நிலைநிறுத்து
குவளைத் தண்ணீர் குடித்துக் கிளம்பு குறிக்கோள் நோக்கிச் செல்ல கவலைக் கண்ணீர் துடைத்துக் கிளம்பு கருதிய எல்லாம் வெல்ல தவறுகள் தந்த தழும்புகள் எல்லாம் தத்துவம் சொல்லும் மெல்ல தவம்போல் உந்தன் தொழிலைத் தொடர்ந்தால் தெய்வம் வருமெதிர் கொள்ள பொன்னில் இழைத்த விலங்கென்றாலும் பூட்டப் படுவது வலிதான் தன்னைத் தொலைத்த பாதையில் மீண்டும் தெளிந்து நடந்தால் சரிதான் இன்னும் சரியாய் இருந்து பார்த்தால் இந்த வாழ்க்கை சுகம்தான் என்னவந்தாலும் மாறும் என்றே யாரோ சொன்னது நிஜம்தான். வேருக்குக் ...
ஊற்றுகள் உருவாகும்
வானப் பரப்பிடையே – கரு வண்ணக் கருமுகில்கள் தேனைப் பொழிகையிலே – மணி திமிறிச் சிலிர்க்கிறது ஏனோ கடும்வெய்யில் – என ஏங்கிய ஏக்கம்போய் தானாய் குழைகிறது – விதை தாங்கி மலர்கிறது நேற்றைய கோடைவலி – அதன் நினைவில் துளியுமில்லை தோற்ற வலிகளையேன் – நீ தூக்கிச் சுமக்கின்றாய்? காற்றின் திசைமாறும்- உன் காயங்கள காய்வதற்கு ஊற்றுகள் உருவாகும் – புனல் ஊறிப் பாய்வதற்கு இந்த விநாடியிலே – வாழ்க்கை என்ன கொடுக்கிறது? எந்த முடிச்சுகளை ...
நிலைப்பாய்
வானமுகில் கதைபேசி ஓய்ந்தால் – சொன்ன வார்த்தைசொல்லி சலசலக்கும் ஆறு! தேனீக்கள் கதைபேசி ஓய்ந்தால் – நல்ல தேன்துளிகள் சேமிக்கும் கூடு கானங்கள் கதைபேசி ஓய்ந்தால் – அந்த காருண்யம் சுமந்திருக்கும் காற்று மனிதர்கள் கதைபேசி ஓய்ந்தபின் – அங்கே மண்ணுக்கு ஏதுபயன் கூறு? நேரங்கள் தின்னும்வீண் பேச்சு – அதை நிறுத்திவைத்தால் பெருகிவரும் ஆக்கம் பாரங்கள் சுமந்திருக்கும் நெஞ்சே – வீண் பேச்சைநீ குறைத்தால்தான் ஊக்கம் யாராரோ ஏதேதோ செய்தால் – அட ஏனுனக்கு அதுபற்றி ...
புதிய கணம்
சிறகுகள் இருந்தும் என்னபயன் – அந்த சேவல்பறக்க மறந்துவிட்டால் உறவுகள் இருந்தும் என்னபயன் – உன் உணர்வுகள் மதிக்க மறந்துவிட்டால் பிறவி எடுத்தும் என்னபயன் – நீ பயனுற வாழ மறந்துவிட்டால் மறதி இருந்தும் என்னபயன் – நீ மனதில் குப்பைகள் சுமந்திருந்தால் வந்ததன் நோக்கம் உன்னுள்ளே – நீ வேட்டை நடத்திக் கண்டுபிடி எந்திர தினங்களை நடத்தாமல் – நீ எழுதினம் புதுமைகள் செய்தபடி முந்தைய தோல்விகள் மறந்துவிடு – நீ முயற்சியில் புதிதாய்ப் ...
வெற்றி சேரும்
நாற்றுகளின் தலைகலைத்து நடக்கும் தென்றல் நாளைகளின் மெல்லரும்பை சீண்டிப் பார்க்கும் கீற்றுகளைக் கொட்டுகிற முழுவெண் திங்கள் குளத்திலுள்ள அல்லிகளை சீண்டிப் பார்க்கும் நேற்றுகளின் நினைவுகளோ இன்று வந்து நிகழ்கணத்தை மெதுவாக சீண்டிப் பார்க்கும் ஊற்றெடுக்கும் உன்சக்தி என்னவென்றே உருவாகும் சவால்களெல்லாம் சீண்டிப் பார்க்கும் தன்போக்கில் நடக்கின்ற நதிக்குக் கூட தடைகள்தான் உந்துசக்தி யாகும் இங்கே உன்போக்கில் வாழ்வதென்று நினைத்தால் கூட உலகத்தின் போக்குன்ன உந்தித் தள்ளும் மின்போக்கில் போகுமொளி போலே நீயும் முன்னேனேற்றப் பாதையிலே மோகம் கொண்டால் ...
ஈஷா யோக மையம் -சில விளக்கங்கள்
ஆதங்கத்திலும் ஆற்றாமையிலும் வெளிப்படுத்தும் வருத்தங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் அந்த வீச்சிலேயே அபத்தங்களும் அபாண்டங்களும் புகார்ப்பட்டியலில் இடம் பெறும் போது உள்நோக்கம் குறித்த சந்தேகம் எழுகிறது. ஈஷா யோக மையத்தில் தங்கள் மகள்கள் சந்நியாசம் பூண்டது பற்றி புகார் கொடுத்திருக்கும் தம்பதியர் அடுக்கியிருக்கும் குற்றச்சாட்டுகளில்,தங்கள் குழந்தைகள் தங்களுடன் இல்லையே என்னும் ஆதங்கமும் ஆற்றாமையும் நீங்கலாய் எதிலும் உண்மை இல்லை. ” தங்களின் இரண்டு மகள்களை விட5000 குழந்தைகளைக் காக்க வேண்டும்.அவர்களின் சிறுநீரகங்களைத் திருடுகிறார்கள்” என்கிறார். உணர்ச்சி மேலீட்டில் ...