Blog

/Blog

நாள் இன்று

நேற்றின் கிழிசல்கள் தைப்பந்து நாளொன்று மலர்ந்தது இன்றைக்கு காற்றில் எழுதிய கனவுகளைக் கைப்பற்றும் காலம் இன்றைக்கு தள்ளிப் போட்டது போதாதே தயங்கி நின்றதும் போதாதே துள்ளி எழுந்துன் இலக்குகளைத் தொட்டிட முனைந்தால் ஆகாதோ? செந்தளிர்ப் பூக்களில் வண்டமா ஜாதகம் எதுவும் பார்ப்பதில்லை சிந்தையில் தெளிவுகள் இருக்கும்வரை பாதகம் நிகழப் போவதில்லை தீயெனச் சுடர்விடு துணிவோடு தடைகள் சொல்லிட யாரிங்கு? நீயாய்த் தடைகள் எழுப்பாதே நினைத்ததை முடித்திடும் நாள் இன்று! ...

தடையில்லை

மரங்களின் வேர்கள் மண்ணோடு மலர்களின் வாசனை காற்றோடு உறவுகள் இருகட்டும் வாழ்வோடு உணர்வுகள் கலக்கட்டும் வானோடு இப்படி பூமியில் பிறக்கும்வரை இருந்தோம் கருவில் கண்மூடி தொப்புள்கொடியை வெட்டியபின் தானாய் வளர்ந்தோம் உறவாடி உனக்கென உறவுகள் அவசியம்தான் உயர்வுக்கு அலையும் உடனிருக்கும் தனக்கென மட்டும் வாழாதே திசைகள் எட்டும் திறந்திருக்கும் வீடு மட்டும் நீயில்லை வரவும் செலவும் நீயில்லை கூடு பறவையின் இடமில்லை குதித்துக் கிளம்பு! தடையில்லை! ...

நான்கு திசைகளும் நமதாகும்

காற்றே சிறகாய் மாறிய பின்னே கைகளில் வானம் குடியிருக்கும் நேற்றின் வலிகள ஞாபகம் இருந்தால் நேர்ப்படும் எதிலும் சுகமிருக்கும் ஆற்றின் கரையில் ஆடிய நாணல் ஆயிரம் அலைகளைக் கண்டிருக்கும் மாற்றங்கள் எல்லாம் ஏற்கிற உள்ளம் மறுபடி மறுபடி ஜெயித்திருக்கும் மீண்டும் மீண்டும் அலைகளின் நடுவே மீன்கள் துள்ளி விளையாடும் தூண்டில் முனைக்குத் தப்பிய மீன்தான் தொடர்ந்து நீந்தி உறவாடும் நீண்ட வாழ்வே நதியின் பயணம் நின்றால் எல்லாம் தடையாகும் மூண்டெழும் வேகம் வெளிப்படும் நேரம் மூன்று காலங்கள் ...

தட்டித் திறந்துவிடு

பொன்னில் ஒரு கதவு – உன் பாதையைத் தடுத்தாலும் தன்னை மறக்காமல் – அதைத் தட்டித் திறந்துவிடு உன்னை விடப் பெரியோர் -இங்கே உண்மை எதிர்த்தாலும் சின்னத் தயக்கமின்றி – அட சீறி எழுந்துவிடு வீணாய் வம்பெதற்கு -என விலகி யிருந்தாலும் பாணம் சீறிவந்தால் – நீ பாய்ந்து தடுத்துவிடு சண்டையில் பிரியமில்லை -என்று சமநிலை கொண்டாலும் கண்டிடும் தீமைகளை – உன் கால்களில் எற்றிவிடு கேள்விகள் கேட்காமல் – இங்கே கேடுகள் அகல்வதில்லை ஆள்பலம் எதிர்த்தாலும் ...

உன் வாழ்க்கை மாறும்

ஒருவானம் தானே ஒரு வாய்ப்பு தானே உன்வாழ்வை உருவாக்க நீ வா உதவாது சோர்வு! அது இல்லை தீர்வு உரம்கொண்ட நெஞ்சோடு நீ வா? சுருளாத வலிவும் சரியான தெளிவும் சுகம்சேர்க்கும் உன்வாழ்வில் & நீ வா! சுடர்வீசும் கண்கள் சுமைதாங்கும் தோள்கள் சலியாத மனம்கொண்டு நீ வா! இருக்கின்றபோதே ஜெயிக்கின்ற வாழ்வு இதுதானே நாம்காண வேண்டும்! எதிர்ப்பின்றி எதையும் உதிர்க்கின்ற நடையும் இருந்தாலே புகழுன்னைத் தீண்டும்! கருவான கனவு நனவாகும் பொழுது காலங்கள் உன்பேரை கூறும் ...

எது காதல்?

வாழ்க்கை என்பது பனிப்பாறை – அன்பின் வெளிச்சத்தில் கரைந்தால் அது காதல் ஆழ்கிற செயலே தவமாகும் – அதில் அறவே தொலைந்தால் அது காதல் மூழ்கித் துயரில் தொலைபவரை – சென்று மீட்கத் தெரிந்தால் அது காதல் தோழமை இன்றித் துவள்பவரைத் – தொட்டுத் தோளுடன் அணைத்தால் அது காதல் வயதில் கிளர்ச்சியில் வருவதல்ல – இந்த வாழ்வின் மலர்ச்சி அது காதல் முயலும் உறுதியில் தெரிகிறதே – அந்த முனைப்பின் மகிழ்ச்சி அது காதல் உயரும் ...
More...More...More...More...