காலத்தால் பண்படுதல் மனித நீதி கருணைதான் நீதிக்குள் குலவும் சோதி கோலங்கள் மாறுகையில் திட்டம் மாறும் கொள்கைகள் வளர்கையிலே சட்டம் மாறும் வேலெடுத்து நாட்டியதும் வீரம் அன்று வெண்கொடியைக் காட்டுவதும் விவேகம் இன்று நூலறிவும்…

விதைபோல் கனவு விழுகிறது வெளித்தெரியாமல் வளர்கிறது எதையோ பருகி நிமிர்கிறது என்றேர் வெளியே தெரிகிறது! எண்ணமும் வேர்களில் நீர்வார்க்கும் எத்தனமும் வளர்ச்சியை சரிபார்க்கும் மண்ணில் பெற்றவை உரமானால் மிக நிச்சயமாய் பூப்பூக்கும்! ஒவ்வெர்ரு பருவமும்…

படையோடு நடைபோடு படையோடு நடைபோடு வாழத்தானே பூமிக்கு வந்தோம் வெற்றிகள் குவித்திட ஏதுதடை தோழா நாமும் தோற்பதும் இல்லை தொடர்ந்து நடக்கும் நமதுபடை பாதையின் தடைகள் யாவும் கடந்து தோள்கள் தட்டி நடைபோடு வேதனை…

முகிலின் கனவுகள் மழையானால் மழையின் கனவுகள் நதியானால் அகலின் கனவுகள் ஒளியானால் அகமே உந்தன் கனவென்ன? யாழின் கனவுகள் ஸ்வரமானால் ஸ்வரங்களின் கனவுகள் இசையானால் வாழையின் கனவுகள் கன்றானால் வாழ்வே உந்தன் கனவென்ன? கடலின்…

குமுறிய மனங்களில் பிறந்தவைதான் குறிக்கோள் தொடுகிற வேகம் சமுத்திரம் கொடுத்ததை சுமந்ததில்தான் கொட்டி முழக்குது மேகம் அமைதியைப் புரட்டிடும் சம்பவங்கள் அவற்றிலும் நன்மைகள் நேரும் நிமிடங்கள் கடக்கும் பொறுமையில்தான் நினைத்தவை நிஜமாய் ஆகும். பூமியில்…

ஆயிரம் கனவுகள் அணிவகுக்கும் & நீ ஆணை பிறப்பிக்கக் காத்திருக்கும்! பாய்கிற குதிரையைத் தூங்கவிட்டால் & அது பாரம் சுமப்பதை மறந்திருக்கும்! ஓய்வெனும் பெயரில் உன்துடிப்பை & நீ ஓயச் செய்திடக் கூடாது! பாயும்…

எதிர்ப்படும் மனிதர்கள் முகங்களிலே என்னென்ன தெரியுதுதேடுங்கள் புதையல் எடுக்கும் அவசரத்தில் புதிராய்த் திரிவதைப் பாருங்கள் இருப்பதில் சிலபேர் மகிழ்கின்றார் இருந்தும் சிலபேர் அழுகின்றார் சலிப்பில் பலபேர் நடக்கின்றார் சிலர்தான் முழுதாய் வாழ்கின்றார் விந்தை மனிதர்கள்…

பூமியின் ஆயுள் என்னவென்றே -சிலர் புலம்பித் தள்ளிடுவார் சாமியின் ஆயுள் என்னவென்றும் – சிலர் சஞ்சலம் கொண்டிடுவார் ஆமிந்த உலகின் ஆயுளெல்லாம் நாம் ஆக்கும் செயல்களிலே தாமதம் இன்றி செயல்புரிந்தால் அவை தாமாய் நிலைத்திருக்கும்…

நேர்க்கோடுகளாய் நிமிர்ந்த வாழ்க்கையை யாரோ வளைத்தால் அது அகங்காரம்! நீயாய் வளைத்தால் அது அலங்காரம்! வளைந்து கிடந்த வில்லை இராமன் நிமிர்த்த முயன்றான் அதுவரை நியாயம். ஒடித்தான்: என்செய்? அவன் அவதாரம்!! வளைந்து கிடக்கும்…

கடல்

August 12, 2016 0

தனித்தனியாய் நாமொரு துளி துளித்துளியாய் நாமொரு கடல் தனித்தனியாய் நாமொரு கனி கனி கனியாய் நாமொரு வனம் தனித்தனியாய் அனுபவங்கள் தொகுத்துவைத்தால் சரித்திரங்கள் தனித்தனியாய் சம்பவங்கள் தொகுத்துச் சொன்னால் சாதனைகள் தனித்தனியாய் தவத்திலிரு வரம்கிடைத்தால்…