Blog

/Blog

அபிராமி அந்தாதி 3

3. விரலருகாய்….. வெகு தொலைவாய்…. அம்பிகைமீது அன்புச் சதோதரர் இசைக்கவி ரமணன் எழுதிப்பாடும் பாடல்களில் ஒரு வரி… “விரலருகாய் வெகுதொலைவாய் இருக்கின்றாய்.. உன்னை வென்றோம் என்றவர் நெஞ்சில் அமர்ந்து விழுந்து விழுந்து சிரிக்கின்றாய்.” சென்றடையாச் செல்வம் என்று நாயன்மார்கள் இறைவனைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு அதே இறைவன் தொடரும் துணையாய் வந்து கொண்டேயிருக்கிறான். முந்தைய அந்தாதிப் பாடல் அம்பிகையை விழுத்துணை என்கிறது. வழித்துணை, இல்லறத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கைத்துணை, செய்யும் தொழிலில் உதவும் வணிகத்துணை, இவற்றில் பல வழியிலேயே ...

அபிராமி அந்தாதி 2

2. புதிரின் விடைபோலப் புலரும் இளங்காலை பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அபிராமி அந்தாதி விளக்கயுரையின் சுட்டி 2009 ஆம் ஆண்டு. அக்டோபர் மாதம் 15ஆம் நாள். விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் மயிலாடுதுறையிலிருந்து திருக்கடவூர் சென்று கொண்டிருந்தேன். என் நினைவுகள் இருபத்தோராண்டுகள் பின்னோக்கிப் பறந்தன. தொழிலதிபர் திரு.ஏ.சி. முத்தையா அவர்களின் துணைவியார் திருமதி தேவகி முத்தையா அவர்கள் அதிதீவிரமான அபிராமி பக்தை. அபிராமி அந்தாதி குறித்து அவர் மேற்கொண்டிருந்த ஆய்வுநூல் 1988ல் திருக்கடவூர் அபிராமியம்மை சந்நிதியில் வெளியிடுவதாகத் ...

அபிராமி அந்தாதி 1 – வாழ்வில் நிரம்பும் வசந்தம்

பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அபிராமி அந்தாதி விளக்கயுரையின் சுட்டி அபிராமி அந்தாதி 1 – வாழ்வில் நிரம்பும் வசந்தம் அபிராமி அந்தாதி நூலுக்கு விளக்கவுரை பேசி முடியாப் பேரழகு பொன்புலரும் காலைகளிலோ, முன்னந்தி மாலைகளிலோ நெடுந் தொலைவில், ஏதோவோர் ஆலயத்திலிருந்து காற்றில் கலந்துவரும் தெய்வீக கானங்கள் சில நம்மை காலக்கணக்குகள் மறக்க வைக்கும். மற்றவற்றை விட்டு சற்றே விலகி மனம் லயிக்கச் செய்யும். அதற்குமுன் பலமுறை கேட்டிருந்தாலும் முதல்முறை கேட்கும் மலர்ச்சியைத் தரும் பாடல்கள் அவை. அவற்றில் ...

ம.இலெ.தங்கப்பா மரபின் மகத்துவ உயிர்ப்பு

மரபுக் கவிதைகளின் மகத்தான தூணாக விளங்கிய கவிஞர் ம.இலெ. தங்கப்பா அவர்கள் மறைவுக்கென் அஞ்சலி. — ம.இலெ.தங்கப்பா மரபின் மகத்துவ உயிர்ப்பு மரபு சார்ந்த மனம் கட்டுகள் உடைத்துக் ககனவெளியில் எப்போதெல்லாம் சிறகடிக்கின்றதோ, அப்போதெல்லாம் இலக்கிய வெளியில் புதுமைகள் பூக்கின்றன. உயிரின் குரலாய் ஒலிக்கும் அத்தகைய பாடல்கள் புல்லாங்குழலின் மெல்லிய இசையாய்ப் புறப்பட்டுப் புயலாய் உலுக்குகின்றன. “உயிர்ப்பின் அதிர்வுகள்” என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட ம.இலெ.தங்கப்பாவின் கவிதைகள் அத்தகைய அனுபவத்தை வழங்குகின்றன. யாப்பின் கோப்புக் குலையாத இவரது கவிதைகளில் ...

காற்றினிலே கரைந்த துயர் – எம்.எஸ். பற்றி டி.எம்.கிருஷ்ணா

ஆங்கில இதழொன்றில் டி.எம். கிருஷ்ணா எம்.எஸ். பற்றி எழுதிய நெடுங்கட்டுரை ஒன்று அரவிந்தன் மொழிபெயர்ப்பில் சிறுநூலாக வெளிவந்துள்ளது. அதன் தலைப்பு, “காற்றினிலே கரைந்த துயர்.” சங்கீதத்துக்கும் சர்ச்சைக்கும் பெயர் பெற்ற டி.எம்.கிருஷ்ணா, ஓர் இசைக்கலைஞர் தன்னிடம் “எம்.எஸ். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் மோசடி” என்று சொன்னதைப் பற்றிய குறிப்புடன் இந்நூல் தொடங்குகிறது. இந்நூலின் “ஆதார சுருதி” கல்கி சதாசிவத்தின் வருகைக்குப் பின்னால் எம்.எஸ். இசையில் நேர்ந்த மாற்றங்களைக் குறிப்பதாகும். இதனை நூலாசிரியரின் சொற்களிலேயே சொல்ல வேண்டுமென்றால், “சுதந்திரமாகப் ...

ராஜீவ் காந்தி அரசியல் பிரவேசமும் ஓஷோ ஆசிரமமும்

                  ஓஷோ மீது நிகரில்லா பக்தி கொண்ட சேவகியாய் ஓஷோ ஆசிரமத்தின் முதன்மை நிர்வாகியாய் வாழ்ந்த லஷ்மியின் வாழ்வைச் சொல்லும் நூல் THE ONLY LIFE. பெரும் அவமானங்கள், கடும் நோய், கொடும் அடக்குமுறைகள் எனஎது நேர்ந்தாலும் “இது என் குருவின் கருணை” என ஏற்றுக் கொண்ட லஷ்மி,ஓஷோ ஆசிரமம் முதன்முதலுருவான காலங்களில் அதன் வளர்ச்சியில் முழுமையாக ஈடுபட்டவர். பாரதத்தின் அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா ...
More...More...More...More...