Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

உள்ளே உதிப்பாள் எப்போதும்.. கடம்ப வனமாகிய மதுரை, அங்கே இசைக்கு அரசியாக ராஐ மாதங்கியாக அம்பிகை வீற்றிருக்கிறாள். இமயமலையில் அவள் மயிலாக இருக்கிறாள். குண்டலினி ஆற்றல் நம் மரபில் பாம்பாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. குண்டலினி சீறி எழுந்தாள். அதை யார் கட்டுப்படுத்துவது? பாம்பு மயிலுக்குப் பயப்படும். நம்முடைய குண்டலினி ஆற்றலை நெறிப்படுத்துவதற்காக இமயமலையிலே அவள் மயிலாக இருக்கிறாள். இந்த உலகத்தில் அவளை வெயிலாகப் பார்க்கலாம். உதிக்கின்ற செங்கதிரல்லவா அவள். அதிகாலையிலே பொழுது புலர்கிறது என்றால் பராசக்தி தோன்றுகிறாள் என்று ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

குயிலாய் வருவாள் கூட்டுக்குள் ஊடலைத் தீர்ப்பதற்காக சிவபெருமான் அம்பிகையைப் பணிகிறார். கையிலிருக்கும் நெருப்போடு அம்பிகையைப் பார்க்க போக முடியாது. கங்கை என்னும் இன்னொரு பெண்ணை தலையில் வைத்துக்கொண்டு காலில் விழ முடியாது. எனவே வணங்கும்போது இந்த இரண்டையும் எங்கே மறைத்தார் சிவபெருமான் என்று கேட்கிறார் பட்டர். இப்படி யாராவது தூண்டிவிட்டால்தான் விசாரணைக்கமிஷன் அமைப்பார்கள். அபிராமி பட்டர் அம்பிகையைத் தூண்டி விடுகிறார். தாருகா வனத்து முனிவர்கள் தவம் செய்கிறபோது ஒரு யாகம் செய்தார்கள். அந்த நெருப்பை தன்னுடைய கைகளிலே ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

விழுந்ததால் எழுந்தவர்கள் யாரெல்லாம் அம்பிகையை வணங்கிப் பயன் பெற்றார்கள் என்று அபிராமி பட்டர் ஒரு பட்டியலைச் சொல்கிறார். ஆதித்தன் என்றால் சூரியன், அம்புலி என்றால் நிலவு. அங்கி என்பது அக்கினியைக் குறிக்கும் குபேரன், அமரர் தங்கோன் என்பது இந்திரன், தாமரையில் வீற்றிருக்கக்கூடிய பிரம்மன், தாமரை என்பது அவனுடைய அலுவலக இருக்கை, தொழில் எப்போதெல்லாம் படைப்புத் தொழிலைச் செய்கிறானோ அப்போதெல்லாம் அம்பிகையின் அருளை அவன் பெற்றுக்கொண்டிருக்கிறான். சூரிய மண்டலத்தில் சூரியப் பிரகாசமாக அம்பிகை இருக்கிறாள். சந்திரனையே தன்னுடைய தாடங்கமாக ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடவுள் வழிபாட்டுக்கு எல்லோருக்கும் நேரம் இருக்கிறதா என்ன? சிலருக்கு தினமும் காலையில் ஸ்ரீவித்யா மந்திரம் சொல்லி மேருவை வைத்து, ஸ்ரீ சக்கரம் வைத்து, பூஜை செய்கிற அளவிற்கு நேரம் இருக்கும். சில பேருக்கு ஒரு நாளைக்கு மூன்று நிமிடங்கள்தான் மொத்த வழிபாட்டு நேரமாக இருக்கும். சிலருக்கு கோவிலுக்குப் போய்வர நேரமிருக்கும், சிலருக்கு முடியாது. சிலர் திருக்கடையூரைப் பற்றிக் கேள்விப்பட்டிப்பார்கள், போவதற்கான வாய்ப்பு வந்திருக்காது. இப்படி பலவிதமான சூழ்நிலைகள் இருக்கும். அல்லி மலரிலே வீற்றிருக்கக்கூடியவளாக, ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

நன்மையும் தீமையும் உண்டோ? பட்டர் அந்தாதி பாடினார். நிலா உதித்தது, நிலா உதிக்காமல் போயிருந்தால் பட்டர் என்ன செய்திருப்பார்? அந்தாதி பாடியிருப்பார். அவருக்கு நல்லதும் கிடையாது, தீமையும் கிடையாது. இந்த ஒன்றரை வரியில் ஓர் அற்புதத்தை அபிராமி பட்டர் செய்கிறார். வாழ்க்கை என்பது வயல் போன்றது. கருணை மேகமாய் வந்து அருள் மழையைப் பொழிகிறது. நல்ல பயிர்கள் முளைக்கின்றன. கூடவே களைகளும் முளைக்கின்றன. நல்ல பயிரை நமக்கு கடவுள் விளைவித்துக் கொடுத்த தெல்லாம் மறந்துவிடுவோம். நாலு களையைக் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

என்ன வேடிக்கை இது! அம்பிகையின் திருநாமங்களைப் பயன் கருதியே சொல்கின்ற நிலையைத் தாண்டி நிபந்தனையற்ற ஈடுபாடும், பக்தியும் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாவற்றையும் தருகிறாள் என்பதற்கு அபிராமி பட்டரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு. அம்பிகையுடைய திருவுருவத்தை எழுதிகாட்டிக்கொண்டு வருகிற பட்டர், இந்த இடத்தில் நிறுத்தி ஒரு நிமிடம் யோசிக்கிறார். அவளுடைய உருவத்தை நாம் உள்ளத்தில் பதிப்பதெல்லாம் இருக்கட்டும். உள்ளபடியே இந்த உருவம்தானா அம்பிகை என்றொரு கேள்வியைக் கேட்கிறார். அவள்தான் இந்தப் பிரபஞ்சத்தையே படைத்தாள். அவளுடைய தனங்கள் தாமரை ...
More...More...More...More...