Blog

/Blog

2018 நவராத்திரி 5

மயில்சாயல் கொண்டவளா மங்கை – அந்த மயிலுக்கு சாயல்தந்த அன்னை கயலுக்கு சாயல்தரும் கண்ணால் -இந்த ககனத்தைத் தான்படைத்தாள் முன்னை புயல்சாயல் கொண்டதவள் வேகம்-அந்தப் பொன்வண்ணன் விழிபடரும் மோகம் முயல்கின்ற தவத்தோடே ஒளிர்வாள் – அவள் முன்புவர மாட்டாமல் ஒளிவாள் பிறையொன்று சிரங்கொண்ட பிச்சி -கதிர் பொன்திலக மாகவொளிர் உச்சி முறையெல்லாம் அவள்தானே படைத்தாள்-அதை முந்திவரும் பக்தருக்காய் உடைத்தாள் கறைக்கண்டன் செய்தவத்தின் வரமாய்-அந்தக் காங்கேயன் கைவேலின் உரமாய் தந்திமுகன் தாய்தானே திகழ்வாள் – இங்கு தினந்தோறும் விடியலென ...

2018 நவராத்திரி 4

குளிரக் குளிர குங்குமம் கொட்டி மலர மலர மாலைகள் கட்டி ஒளிர ஒளிர தீபம் ஏற்றினோம்- தளரத் தளர பொங்கலும் வைத்து தழையத் தழையப் பட்டையும் கட்டி தகிட தகிட தாளம் தட்டினோம் குழையக்குழைய சந்தனம் இட்டு கனியக் கனிய கனிகளும் வைத்து உருக உருக கைகள் கூப்பினோம் வருக வருக வாலை நீயே தருக தருக ஞானம் தாயே சுடர சுடர சூடம் ஏற்றினோம் கருகும் கருகும் வினைகள் எல்லாம் பெருகும் பெருகும் நலன்கள் எல்லாம் ...
2018 நவராத்திரி-3

2018 நவராத்திரி-3

சிறகுலர்த்தும் ஒருபறவை அலகு – அதன் சிற்றலகின் நெல்லில் அதன் உலகு திறந்திருக்கும் வான்வழியே பயணம்- பின் தருவொன்றில் தன்கூட்டில் சயனம் மறப்பதில்லை தன்னுடைய பாதை-அது மொழிபேசத் தெரியாத மேதை அறிவுக்கும் அறியாத யுக்தி-அதை அறிந்தாலோ அதன்பெயரே சக்தி பாறைக்கு நடுவினிலே முளைக்கும்- அந்த பறவைதின்ற கனியிருந்த விதையும் சூறைக்கு நடுவினிலும் துளிர்க்கும்-அது செடியாகி மெல்லமெல்ல நிமிரும் வேறொருநாள் வருமந்தப் பறவை-புது விருட்சத்தின் கிளைதேடி அமரும் மாறுமிந்த காட்சிகளின் யுக்தி-அதன் மூலம்தான் அன்னைபரா சக்தி அண்டத்தில் சிறுதுகளின் ...
2018 நவராத்திரி-2

2018 நவராத்திரி-2

வீணைநாதம் கேட்குதம்மா வெட்ட வெளியிலே வெள்ளிச் சலங்கை குலுங்குதம்மா வானவெளியிலே காணக் காண லஹரியம்மா உனது சந்நிதி காதில்சேதி சொல்லுதம்மா கொஞ்சும் பைங்கிளி ஆரவாரம் செய்யத்தானே அழகுராத்திரி அன்னைமுன்னே ஒன்பதுநாள் ஆடும்ராத்திரி பாரமெல்லாம் தீரத்தானே சக்தி சந்நிதி பாதத்திலே போய்விழுந்தால் பெரிய நிம்மதி வேப்பிலையும் இனிக்குதடி வேதநாயகி வேண்டும்வரம் நீகொடுப்பாய் லிங்கபைரவி காப்பதற்கு நீயிருக்க கவலை ஏதடி காலகாலன் ஆசைவைக்கும் காதல்நாயகி ஆதியோகி மேனியிலே பாதியானவள் ஆலமுண்ட கண்டனுக்கு அமுதமானவள் நீதியாகி ஜோதியாகிநிமிர்ந்து நின்றவள் நீளும்வினை மாளும்படி ...
2018 நவராத்திரி 1

2018 நவராத்திரி 1

பூடகப் புன்னகை என்னமொழி- அவள் பூரண அருளுக்கு என்ன வழி? ஆடகத் தாமரைப் பதங்களிலே- சுகம் ஆயிரம் உண்டென்று சொல்லும் கிளி வேடங்கள் தரிப்பதில் என்னபயன் – இனி வேட்கைகள் வளர்ப்பதில் நீளும்பழி நாடகம் யாவையும் நடத்துகிறாள் -ஒளி நகைதரும் அம்பிகை நுதலின்விழி எத்தனை பீடங்கள் ஆளுகிறாள்-அவள் என்னென்ன ரூபங்கள் காட்டுகிறாள் புத்தம் புதிய விடியலிலே -அவள் புல்லிடைப் பனியென மின்னுகிறாள் வித்தகி இவளெனத் தொடக்குனிந்தால் – அவள் வெய்யில் வெளிச்சமாய் ஓங்குகிறாள் நித்தம் கவிகிற காரிருளில்-அவள் ...

அபிராமி அந்தாதி – 15

எளிதில் காணலாம் அவளை ஒரு பெரிய மனிதர் இருக்கிறாரென்றால் அவரைக்காண வெவ்வேறு நோக்கங்களுடன் வெவ்வேறு விதமான ஆட்கள் வருவார்கள். அந்தப் பெரிய மனிருக்கு சொந்தமாக சில ஆலைகள் இருக்கலாம். கடைகள் இருக்கலாம். அவர் தன் பெற்றோர் நினைவாக ஓர் அனாதை இல்லமும் நடத்திக் கொண்டிருக்கலாம். அவருடைய தொழிற்சாலைகளில் வணிக வாய்ப்பு தேடி சிலர் சந்திக்க வருவார்கள். அவருடைய நிறுவனத்தை நடத்தும் நிர்வாகிகள் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமென்று வருவார்கள். அவரோ நாளின் பெரும்பகுதியை அனாதைக் குழந்தைகளுக்கான விடுதியில்தான் ...
More...More...More...More...