Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

தென்காசியில் ரசிகமணி டி.கே.சி.விழா.அவருடைய இல்லமாகிய பஞ்சவடியில் அவர்தம் பெயரர்கள் திரு.தீப.நடராஜன்,திரு.தீப. குற்றாலலிங்கம் ஆகிய பெருமக்களின் அன்பு விருந்தோம்பலில் திளைத்துக் கொண்டிருந்தோம்.ராஜாஜி,ஜஸ்டிஸ் மஹராஜன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் வித்வான்.ல.சண்முகசுந்தரம் போன்ற பெரியவர்கள் அமர்ந்து கலை இலக்கியங்களை அனுபவித்த சந்நிதானம் அது. கலை இலக்கிய ரசனையில் டி.கே.சி. என் ஆதர்சம்.கம்பனில் பல மிகைப்பாடல்களைஅடையாளம் கண்டதுடன் சில திருத்தங்களையும் செய்திருக்கிறார். அதனால் வாழுங்காலத்திலும் சரி அதன்பின்பும் சரிசில விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார்.கம்பனில் மட்டுமின்றிபல இலக்கியங்களிலும் அவருடைய கைவண்ணம் உண்டு. இடைச்செருகல்,பாடபேதம் போன்ற சாபங்களால் கல்லாய்ப்போன ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

ஒரு மனிதனின் வாழ்வில் எது புண்ணியம் என்ற கேள்விக்கு அபிராமிபட்டர் வழங்கும் பதில் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில்தான்எத்தனை பொருத்தம்! ஒரு மனிதன்,தான் விரும்பியதை வாழ்வில் செய்வதும், அதே மன அதிர்வலையில் இருப்பவர்களுடன் உறவில் இருப்பதும்தான் அவன் மிகுந்த புண்ணியம் செய்தவன் என்பதற்கான அடையாளம். இன்று பலருக்கும் நினைத்த நினைப்புக்கும் படித்த படிப்புக்கும் சம்பந்தமில்லை. இன்னும் பலருக்கோ படித்த படிப்புக்கும் கிடைத்த பிழைப்புக்கும் சம்பந்தமில்லை. நினைப்புக்கும் நிதர்சனத்துக்கும் பாலம் கட்ட முடியாத பரிதவிப்பிலேயே பலருக்கும் வாழ்க்கை முடிந்து விடுகிறது. ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

அந்தாதியில் அம்பிகையின் திருமுலைகள் பற்றிய குறிப்புகள் ஏராளமான இடங்களில் தென்படுகின்றன. அவை பிரபஞ்சத் தாய்மையின் பெருஞ்சின்னங்கள். பரஞானம் அபரஞானம் ஆகியவற்றின் அடையாளங்கள். அம்பிகையின் அளப்பரிய கருணைப் பெருக்கத்தின் குறியீடுகள். அதன் பேரருட்தன்மையைத் தாங்கும் திறன் யாருக்கும் இல்லாததால் அவள் உண்ணாமுலை யம்மை என்று குறிக்கப்படுகிறாள். அன்னையின் திருமுலைப்பாலை அவளே குழைத்து ஊட்டி ஞானக்குழந்தைகளை உய்விக்கிறாள். அன்னையின் திருமுலைகள் கருத்திருக்கின்றன. சிவபெருமானின் திருவிழிகளை ஒத்திருக்கின்றன. இங்கொரு கேள்வி எழலாம். சிவபெருமானுக்கு மூன்று திரு விழிகளாயிற்றே! அதிலும் ஒரு பொருத்தம் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

கடையும் மத்தும் கடையூர்க்காரியும் —————————————————————– பால்போன்றதுதான் உயிர் .அதில்விழும் வினைத்துளிகளில் உயிர் உறைந்து போகிறபோது வந்து கடைகிறது மரணத்தின் மத்து.மரணம் மட்டுமல்ல.மரணத்துக்கு நிகரான எந்த வேதனையும் உயிரை மத்துப்போல்தான் கடையும். சீதையைப் பிரிந்து இராமன் உற்ற துயரை அனுமன் சீதைக்குச் சொல்லும்போது “”மத்துறு தயிரென வந்து சென்றிடைத் தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுற பித்து நின் பிரிவினிற் பிறந்த வேதனை” என்கிறான். குளிர்ந்த தயிரை மத்தால் கடைந்தால் துனி பறக்கும்.ஆனால் உயிராகிய தயிர் கடையப்படுகிறபோது புலன்களில் நெருப்புப் ...

அபிராமி அந்தாதி- வாழ்வில் நிரம்பும் வசந்தம்

கடலைக் கடைந்ததே வேண்டாத வேலை! திரிபுரங்களை ஆள்பவள் திரிபுரசுந்தரி.மனிதனின் உடல் மனம் உயிர் ஆகிய முப்புரங்களையும் அவளே ஆள்கிறாள். இந்த முப்புரங்களிலும் உள்ளும் புறமுமாய்ப் பொருந்துகிற அபிராமவல்லியின் திருமுலைகள் செப்புக்கலசங்களைப் போன்றவை. தனபாரங்களால் அம்பிகையின் இடைகள் வருந்துகின்றன. சைவசித்தாந்தத்தில் அம்பிகைக்குத் தரப்பட்டிருக்கும் மிக முக்கியமான திருநாமம் மனோன்மணி. நெற்றிப் புருவங்கள் நடுவிலான பீடம்அவளுடையது.மனவுறுதிக்கும் மேம்பட்ட ஆத்மசாதனைக்கும் அவளேஅதிபதி.கடலின் அலைகள் சலசலக்கின்றன.நடுக்கடல் சலனமில்லாமல் இருக்கிறது. சலனம் கடந்த மனவுறுதியை தியானத்தினாலோ ஞானத்தினாலோ அருள்பவள் மனோன்மணி. அவள் ஆற்றிய காரியம் ...

அபிராமி அந்தாதி- வாழ்வில் நிரம்பும் வசந்தம்

ஞானிகளுக்கு கல்வி தேவையில்லை. நாம் வாசிக்கும் அளவு அவர்கள் வாசிக்கிறார்களா என்பது கூட ஐயமே.ஆனால் நாம் நினைத்தும் பாராத பல நுட்பங்கள் அவர்களுக்குப் புரிபடுகின்றன.காணாதன காண்கிறார்கள்.காட்டாதன காட்டுகிறார்கள். ஒரு நூலைப் புரட்டிய மாத்திரத்தில் அதன் உட்பொருள் இன்னதென உணர்த்துகிறார்கள். ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஒருமுறை சொன்னார்,”ஒரு புத்தகத்தைப் புரட்டிய மாத்திரத்தில் அதை எழுதியவரின் மனம் எத்தகையதென்று பிடிபடுகிறது.அந்த மனத்திலிருந்து என்ன வெளிவரும்என்று தெரியுமாதலால் அதை முழுவதும் படிக்காமலேயே அதில் என்ன இருக்கிறதென்று தெரிந்து ...
More...More...More...More...