அந்த விமானம் கிளம்பட்டும்
உறுமிக் கிளம்பி ஓடு தளம் ஓடி திரும்பி நகர்ந்து திடுமென்று விசைகொண்டு மெல்ல எழும்பி முன்சக்கரம் உயர்த்தி செல்லும் விமானமது ‘ஜிவ்’வென்று பறக்கட்டும்; உள்ளே பரபரப்பும் உயிர்கள் படும் தவிப்பும் மெள்ள சமன்கொள்ள மேலெழும்பும் வேகமுமாய் எத்தனையோ உணர்ச்சிகளை ஏந்திப் பறக்கட்டும்; புத்தகப் பக்கம்போல் புரள்கின்ற காற்றலையில் எத்தனையோ யுகங்கண்ட ஏகாந்த வெளியின்மிசை தத்துவத்தின் முடிதேடும் தேடலைப்போல் முந்தட்டும்; வந்தவழி இன்னதென்னும் வரைபடமும் காணவில்லை இந்தப் பயணம் எதுவரையோ தெரியவில்லை; வலவன் செலுத்துகிறான் வலம் இடமும் சொல்லாமல் ...
மரபின் மைந்தன் வலைத்தளம் தொடக்கவிழா : கல்யாண்ஜி வாசித்த கவிதை
இதயதளம் அனைத்தோடும் இணைப்புள்ள இவனுக்கு இணையதளத் துவக்கவிழா இன்றைக்கா?நாள்திறக்கும் உதயமுதல் அந்திவரை உலகெல்லாம் பொன்னொளிரும் உற்சாக வெயிலுக்கா புதிதாக ஆரத்தி? பிணையவொரு பொங்கரவம் பிறைசூடும் விரிசடையோன் பிள்ளைக்கா இன்றைக்குப் பெயர்சூட்டும் வைபோகம்? துணைவருவோர் சிலநூறு,தொடர்பவரோ பலநூறாய் துலங்குகிற ஒருவனுக்கா தொட்டிலிட்டுத் தாலாட்டு? கங்கையிலே நீச்சலிட்டுக் கரையேறி வந்தவர்க்கா கணினியிலே படகுவிடக் கற்பிக்கப் போகின்றோம்? அங்கையிலே திருக்கடையூர் அபிராமி தந்த தமிழ் அம்பலங்கள் அனைத்திலுமே அரங்கேறி நின்றதன்பின் இங்கெதற்கு அகரமுதல் எழுதுவிக்கும் முதற்பாடம்? ஏடெல்லாம் மறையோதி,ஈசனவன் பெயர்பாடி பொங்கிவரும் ...
அகர முதல எழுத்தெல்லாம்….
அகரம் எனும் எழுத்தில்தான் அனைத்தும் ஆரம்பம். சரியாகச் சொல்வதெனில் “அ” எனும் ஒலியில்தான் அனைத்தும் ஆரம்பம். பிரபஞ்சத்தின் மூலஒலியென மதிக்கப்படுவது பிரணவம். அதன் முதல் பகுதி அகரம்.இந்த விளக்கத்தில் இறங்கினால் அது வேறெங்கோ கொண்டு நிறுத்தும்.அதுவல்ல நான் சொல்ல வந்தது. அ எனும் எழுத்தின் போக்கினை கவனித்தால் அது வாழ்வியல் உண்மையின் வெளிப்பாடாக இருப்பதை உணரலாம். 0 என சுழித்து மேல்நோக்கிக் கிளம்பும் எழுத்து கீழிறங்குகிறது. பின்னர் மேலெழும்பி வலது புறமாய் திசைமாறி செல்கிறது. அப்புறம் ...
பன்முகங்கள்
ஒரு பாரதிக்கு தேசம் பிடிக்கும் ஒரு பாரதிக்கு தெய்வம் பிடிக்கும் ஒரு பாரதிக்கு காக்கை குருவி எல்லாம் பிடிக்கும் ஒரு பாரதிக்கு எழுதுகோல் பிடிக்கும் ஒரு பாரதிக்கு சிறுமை கண்டால் வெறிபிடிக்கும் ஒரு பாரதிக்கு வறுமையிலும் வாழப் பிடிக்கும்.. இந்த எல்லா பாரதிகளையும் காளிக்கு ரொம்பப் பிடிக்கும் ...
அந்த மூன்று பெண்கள்
அந்த மூன்று பெண்களுக்கும் அன்புமட்டும் தெரியும் அந்தமூன்று பெண்களாலே அற்புதங்கள் நிகழும் அந்தமூன்று பெண்கள் பார்க்க அவதி யாவும் அகலும் அந்த மூன்று பெண்களாலே உலகம் இங்கு சுழலும் கலைமகளின் கருணை கொண்டு கல்வி கற்பான் சிறுவன் அலைமகளின்ஆசிபெற்று ஆட்சி கொள்வான் இளைஞன் மலைமகளும் மனது வைத்தால் மேன்மைகொள்வான் மனிதன் விலையிலாத இவர்வரங்கள் வாங்கியவன் தலைவன் சாத்திரங்கள் இவர்கள்புகழ் சாற்றிநிற்கும் நாளும் ராத்திரிகள் ஒன்பதுமே ரஞ்சிதமாய் ஜாலம் மாத்திரைப் பொழுதுகூட மறந்திடாமல் நாமும் காத்துநிற்கும் அன்னையரை கருத்தில்வைத்தால் ...
பிரபஞ்சம் இவளால் வாழும்
சுழலுது சூலம் சுடுங்கனல் வேகம் சுந்தரி சினங்கொண்ட கோலம் மழுதொடும் தேவி மலைமகள் முன்னே மகிஷன் விழுகிற நேரம் தொழுதிடும் தேவர் துயரமும் தீர்வர் தொல்லைகள் தீர்கிற காலம் தழலெனச் சீறும் ரௌத்திரம் மாறும் தாய்மையின் விசித்திர ஜாலம் மர்த்தனம் என்றால் வதைப்பதா? இல்லை மென்மை செய்வது தானே அத்திரம் சத்திரம் ஆடிடும் நாடகம் அரக்கனும் அருள்பெறத்தானே நர்த்தனத் திருவடி சிரசினில் பதிந்திட நடுங்கிய அரக்கனும் விழுவான் எத்தனை யுகங்கள் அன்னையின் பதங்கள் ஏந்தும் பெருமையில் தொழுவான் ...