15.வெற்றிகரமான மார்க்கெட்டிங் உத்திகள்
இளம் மார்க்கெட்டிங் அலுவலர்கள் மத்தியில் எஸ்.எம்.எஸ். ஒன்று மின்னல் வேகத்தில் பரிமாறிக் கொள்ளப்படுகிறதாம். நமது நம்பிக்கை வாசகர் ஒருவர், என் எண்ணை எப்படியோ கண்டுபிடித்து எனக்கும் அதனை அனுப்பியிருந்தார். ஒரு பார்ட்டியில் அழகான இளம்பெண்ணை சந்திக்கும் ஒருவர், அந்தப் பெண்ணிடம் போய், “நான் பெரிய பணக்காரன். என்னைத் திருமணம் செய்துகொள்” என்று கேட்டால் அது டைரக்ட் மார்க்கெட்டிங். வேறொரு நண்பரை அனுப்பி, அந்த நண்பர் இவரை சுட்டிக்காட்டி, “இவர் பெரிய பணக்காரர். இவரைத் திருமணம் செய்து கொள்” ...
14.கற்பனைகள் விற்பனைக்கு….
ராமுவும் குமாரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அடிமட்ட ஊழியர்களாய் இளமையிலேயே பணியைத் தொடங்கி, ஒன்றாகவே தொழில் கற்று, பின்னர் இருவரும் சேர்ந்து தனியாக தொழில் தொடங்கினார்கள். சிறிய முதலீடு அளவில்லாத ஆர்வம். குமாருக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம். ராமுவுக்கு கனவுகள் அதிகம். குமாருக்கு கேள்விகள் அதிகம். நிறுவனம் வளரும்போதே முப்பதுகளின் இறுதியில் இருந்தனர் இருவரும். சொந்த வீடு கட்டிக் கொள்வது, இருவருக்குமான கனவு, தன் சின்னஞ்சிறிய குடும்பம் நாளை வளரும்போது, எவ்வளவு அறைகள் தேவைப்படும்? எந்தெந்த அறைகளுக்கு ...
13.விற்பதற்கு ஒன்றுமில்லை
உலகின் மிகச்சிறந்த விற்பனையாளர்கள் தங்களை விற்பனையாளர்கள் என்று கருதியே கிடையாது. ஏனெனில், தங்களிடம் விற்பதற்கு ஒன்றுமில்லை என்றே அவர்கள் கருதினார்கள். ஒரு பொருளுக்கான தேவை என்பது, வாடிக்கையாளர்களின் வாழ்வில் காணப்படும் ஓர் இடைவெளி. அந்த இடைவெளியை இட்டு நிரப்ப தரம் மிக்க பொருள் தம்மிடம் இருக்கிறது, அந்தத் தேவையை நிறைவேற்றும் சேவையே தனது வாழ்வின் இலட்சியம் என்று உறுதியாக நம்பியவர்கள், உலகின் உயர்ந்த விற்பனையாளர்கள் ஆனார்கள். சில அம்சங்களை தங்கள் இயல்பாகவே ஆக்கிக் கொள்ளும் போது வெற்றிப்படிகளில் ...
12.வாய்ப்புகளின் வாசல்
சரக்கு மாஸ்டரும் சப்ளையரும் சம்பந்தம் செய்த கதை உங்களுக்குத் தெரியுமா? சரக்கு மாஸ்டர் பெண்ணை யாருக்குக் கட்டி வைக்கலாம் என்று கேள்வி வந்தபோது, தான் பணிபுரியும் உணவகத்திலுள்ள சப்ளையருக்குத் தான் கல்யாணம் செய்துகொடுக்க வேண்டும் என சரக்கு மாஸ்டர் ஒற்றைக்காலில் நின்றாராம். “வேறு மாப்பிள்ளை பார்க்கலாமே” என்றால், “வேண்டவே வேண்டாம்” என்று மறுத்துச் சொல்லி விட்டாராம். காரணம் கேட்டபோது, “நான் செய்து தரும் உடைந்த இட்டிலி, வேகாத ஊத்தப்பம் இதையெல்லாமே காரணங்கள் சொல்லி வாடிக்கையாளரை சாப்பிடவைத்து விடும் ...
11.சந்தையில் வெல்ல சரியான வழி
“விற்பனை செய்வதில் முன்னனுபவம் உண்டா?” நேர் காணலில் கேட்டார், அதிகாரி. “நிறைய உண்டு சார்! எங்க பூர்விக வீட்டை வித்திருக்கேன். வயலை வித்திருக்கேன்.மனைவி நகைகளை வித்திருக்கேன். என் ஸ்கூட்டரைக் கூட நேத்துதான் வித்தேன்” என்றாராம். வேலை கேட்டுவந்தவர். உள்ளதையெல்லாம் விற்றுவிட்ட சோகமல்ல விற்பனை. உற்சாகத்துடன் மேற்கொள்வதுதான் விற்பனை. கொடுக்கப்பட்ட இலக்கை எட்டுவது என்பது மார்க்கெட்டிங் துறையின் அடிப்படை. ஆனால், முழு மனநிறைவை வாடிக்கையாளர்களுக்குத் தருவதுதான் நிரந்தரமான, தொடர் வெற்றிகளுக்குத் துணை. மார்க்கெட்டிங் மன்னாதிமன்னராக வருபவர்கள், முதலில் தங்கள் ...
10.வெற்றிக்கு எல்லையே இல்லை
மார்க்கெட்டிங், விற்பனை இரண்டும் சில விநாடிகள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்கள். இந்தியச் சூழலில் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது. மக்கள் மனதில் ஒரு தயாரிப்பை ‘பச்சக்’ என்று பச்சை குத்த மாங்கு மாங்கென்று உழைப்பவர்கள் மார்க்கெட்டிங் துறையினர். அதை களத்தில் எடுத்துக்கொண்டு போய் இலக்கை முடிப்பவர்கள் விற்பனையாளர்கள். எப்படி இரட்டையர்களை சரியாகப் பிரித்தறிவது கடினமோ அதேபோல இப்போதெல்லாம் மார்க்கெட்டிங் துறையினர்க்கும் விற்பனைத் துறையினருக்கும் வித்தியாசம் காண்பது கடினமாகிவிட்டது. இந்த நேரத்தில், மார்க்கெட்டிங் துறைக்கு மட்டுமில்லாமல் வாழ்வுக்கென்றே வகுக்கப்பட்ட ஒரு ...