துளியும் தளராதே
மலிவு விலையில் மண்ணுலகெங்கும் பகைவர்கள் கிடைப்பார்கள்! மிகவும் விரைவாய் மனிதா உன்மேல் பழிசொல்ல நினைப்பார்கள்! தலைகுனியாமல் வாழ நினைத்தால் தடைகள் படைப்பார்கள்! தாண்டி வரும்வழி தெரிந்தவர்தானே சரித்திரம் படைப்பார்கள்! ஊரின் பழிச்சொல் ஒலிக்கட்டுமே உன் உள்ளத்தைக் கேட்டுவிடு! நேர்வழி நடப்பது உண்மையென்றால் & அதில் உறுதிகள் காட்டிவிடு! யாரோ சொல்வதை பாரம் சுமந்து இதயம் நோகாதே! நாளை உன்னை நாடே போற்றும் துளியும் தளராதே! ஆற்றின் போக்கை எதிர்த்துக் கொண்டு மீன்கள் நீந்திவரும்! காற்றின் போக்கை கிழித்துக் ...
பொள்ளாச்சி “சி”ந்தையிலே
சமீப காலமாய், இலக்கியத் துறையில் புத்தெழுச்சி காண்கிறது பொள்ளாச்சி. பூபாலன், அம்சப்பரியா போன்ற கவிஞர்கள் நெறிப்படுத்தும் பொள்ளாச்சி இலக்கிய வட்டமும் இதற்குக் காரணம். மூத்த தலைமுறையில் பூத்த தமிழ்க் குறிஞ்சிகள் பலரின் தமிழ்மணத்தையும் இந்நகரம் தக்க முறையில் தக்க வைத்துள்ளது. குழந்தைகளைப் பற்றி எழுதுவதுபோல் எழுதிக் கொண்டுவந்து, “இருள்கள் வெளிச்சப்படுத்தி விடுகின்றன பெண்ணில் ஒளிந்திருக்கும் ஆண்மையையும் ஆணில் ஒளிந்திருக்கும் பெண்மையையும்” என ஓங்கியடிக்கிற கீதா பிரகாஷ் “பேரிரைச்சலுக்கு அப்பால் சென்று புதிதாய் ஓர் அண்டத்தில் என்னை விழைக்கிறேன்” ...
அ.ச.ஞா. சொற்பொழிவுக்கலை – மரபின்மைந்தன் முத்தையா
(சாகித்ய அகாதெமியும் பொள்ளாச்சி என்.ஜி.எம். கலை அறிவியற் கல்லூரியும் நிகழ்த்திய அமரர்.அ.ச.ஞானசம்பந்தன் நூற்றாண்டு நினைவுக் கருத்தரங்கில் வாசித்த கட்டுரை) தத்துவவ நுட்பங்களையும் தமிழிலக்கியங்கள் முன்மொழியும் விழுமங்களையும், காவியங்களின் கவினுறு காட்சிகளையும் சொற்பொழிவுகள் வழியே மக்கள் மத்தியில் பரவச் செய்த மூத்த முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர், அறிஞர் அ.ச.ஞா. “பெருஞ்சொல் விளக்கனார்” என்று போற்றப்பெற்ற பேரறிஞர் அ.மு.சரவண முதலியார் அவர்களின் திருமகனாகிய அ.ச.ஞா, பிள்ளைப் பருவந்தொட்டு, தத்துவச் செறிவுமிக்க மேடைகளில் ஓடி விளையாடியவர் ஆவார். தூத்துக்குடியில் நிகழ்ந்த சைவசித்தாந்த ...
அறிவு நிரந்தரம்
புல்லாங் குழலில் உள்ளது வெற்றிடம் புதிய ஸ்வரங்கள் பிறந்துவிடும் கல்விக்குப் போகும் குழந்தையின் மனதில் காண்பவை எல்லாம் பதிந்துவிடும்! எழுதாப் பலகை ஆகாயம் என எல்லா விடியலும் சொல்கிறது அழகிய நிலவு விண்மீன் கோள்கள் ஆதவன் எல்லாம் தவழ்கிறது! உள்ளம் திறக்கும் ஒவ்வொரு நொடியும் உனக்குள் மழைவிழும் அறிவாக! வெள்ளம் போலது வளர்ந்து பெருகி வாழ்வை நனைக்கும் நதியாக! படித்து முடித்தேன் என்பது மடமை பட்டம் மட்டும் படிப்பல்ல அடிமனதுக்குள் அனல்விடும் தேடல் அணைந்து போகும் நெருப்பல்ல! ...
உன் பெயர் பதித்திடு
காகிதம் போன்றது நம் மனம் காவியம் கூட எழுதலாம் ஓவியத் தூரிகை நம் மனம் உயிரோவியமே வரையலாம் வெற்றுக் கரியைப் பூசவும் வாய்ப்புகள் உண்டு தோழனே சற்றே கவனம் சிதறினால் செயலின் அடிப்படை மாறுமே! கல்லில் செதுக்கிய சிற்பமாய்க் காரியம் ஆற்றிடத் தோன்றினோம் சொல்லில் செயலில் புதுமைகள் செய்து காட்டிடப் போகிறோம் ஒவ்வொரு நிமிடமும் வாய்ப்புகள் ஒவ்வொரு விதத்தில் கிடைக்கலாம் கல்வி இழுத்திடத் தயங்கினால் கைகளைவிட்டு நழுவலாம் வெற்றிக்கு ஆசைகள் வளர்த்திடு வேட்கையை தவமாய் மலர்த்திடு உற்றிடும் ...
நாளை என்றொரு நாளுண்டு
எல்லாம் புதிதாய்த் தொடங்கவென இன்னொரு வாய்ப்பைத் தேடுகிறோம்; என்றோ செய்த தவறுகளை இன்று திருத்த எண்ணுகிறோம். புதிதாய் முயற்சி தொடங்கிவிட புத்தம் புது நாள் எதற்காக? இதயத்தின் ஆழத்திலும் முழுவிருப்பம் இருந்தால் போதும் நமக்காக! முன்னை விடவும் தெளிவிருந்தால் மன்னிக்கின்ற பரிவிருந்தால் இன்னும் கொஞ்சம் வெளிச்சம் வரும் என்றும் வாழ்வில் மகிழ்ச்சி வரும். மண்ணில் நிகழ்கிற விடியலெல்லாம் மற்றொரு வாய்ப்பை வழங்கத்தான்! எண்ணம் எதுவும் கைகூடும் என்கிற உறுதியை மொழியத்தான்! ஆளைக் கவிழ்க்கிற தோல்விகளும் அடியுடன் வீழ்த்தப் ...