Blog

/Blog
“குங்குமக் கோலங்கள் கோயில் கொண்டாட…’

“குங்குமக் கோலங்கள் கோயில் கொண்டாட…’

இன்று இளங்காலையில், கோவை பந்தயச்சாலையில் நடை.காதுகளில் இசை ஒலிப்பான் பொருத்தியிருந்தேன். வாணி ஜெயராம் வாரி வழங்கிக் கொண்டிருந்தார். அவருடைய பாடல்கள் நம்மோடு பேசும்.முற்றிலும் புதிய மொழியில், இசையின் புதுப்புது நிறங்களில்… ஒரு பாடலின் நிறைவுக்கும் மறு பாடலின் தொடக்கத்திற்கும் நடுவிலான எதிர்பார்ப்பில் ஒளிர்கிறது எட்டாம் ஸ்வரம். வசீகர ஆலாபனைக்குப் பிறகு வெய்யிற்கீற்றாய் வருகிறது பல்லவி… “குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட கோதை நாயகன் வருவானடி கோடிக் காலங்கள் நான் தேடி நின்றேன் அவனை அறிவேனடி குங்குமக் கோலங்கள் ...
சஷ்டி நாயகன் சண்முகன்.3.குரு முருகன்

சஷ்டி நாயகன் சண்முகன்.3.குரு முருகன்

குழந்தைகள் உலகம் நல்லறங்களால் நிறைந்தது. பிள்ளைகளுக்கு ஏற்படும் முதல் அதிர்ச்சியே பெரியவர்கள் பொய் சொல்வார்கள் என்பதுதான்.பச்சை விளக்கு வருமுன் சீறிக்கிளம்பும் வாகனங்களை,வெளிப்படையான விதிமீறல்களை ஒரு குழந்தை தெய்வக் கண்கொண்டு,கண்டு மிரள்கிறது. குழந்தைகளும் தெய்வங்கள் என்பது இதனால்தான்.இப்படி இருக்கும்போது தெய்வக் குழந்தைகளின் உறுதிப்பாட்டை கேட்கவா வேண்டும்.எதையும் தொடங்கும் முன்னர் விநாயகரை வணங்க வேண்டும் என்பது மரபு.திரிபுரங்களை எரிக்கக் கிளம்பிய சிவபெருமான் அந்த விதியி மீறுகிறார்.உடனே விநாயகர் அவருடைய தேரின் அச்சினை தூள்தூளாக்குகிறார். ‘முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது ...
சஷ்டி நாயகன் சண்முகன்.2.குழந்தை முருகன்

சஷ்டி நாயகன் சண்முகன்.2.குழந்தை முருகன்

தனித்தனியாய் சரவணப் பொய்கையில் வளர்ந்த குமர குமாரர்களை பராசக்தி அரவணைக்க ஒன்றான திருவுரு,கந்தன் என்னும் வடிவமாய் கொண்டாடப்படுகிறது. ஆறு திருவுருவங்கள் என்றாலும் ஒரே வடிவமாய் நின்றாலும்,குழந்தைக் குமரனை கொஞ்சித் தீர்க்கிறது தமிழ்.”சின்னஞ் சிறுபிள்ளை,செங்கோட்டுப் பிள்ளை சிவந்த பிள்ளை” என உச்சி முகர்கிறது. சைவ மரபில், பிள்ளையார் என்றால் முருகனைத்தான் குறிக்கும். மூத்த பிள்ளையார் என்றால்தான் விநாயகரைக் குறிக்கும். எல்லா தெய்வங்களுக்கும் பிள்ளைத் தமிழ் எழுதப்பட்டாலும்,அது வெகுவாகப் பொருந்துவது முருகனுக்குத்தான்.முருகனைப் பற்றியே எத்தனையோ பிள்ளைத் தமிழ் நூல்கள் எழுதப்பட்டிருந்தாலும் ...
சஷ்டி நாயகன் சண்முகன் 1-பாலமுருகன்

சஷ்டி நாயகன் சண்முகன் 1-பாலமுருகன்

“சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்”எனும் முதுமொழியின் நாயகன் கந்தன். பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் சஷ்டியில் நோன்பிருந்து மகப்பேற்றுக்கு உரியவர்கள் ஆவது தொடங்கி மனமாகிய பையில் அருள் சுரக்கும் என்பது வரை பல தாத்பர்யங்கள் இதிலே அடக்கம். மன்மதனை எரித்த நெற்றிக்கண் வழி முருகன் உதித்தான் என்பது காமத்தை அழித்தால் ஞானம் பிறக்கும் என்பதன் குறியீடு  என்பாரும் உளர். எல்லாவற்றையும் விட முக்கியம்,முருகன் அவதரிக்கவில்லை என்பதுதான்.குறிப்பிட்ட சங்கல்பத்திற்காக, எங்கும் நிறைந்திருக்கும் ,எல்லாமாகவும் பொலிந்திருக்கும் பரம்பொருள் வடிவுகொண்டு தோன்றியது. அருவமும் ...
பின்வாசல் வழிவந்த ஶ்ரீபதி பத்மநாபா

பின்வாசல் வழிவந்த ஶ்ரீபதி பத்மநாபா

கோவையில் புகழ்பெற்ற கிறிஸ்துவக் கல்வி நிறுவனம்,நிர்மலா மகளிர் கல்லூரி.பத்தாண்டுகளுக்கு முன்னர், ஒருநாள் அந்த வளாகத்துக்குள் பரபரப்பாக பின்வாசல் வழியாக நுழைந்தார் ஶ்ரீபதி பத்மநாபா.அங்குமிங்கும் பார்த்தபடி அவர் வரவும் அவரை நோக்கி வேகமாக வந்தார் ஒரு பாதிரியார். பின்வாசல் வழியே வந்தது தவறோ  என இவர் தயங்கி நிற்க அருகே வந்த பாதிரியார் உரத்த குரலில் கேட்டார், “என்ன ஶ்ரீபதி! எப்படி இருக்கீங்க?”ஶ்ரீபதிக்கு அதிர்ச்சி. பாதிரியாரை அடையாளம் தெரியவில்லை.அதேநேரம் எங்கோ பார்த்தது போலவும் இருந்தது.சில விநாடிகளிலேயே அடையாளம் தெரிந்து ...
ஏற்றாத தீபத்தும் எரிகின்ற ஜோதி!

ஏற்றாத தீபத்தும் எரிகின்ற ஜோதி!

கண்ணனைப் பற்றிய கவியரசர் கண்ணதாசனின் வரிகளில் இதுவும் ஒன்று. வள்ளலார் தண்ணீரில் விளக்கெரித்த வரலாறு நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.தான்சேன் இசையால் விளக்கில் ஒளிகொண்ர்ந்ததும் நாம் அறிந்ததே. ஆனால் “ஏற்றாத தீபத்தும் எரிகின்ற ஜோதி”என்னும் வரியில் சூட்சுமமாய் சுடரும் தொனிப்பொருள், கவிஞர் உத்தேசித்து எழுதியதாகவும் இருக்கலாம். வந்து விழுந்ததாகவும் இருக்கலாம். இறைவன் முன் ஏற்றப்படும் ஒரு சுடர், நெருப்பென்னும் பெரும்பூதம் இறை சந்நிதியில்கட்டுப்பட்டிருப்பதை உணர்த்துகிறது. நெருப்பு பயன்பாட்டுக்கேற்ப பல்வேறு பெயர்களைக் கொண்டிருப்பது தமிழின் மொழிவளத்தை உணர்த்துகிறது. தழல்,கனல் போன்ற சொற்களில் ...
More...More...More...More...