Blog

/Blog

பாதை நீள்வது உனக்காக

வானம் உன் செயல்களைப் பார்க்கிறது – அதன் விழிகள் சூரியர் சந்திரராம் கானம் உன்குரல் கேட்கிறது – வரும் காற்றுக்கும் உள்ளன காதுகளாம் ஞானம் உனைத்தொட நினைக்கிறது – இங்கே நிகழ்பவை அதற்கு வாசல்களாம் தானே நீயென நினைக்கிறது – அந்த தெய்வம் என்பதே வேதங்களாம்! உள்ளே எல்லாம் இருக்கையிலே – உன் உள்ளம் அஞ்சுவ தெதற்காக பள்ளம் மேடுகள் இருந்தாலும் -உன் பாதை நீள்வது உனக்காக அள்ளிக் கொள்ள வானமுண்டு – உன் ஆற்றலை அளந்திடு ...
செப்டம்பர்-3 சத்குரு பிறந்தநாள்

செப்டம்பர்-3 சத்குரு பிறந்தநாள்

பல்லவி ———— ஒரு பார்வை….ஒரு புன்னகை உயிரையும் தருவான் சீடன் குருமேன்மை …அறியாமல் குதர்க்கம் சொல்பவன் மூடன் பலர்வாழ்வில் இருள்நீங்க ஒளியாய் வந்தவன் ஈசன்… நலம்யாவும் நமதாக தனையே தருகிற நேசன் சரணம்-1 ———— வான்விட்டு வருகிற தூயநதி பூமியை நனைக்கிற பாகீரதி ஊன்தொட்ட உயிரை நனைக்கிற குருவும் உண்மையில் உண்மையில் ஜீவநதி! பாவங்கள் கரைக்கிற வேகத்திலே கேள்விகள் தீர்க்கிற ஞானத்திலே நதியெனப் பெருகும் குருவின் திருவடி அதுதான் அதுதான் தாயின்மடி! ( ஒரு பார்வை துறைமுகம் ...

உன் பொறுப்பு

கானல் தாகங்கள் உனக்கெதற்கு – உன் கங்கையைத் தேடிப் புறப்படு! கூனல் நினைவுகள் நமக்கெதற்கு – நல்ல கூரிய உணர்வுகள் படைத்திடு! தானாய்க் கிடைப்பது எதுவுமில்லை – நீ தகுதிகள் பெரிதாய் வளர்த்திடு! போனால் வராது பொழுதுதான் – இதைப் பொறுப்புடன் உணர்ந்து செயல்படு! நிச்சயம் ஜெயித்திட வேண்டுமென்று சட்டம் நீட்டிட ஒருவரும் இல்லையே! உச்சம் தொடுகிற தவிப்பன்றி பிற உந்து சக்தியும் இல்லையே! மெத்தைக் கனவில் புரள்வதும் நிச்சயம் நீ செய்யும் முடிவுதான் -அதில் நெருப்பாய் ...

திறக்கும் திசைகள்

ஆயிரம் எரிமலை எரிக்கிற எதையும் அன்பெனும் மழைத்துளி அணைத்துவிடும் காயங்கள் எத்தனை மனம் கொண்டாலும் கனிவே நம்பிக்கை மலர்த்திவிடும் மாயங்கள்ௐ செய்வது மானிட நேயம் மனதில் இதனைப் பதித்துவிடு சாயம் போனவர் வாழ்வினில் நீயே சூரியன் போல உதித்துவிடும்! சோர்ந்தவர் வாழ்வினில் சுடரொன்று கொடுத்தால் சொத்துகள் அழியப் போவதில்லை சேர்ந்தவர் நலனே நம்நலன் அலவோ தனியாய் எவரும் வாழ்வதில்லை தாழ்ந்தவர் உயர்ந்தவர் யாருமில்லை – இதில் தள்ளி நின்றிடத் தேவையில்லை வீழ்ந்தவர் எழுந்திடக் கைகொடு போதும் வாழ்வில் ...

இல்லாத உரிமை

வீணையை உறையிட்டு மூடிவைத்தும் வீணை என்பதை வடிவம் சொல்லும்! பூணும் உறையினுள் வாளிருந்தும் புரிபடும் வாளென்று… பார்த்ததுமே! காலம் வரும்வரை காயாக காலம் கனிந்ததும் கனியாக கோலங்கள் மாற்றும் தாவரங்கள் கூடிச் சுவைத்திடும் பறவையெலாம்! தன்னை வெளிப்பட உணர்த்துதற்கு தருணம் பிறந்திடும் யாருக்கும் உன்னில் உள்ளது என்னவென்றே உணர்ந்திட நாள்வரும் ஊருக்கும்! ஆழ்மனம் கொண்ட தகுதிகள்தான் ஆசைகள் என்று வெளிப்படுமாம் தாழ்வாய் தன்னை கருதாமல் தீயாய் எழுந்தால் ஒளிவருமாம்! ஒவ்வொரு நாளும் சூரியனும் ஒவ்வொரு நேரத்தில் வருகிறது ...

கனியவைப்போம்

உருட்டிய தாயத்தின் எண்ணிக்கை ஒவ்வொரு தடவையும் கலந்துவரும் விரட்டிய பாம்பால் விழுந்தவரும் ஏணியில் ஏறவே பரமபதம்! தோற்பதும் வெல்வதும் தொடருவது தொடக்கத்தில் யாருக்கும் இருப்பதுதான் ஆட்டத்தின் சூட்சுமம் விளங்கிவிட்டல் அதன் பின்னர் வெற்றி தொடர்கதைகள் வீசிய விதைகள் முளைக்குமென்ற விருப்பத்தின் பேர்தான் விவசாயம் ஆசைகள் எல்லாம் விதைத்துவிடு அனைத்தும் ஒருநாள் பயிராகும்! வானம் பார்க்கிற பூமியைப்போல் வாய்ப்புகள் பார்த்தே வாழ்ந்திருப்போம் தானாய் கனியா வாய்ப்புகளைத் தருணம் பார்த்துக் கனியவைப்போம்! வெற்றி நமக்கொரு விருந்தாளி வருத்தி அழைத்தால் வருகைதரும் ...
More...More...More...More...