2016 நவராத்திரி – 4
வாழவைப்பாள் என்னை வெண்முகிலில் ஊஞ்சலிடும் வெண்ணிலவின் தோற்றம் வீணையடு வாணிதரும் வாஞ்சையே‘முன்’ னேற்றம் பண்ணழகில் பரதமெனும் பேரழகில் நாட்டும் பாரதியாள் பேரருளைப் பாடும்தமிழ் காட்டும் பூங்கரத்தில் ஜெபமாலை, புத்தெழுத்துச் சுவடி பொற்கரங்கள் வீணையினை பேரருளாய் வருடி ஓங்காரப் பேருருவாய் ஒய்யார அழகி ஓடோடி! வருவாள்என் உயிரோடு பழகி பூசையிடும் வேளையிலே புன்னகைப்பாள் தேவி பூங்குயிலின் குரல்வழியே புதுமொழியில் கூவி ஆசையில் நடனத்திலும் அவளிருப்பாள் மேவி ஆயகலை அத்தனையும் அவள்குளிக்கும் வாவி அண்டமெல்லாம் படைப்பவனே அவளுடைய கணவன் ஆக்கங்கள் ...
2016 நவராத்திரி – 3
ஆளுவாய் ஆல வாயே! பூடகப் பொய்கள் பார்த்து புன்னகை செய்து கொள்வாய்; நாடகத் திரைகள் எல்லாம் நாயகீ! நீக்கி வைப்பாய்; ஏடகத்து இருப்பாய்; எங்கள் எழுத்தெலாம் அபகரிப்பாய்; ஆடகப் பொன்னே & நீயே ஆளுவாய் ஆல வாயே! செங்கயல் துள்ளும் வையை செந்தமிழ் அரசீ! நின்றன் பங்கயப் பதம்பணிந்தே பலவினை கரைந்து போகும்; மங்கல வதனம் மின்னும் மௌனத்தின் உரையே வேதம்; அங்கயற் கண்ணி நீயே ஆளுவாய் ஆல வாயே; வேணிக்குள கங்கை கொண்ட ...
2016 நவராத்திரி – 2
பாதங்கள் பற்றினால் பாரங்கள் நீக்கிடும் பைரவி சந்நிதானம் பெருநிலம் காப்பவள் திரிசூலம் மின்னிடப் பொலிவோடு நின்ற கோலம் கீதங்கள் ஒலித்திடும் கோயிலின் வாயிலில் கால்வைக்கும் அந்தநேரம் காருண்யரூபிணி காதோரம் “வா” என்று கூப்பிட்ட வாஞ்சை தோன்றும் “ஈதெங்கள் தாயெ”ன்று ஈஷாவின் அன்பர்கள் இதயத்தில் உன்னை வைத்தோம் ஈரங்கள் விழியோடு நீயெங்கள் மொழியோடு என்றேதான் வாழுகின்றோம் நாதனின் இடபாகம் நிற்கின்ற பைரவி நல்லருள் தர வேண்டுமே நவராத்ரி நாயகி! நின்பதம் போற்றினோம்! நீங்காத துணை வேண்டுமே! ...
2016 நவராத்திரி – 1
உன்கையில் உருவான உயிருள்ள பொம்மைகள் உன்போல பொம்மை செய்யும்; ஊர்கூடி சீர்கூடி உல்லாச கொலுவைத்து உன்பேரைப் பாடி உய்யும்; பொன்னள்ளித் தருகின்ற பூரணி! அபிராமி! பொற்பதம் பாடுகின்றோம்; புன்வினை நீக்கிடும் புண்ணியச் சந்நிதி பணிந்திடக் கூடுகின்றோம்; நன்னிலை சேரவே நல்லருள் கூடவே நவராத்ரி ஆரம்பமே! நவகோள்கள் ஆண்டிடும் நவகோண நாயகி நேர்வரும் ஆனந்தமே! இன்னமும் பிறவிகள் இல்லாமல் செய்பவள் இன்றெமைக் காக்க வருக இழையோடும் சுவாசமே ஹிருதய வாசமே! எழில்கொஞ்சம் மீனாட்சியே! ...
ஞானப்பெண்ணே
வானை அளக்கிற ஆற்றலுடன் இன்று வந்தனர் மானிடர் ஞானப்பெண்ணே – தன்னைத் தானும் அளக்கிற ஆற்றலினை -அவர் தேடிடச் சொல்லடி ஞானப்பெண்ணே! உச்ச வரம்புகள் இல்லாமலே – இன்று ஊதியம் காண்கிறார் ஞானப்பெண்ணே அச்சம் சோர்வுடன் துக்கமெல்லாம் – வந்து அண்டாமல் வாழச்சொல் ஞானப்பெண்ணே! நாடு கடக்கிற கல்விகற்றே – இன்று நாளும் பறக்கிறார் ஞானப்பெண்ணே வீடு வருகிறபோதினிலே – அவர் வேதனை கொள்வதேன் ஞானப்பெண்ணே! சற்றும் சிரமங்கள் ஏதுமின்றி – இன்று செல்வங்கள் சேர்க்கிறார் ஞானப்பெண்ணே ...
இன்னும் ஒரு தடவை
முன்னே ஒரு தடவை – உங்கள் முயற்சிகள் தோற்றிருந்தால் இன்னும் ஒரு தடவை – உங்கள் இயக்கம் தொடர்ந்திடட்டும் என்றோ விழுந்தவிதை – அதை எண்ணிக் கிடந்திருந்தால்… இன்னொரு தாவரமாய் – அது எப்படி எழுந்திருக்கும்? முன்னே ஒரு தடவை – உங்கள் மனம் கொஞ்சம் சேர்ந்திருந்தால் இன்னும் ஒரு தடவை – உங்கள் இதயம் மலர்ந்திடட்டும் என்றோ மறைந்த கதிர் – அதை எண்ணிக் கிடந்திருந்தால் இன்றைய கிழக்கினிலே – அது எப்படி உதித்திருக்கும்? முன்னே ...