தோள்கள் தொட்டுப் பேசவா 4
கனவுகள் பிறக்காத இதயம் என்பது கண்கள் திறக்காத சிலையைப் போன்றது. உறக்கத்தில் சில கனவுகள் பிறக்கும். அவை விழிக்கும் முன்னரே விடை பெற்றுக்கொள்ளும். விழிப்பு நிலையில் வருகிற கனவுகள், செயல்வடிவம் பெற்று வெற்றியை எட்டும். கனவுகள், உற்சாகத்தின் ஊற்றுக்கண்கள். களைப்பும் சலிப்பும் அண்டவிடாமல், மனதைக் காக்கும் மந்திரத் திரைகள். ” நடக்க முடியுமா” என்று தவிக்கும் மனிதனுக்கு, ”பறக்க முடியும் பார்” என்று சிறகுகளைப் பரிசளிப்பவை கனவுகள். குடிசையில் வாழும் கதாநாயகன், மாளிகையை ஆளும் இளவரசியைக் காதலிப்பான். ...
தோள்கள் தொட்டுப் பேசவா-3
ஒவ்வொரு மனிதனின் உள் மனதிலும் உறங்கிக்கிடக்கிறதொரு குழந்தை. அது கட்டாய உறக்கமென்றும் சொல்லலாம். கையாலாகா உறக்கமென்றும் கொள்ளலாம். விளையாட்டுக் குணம் முடங்கியபிறகு, வியாபாரக் கண்ணோட்டம் தொடங்கியபிறகு, தூங்கப் போனது அந்தக் குழந்தை. தனக்குள் இருக்கும் குழந்தையை விழிப்பு நிலையில் வைத்திருப்பவர்கள் ஞானிகளும் குழந்தைகளும். அதனால்தான் ஞானிகளை ” சேய்போல் இருப்பர் கண்டீர் ” என்று பழம் பாடல் ஒன்று பேசுகிறது. கவிஞர்களின் குழந்தை மனதுக்கு நடைமுறை உதாரணங்கள் நிறைய உண்டு. குழந்தைத்தனம் என்பது வாழ்வின் பெரிய வரம் ...
தோள்கள் தொட்டுப் பேசவா? 2
சிலரைப் பொறுத்தவரை, வெற்றியென்பது, வானத்திலிருந்து வருகிற வரம். கடவுள் கொடுக்கிற கொடை. ஜாதகம் செய்கிற ஜாலம். விதியின்மீது பாரத்தைப் போட்டுவிட்டு வீணாக நேரத்தைக் கழிப்பவர்கள், எப்போதும் சாதிக்கப் போவதில்லை. காலமும் இடமும் கருதிச்செய்வது வெற்றிக்கு வழியென்று வள்ளுவர் சொல்கிறார். ஆனால்,காலம் வருமென்று வெறுமனே காத் திருப்பவர்கள் வாழ்வில், புதுமைகள் பூப்பதில்லை. வெற்றியாளர்களின் வரலாற்றிலெல்லாம் ஓர் ஒற்றுமையை உணர முடியும். சாதிப்பதற்கு சம்பந்தமேயில்லாத சூழலில் பிறந்து வளர்ந்து, சாதனையை சாத்தியமாக்கிக் கொண்டவர்கள் தான் அனைவரும். விரட்டும் வறுமை, மிரட்டும் ...
தோள்கள் தொட்டுப் பேசவா? 1(சுறு சுறு சுயமுன்னேற்றத் தொடர்)
எட்டிப்பிடிக்கும் தூரத்தில்தான் எல்லா வசதிகளும், ஆனால், தொட்டுப் பேசும் உரிமையில் பலருக்கும் தோழமை வாய்ப்பதில்லை. தோள் தொட்டுப் பேசுவது உறவுக்கும் உரிமைக்கும் அடையாளம். பரிவுக்கும், நட்புக்கும் அடையாளம். தோழனே! உனது தோள்களைத் தொட்டு நான், வாழைத்தண்டுபோல் வழவழப்பான வார்த்தைகள் சொல்ல வந்திருக்கிறேன். வாழைத்தண்டு வயிற்றுக்கு நல்லது. இந்த வார்த்தைகளோ உன் வாழ்க்கைக்கு நல்லது. நாம் ஒவ்வொருவருமே, வாழ்க்கையென்னும் கடலுக்குள்ளே சுழல்கின்ற சூறாவளிதான். நம்மில் சில சூறாவளிகள் கரைகடக்கும் முன்பே வலுவிழக்கின்றன. தடைகளை உடைக்கும் உற்சாகத்தோடு புறப்படும் உள்ளங்கள் ...
இரண்டாயிரம் ஆண்டுகள் முன் “இதய தெய்வம்”
ஓர் அரசன் தன் குடிகளை சரியாகப் பராமரித்து காப்பாற்றினால் அவர் குடிமக்களுக்கு கடவுள் போன்றவர் என்பதை திருவள்ளுவர் முன்மொழிந்தார். “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்(கு) இறையென்று வைக்கப்படும்” என்கிறார். இனியன செய்தால் இதய தெய்வமென்று நேரடிப் பொருள் எடுக்க வாய்ப்பான திருக்குறள். பொதுவாகவே ஆட்சியாளர்கள் ஆண்டவனின் அம்சமாகக் காணப்படுவது வழக்கம். “திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே” என்று ஆழ்வார் பாடுகிறார். இது அரசனை மகிழ்விக்கும் கருதுகோள் அல்ல.அரசனின் கடமையை உணர்த்தும் அணுகுமுறை. எத்தனையோ விதமான மனிதர்களை ...
குழந்தை பாடும் தாலாட்டு
ஒரு குழந்தையின் பார்வையில் ஒவ்வொரு தினமும் தாயிடம் தொடங்கி தாயிடமே முடிகிறது. மூன்று வயதிலேயே திருவருட் தொடர்பும் உமையம்மையின் திருமுலைப்பால் அருந்தும் பேறும் பெற்ற திருஞானசம்பந்தக் குழந்தைக்கு? அம்மே அப்பா என்றழுதபோது அம்மையும் அப்பனுமாய் தோன்றி ஆட்கொண்டனர். திருவருள் பெற்ற புதிதில் பல பதிகளுக்கு தந்தையே தோள்களில் சுமந்தார். பிறகு இறைவன் சிவிகை அனுப்பினான். போதாக்குறைக்கு தந்தை முறை வைத்தழைக்க திருநாவுக்கரசராகிய அப்பரும் வந்து சேர்ந்தார். சம்பந்தக் குழந்தையுடன் அவருடைய தாயார் தலங்கள் தோறும் சென்றார் என்று ...