Blog

/Blog
பாரதியாரின் நண்பர் மகன் கோவையில் வாழ்கிறார்

பாரதியாரின் நண்பர் மகன் கோவையில் வாழ்கிறார்

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் வீட்டுமனை குடியிருப்பு ஒன்றில் சில ஆண்டுகள் முன் ஒரு வில்லா வாங்கியிருந்தேன் .வார இறுதிகளில் அங்கு செல்வது வழக்கம். அக்கம்பக்கத்தவர்கள் அன்பானவர்கள். அவர்களுக்கு அக்டோபர் மாத நமது நம்பிக்கை இதழை அன்பளிப்பாக வழங்கினேன். நடைப்பயிற்சி முடிந்து வருகையில் ஒரு வீட்டிலிருந்து பெரியவர் ஒருவர் வந்தார்.பலமுறை பார்த்திருக்கிறேன். பார்க்கும் போதெல்லாம் பரஸ்பரம் வணக்கமும் புன்னகையும் பரிமாறிக் கொள்வோம். “ஒரு நிமிஷம்” என்றபடியே வந்தவர் கைகளில் நமது நம்பிக்கை இதழின் ஒரு பக்கம் மடித்து ...
நவராத்திரி கவிதைகள் 10

நவராத்திரி கவிதைகள் 10

நவராத்திரி கவிதைகள் 10 (7/10/19) (06.10.2019அன்று சென்னையில் நிகழ்ந்த “முப்பெருந் தேவியர்” எனும் தலைப்பிலான கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை) பட்டாக இருள்போர்த்து பராசக்தி நடக்கின்ற பண்டிகைதான் நவராத்திரி பக்கத்தில் கலைமகளும் அலைமகளும் கைகோர்த்து பவனிவரும் சுபராத்திரி எட்டாத உயரங்கள் எட்டிடவே செய்கின்ற ஏகாந்த நவராத்திரி எந்திரத்தில் மந்திரத்தில் தந்திரத்தில் விக்ரஹத்தில் ஏந்திழையாள் வரும்ராத்திரி கட்டான குழலோடு பொட்டோடு மலரோடு கற்பகத்தாள் வரும்ராத்திரி கயிலையிந்த மயிலையென கபாலிவந்து அமர்கின்ற குளக்கரையின் அருள்ராத்திரி எட்டடுக்கு மாளிகைக்கும் ஏழைகளின் குடிசைக்கும் ...
நவராத்திரி கவிதைகள் 9

நவராத்திரி கவிதைகள் 9

நவராத்திரி கவிதைகள் 9(6/10/19) வெண்ணிறப் பாற்கடல் மத்தியிலே வெண்ணிலவாக எழுந்தவளாம் தண்ணந் துழாயணி கேசவனின் திருமார் பினிலே அமர்ந்தவளாம் எண்ணிய யாவையும் நிகழ்ந்திடவே என்றும் இன்னருள் பொழிபவளாம் வண்ணத் திருமகள் திருவடிநம் வாசலில் வைத்தால் வாழ்ந்திடுவோம் பாம்பணை துயில்கிற பேரழகி பிள்ளைகள் பசியைப் போக்கிடுவாள் தேம்பும் மனங்களை தேற்றிவைத்து தேடரும் செல்வங்கள் ஆக்கிடுவாள் தாம்புக் கயிற்றினில் கட்டுண்ட தாமோதரனின் மனையரசி ஆம்நம் அன்பினில் சிறைப்படுவாள் ஆயிரம் நன்மைகள் அளித்திடுவாள் செக்கச் சிவந்த தாமரையே சிம்மா சானமாம் அவளுக்கு ...
நவராத்திரி கவிதைகள் 8

நவராத்திரி கவிதைகள் 8

நவராத்திரி கவிதைகள் 8(6/10/19) காலை திருவாரூர் மாலை திருக்கடவூர் கோலங்கள் காணக் கிடைத்ததே – சீலமாய் அங்கே கமலாம்பா இங்கே அபிராமி மங்கலத்தே ஆழும் மனம் . யோகா சனத்தே இருந்தாள் கமலாம்பா ஏகாந்த மாக அபிராமி – ஆகா விழிகண்ட காட்சி விரித்துரைப்பார் யாரோ மொழிகொண்டு சேர்க்குமோ மாண்பு. புற்றிடங் கொண்டார் பொருந்தும் கமலாம்பா மற்றிங் கமுதீசர் மாண்பரசி – குற்றங்கள் நீக்கிடுந் தாயர் நயனக் கனிவன்றோ காக்கும் நமையே கனிந்து. ஆரத்தி நேரம் அவளே ...
More...More...More...More...