10 மணி நேரங்கள் வேலை சார்ந்த பயணங்களில் கழிகின்றன. இது தவிர ...
19.பொருளின் தேவையை உணர்த்துங்கள்
“ஏங்க! இது என்ன விலை?” என்ற கேள்வி ஒலிக்காத கடைகளே இல்லை. இது பேரம் பேசும் பொருட்டாகக் கேட்கப்படும் கேள்வியல்ல. ஒவ்வொருவரும் தன்னுடைய வாங்கும் சக்தியை எடைபோடவென கேட்கும் கேள்வி. சந்தைக்கு வந்த ஒரு பொருளின் விற்பனைக்கான சாத்தியக் கூறுகள் இந்தக் கேள்வியிலிருந்தே ஆரம்பமாகின்றன. ஒருவர் ஒரு பொருளையும் தன் வாழ்வையும் முதலில் ஒப்பிட்டுப் பார்க்கிறார். அந்தப் பொருள் தன் வாழ்வுக்குள் வந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்கிறார். பிறகு அதனை வாங்குவதற்கான சாத்தியக் கூறு பற்றி ...
18. சாதிக்க வாய்ப்புகள் எக்கச்சக்கம்
விழிப்புணர்வுடன் கூடிய துணிச்சலுக்கே விவேகம் என்று பெயர். மார்க்கெட்டிங் துறையில் இந்தக் கலவை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வெற்றி இருக்கிறது. மார்க்கெட்டிங் உலகின் வினோதமான உண்மை என்னவெனில் ஒரு வட்டாரத்தில் வெகு பிரபலமாக இருக்கும் பெயர், வேறொரு வட்டாரத்தில் அறிமுக நிலையில் மட்டுமே இருக்கும்.தான் தலையில் சுமக்கும் கிரீடங்கள் கண்ணுக்குத் தெரியாத பிரதேசத்தில் அறிமுக நிலையில் ஓர் அரசரை நிறுத்தினால் அவஸ்தைப்படுவாரா இல்லையா? பல தயாரிப்புகள் அப்படிதான் புதிய பிரதேசங்களில் கால்வைக்கும் போது, தங்கள் பழைய பெருமைகளை ...
17.மாற்றங்களே வெற்றியைத் தரும்
ஹார்லிக்ஸ் என்கிற ஆரோக்கிய பானம் கடந்து வந்திருக்கும் தூரம் பற்றி, கடந்த அத்தியாயத்தில் பேசினோம். சில தயாரிப்புகள் தாமாகவே சந்தையில் கட்டமைத்துக் கொண்ட அபிப்பராயங்களை தலை கீழாக மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படியோர் அக்கினிப் பரிட்சையை ஹார்லிக்ஸ் கடந்து வந்திருக்கிறது. பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஹார்லிக்ஸ் என்றாலே உடல்நலம் குன்றியவர்களைக் காணப்போகும்போது வாங்கிப்போகும் பானம் என்று தான் எல்லோரும் சொல்வார்கள். வீட்டில் முதியவர்களுக்குத் தரும் ஆரோக்கிய பானம் என்ற நிலை மாறி, குழந்தைகளுக்குத் தரும் ஊட்டச்சத்து ...