திருக்கடவூர்-10
” இளங்கதிர் ஞாயிறு எள்ளுந் தோற்றத்து விளங்கொளி மேனி விரிசடையாட்டி பொன்திகழ் நெடுவரை உச்சித் தோன்றித் தென்திசை பெயர்ந்தவித் தீவத் தெய்வதம் சாகைச் சம்பு தன்கீழ் நின்று மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற சம்பு என்பாள்-சம்பாபதியினள்” – சீத்தலைச் சாத்தனார் (மணிமேகலை) சம்பாபதித் தெய்வத்தின் திருமுன்னர் கண்கள்மூடி கைகூப்பி நின்றிருந்தான் அந்த இளைஞன்.இருபத்தோரு வயதிருக்கும். முகப்பொலிவு செல்வப் பின்புலத்தையும் முகத்தெளிவு கலையுள்ளத்தையும் காட்டின. காவிரிப்பூம்பட்டினத்தின் தலைசிறந்த தரைவழி வணிகர் மாசாத்துவானின் மகன் ...
திருக்கடவூர்-9
“சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை” – சிலப்பதிகாரம் கடற்காற்றின் குளுமை சதிராடிக் கொண்டிருந்த இளங்காலைப் பொழுதில் திருக்கடவூர் வீதிகளில் கோலமிடத் தொடங்கியது கதிரொளி.வீதிகளெங்கும் மாவிலைகளும் தோரணங்களும் ஒளிபட்டு மின்ன, இன்றென்ன கொண்டாட்டம் என்றறியும் ஆவலில்,தன் தேரை விரைந்து செலுத்தி வந்து நோக்கினான் வெய்யிலோன். சித்திராபதியின் மனையிலிருந்து மெல்லென்றொலித்தன இசைக்கருவிகள்.குழலிசையும் யாழிசையும் இழைந்திருக்க ஒத்தபடி மத்தளமும் அதிர்ந்திருக்க,குடமுழா, இடக்கை கூடி ஒலிக்க நடந்து கொண்டிருந்தது நடன ஒத்திகை. பக்கத்து மனைகளில் தாயர்கள் பிள்ளைகளைத் ...
திருக்கடவூர்-8
ஆமடா குகையொன்று உள்ளே போகும் ஆயிரம்பேர் சித்தரப்பா அதிலிருப்பார் வாமடா காலாங்கி ஐயர் நின்று வல்லவொரு கற்பமெல்லாம் அங்கே தின்றார் ஓமடா எந்தனுக்கும் கற்பம் ஈந்தார் உயர்ந்தவொரு தயிலமெல்லாம் அங்கே ஈந்தார்! -போகர் (போகர் ஜெனன சாகரம்) ஆகாயத்திலிருந்து காணும்போது தாமரைபோல் தோன்றுவதால் அந்த மலைக்குக் கஞ்சமலை என்று பெயர்.சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் உகப்பான திருத்தலம். நீராடப் போயிருந்த குருநாதருக்காக வேகவேகமாய் சோறு சமைத்துக் கொண்டிருந்தார் அந்த சீடர். நடுத்தர வயதிருக்கும். நேரம் நெருங்கிவிட்டதென்ற பதட்டம். அன்னையும் தந்தையும் ...
திருக்கடவூர்-7
வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரமறுப்பர் ஆழி அளிப்பர் அரிதனக்கன்று ஆனஞ்சு உகப்பர் அறமுரைப்பர் ஏழைத் தலைவர் கடவூரில் இறைவர் சிறுமான் மறுக்கையர் பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே! -சுந்தரர் காலனைக் காலால் காய்ந்த காலசம்ஹாரமூர்த்தியின் திருவுருவை தரிசித்ததும் மார்க்கண்டேயருக்கு மகத்தான உண்மையொன்று மனதில் உதித்தது.காசிநகரில் கங்கைக்கரையில் மணிகர்ணிகேசுவரராக விளங்கும் மகேசனின் அம்சமே காலசம்ஹாரர் என்பதைக் கண்டுகொண்டார். தான் திருக்கடவூர் வந்த நாள்முதலாய் கங்கையிடம் வைத்த சங்கல்பமும் ,அந்த சங்கல்பத்துக்கு மதிப்பளித்து திருக்கடவூர் ...
திருக்கடவூர்-6
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற் காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே -திருமூலர் மனக்கவலையின் உச்சத்திலிருந்த மிருகண்டு முனிவரின் உள்ளம், தன் பாட்டனாராகிய குச்சகரை நினைத்தேங்கியது.மிருகண்டு முனிவரின் தந்தை மிருக கண்டூயர். அவருடைய தந்தைதான் குச்சகர். கடகம் எனப்படும் திருக்கடவூரில் வாழ்ந்தவர் அவர்.தன் மகனுக்கு குச்சகர் இட்டபெயரென்னவோ கௌச்சிகர்தான்.பிரம்மச்சர்யப் பருவத்தில் பிரம்மம் தேடிப் பெருந்தவம் மேற்கொண்டார் கௌச்சிகர்.ஊண் மறந்து துயில் மறந்து அசைவிலாத் தவத்திலிருந்தவரைக் கல்லென்று நினைத்து ...
திருக்கடவூர்-5
நான்கு திசைகளையும் நோக்கியிருந்த எண்கண்களும் மூடியிருக்க ஆழ்ந்த தவத்திலிருந்தான் நான்முகன்.படைப்புத் தொழிலின் கருத்தாவாய் பொறுப்பேற்ற காலந்தொட்டு பரமனிடம் ஞானோபதேசம் பெற வேண்டும் என்ற சங்கல்பம் அவனுக்கு. எது எப்படி இருந்தாலும் ஒவ்வொரு நாளும் நான்கு சந்தியா வேளைகளிலும் சிவத்தியானம் செய்ய நான்முகன் தவறுவதில்லை. படைப்புக் கடவுளாகிய தன்னை ,புலர்காலைப் பொழுதில் கதிரவனும் பொன்னந்தி நேரத்தில் சந்திரனும் பணிந்து வணங்கும் போதெல்லாம் சிவத்தியானத்திலேயே ஒன்றியிருப்பான் சதுர்முகன். தன்னை வணங்கும் சூரியனின் பேரொளியோ சந்திரனின் தண்ணொளியோ தீண்ட முடியாத தவப்பெருக்கில் ...