உயிரின் குணம்
விதைபோல் கனவு விழுகிறது வெளித்தெரியாமல் வளர்கிறது எதையோ பருகி நிமிர்கிறது என்றேர் வெளியே தெரிகிறது! எண்ணமும் வேர்களில் நீர்வார்க்கும் எத்தனமும் வளர்ச்சியை சரிபார்க்கும் மண்ணில் பெற்றவை உரமானால் மிக நிச்சயமாய் பூப்பூக்கும்! ஒவ்வெர்ரு பருவமும் பலம்கொடுக்கும் ஒவ்வெர்ரு விடியலும் ஒளிகொடுக்கும் ஒவ்வெர்ரு முகிலும் துளி கொடுக்கும் ஒவ்வெர்ரு படியாய் வளரந்திருக்கும்! வேர்விடும் வாழ்க்கை நிமிரட்டுமே வேண்டிய உயரம் அடையட்டுமே பார்வையில் பசுமை சிரிக்கட்டுமே பலன்கள் ஒருநாள் பழுக்கட்டுமே! தாவரம் போல்தான் கனவுகளும் தாங்கி வளர்த்தால் வலிமை வரும் ...
படையோடு நடைபோடு
படையோடு நடைபோடு படையோடு நடைபோடு வாழத்தானே பூமிக்கு வந்தோம் வெற்றிகள் குவித்திட ஏதுதடை தோழா நாமும் தோற்பதும் இல்லை தொடர்ந்து நடக்கும் நமதுபடை பாதையின் தடைகள் யாவும் கடந்து தோள்கள் தட்டி நடைபோடு வேதனை வலிகள் யாவும் மறந்து சேர்ந்து நடநீ படையோடு படையோடு நடைபோடு படையோடு நடைபோடு ஆயிரம் ஆயிரம் இலட்சியம் நெஞ்சில் அத்தனை இலக்கும் தொட்டிடலாம் பாய்கிற வேங்கையின் வீரியம் உண்டு வெற்றிக் கொடிநாம் நட்டிடலாம் தகுதிகள் இருக்கு மகுடங்கள் உனக்கு தயக்கங்கள் ஏனோ ...
உந்தன் கனவென்ன?
முகிலின் கனவுகள் மழையானால் மழையின் கனவுகள் நதியானால் அகலின் கனவுகள் ஒளியானால் அகமே உந்தன் கனவென்ன? யாழின் கனவுகள் ஸ்வரமானால் ஸ்வரங்களின் கனவுகள் இசையானால் வாழையின் கனவுகள் கன்றானால் வாழ்வே உந்தன் கனவென்ன? கடலின் கனவுகள் முத்தானால் நித்திலக் கனவுகள் ஒளியானால் மடலின் கனவுகள் பதிலானால் மனமே உந்தன் கனவென்ன? தோணியின் கனவுகள் துடுப்பானால் துடுப்பின் கனவுகள் திசையானால் காணிநிலம் கவி கனவானால் கூறக உந்தன் கனவென்ன? எல்லார் மனதிலும் கனவுண்டு கனவுகள் அனைத்துக்கும் வடிவுண்டு சொல்லாக் ...
வென்ற பின்னாலும் தேடு
குமுறிய மனங்களில் பிறந்தவைதான் குறிக்கோள் தொடுகிற வேகம் சமுத்திரம் கொடுத்ததை சுமந்ததில்தான் கொட்டி முழக்குது மேகம் அமைதியைப் புரட்டிடும் சம்பவங்கள் அவற்றிலும் நன்மைகள் நேரும் நிமிடங்கள் கடக்கும் பொறுமையில்தான் நினைத்தவை நிஜமாய் ஆகும். பூமியில் தோன்றிய தெய்வங்களும் பாரங்கள் சுமந்தன பாவம் சாமிகள் என்கிற போதினிலும் சாமானியராய் வாழும் ஆமையின் ஓடாய் மனமிருந்தால் ஆயிரம் தயக்கங்கள் சூழும் நாமந்த வானாய் விரிதிருந்தால் நாளும்விடியல்கள் சேரும் கிழக்கா மேற்கா எனும்திகைப்பு கதிரவன் கொண்டதும் இல்லை வழக்குகள் ஆயிரம் வளர்ப்பதுதான் ...
பாதை வகுக்கப் போராடு!
ஆயிரம் கனவுகள் அணிவகுக்கும் & நீ ஆணை பிறப்பிக்கக் காத்திருக்கும்! பாய்கிற குதிரையைத் தூங்கவிட்டால் & அது பாரம் சுமப்பதை மறந்திருக்கும்! ஓய்வெனும் பெயரில் உன்துடிப்பை & நீ ஓயச் செய்திடக் கூடாது! பாயும் நதியெனப் புறப்படு நீ & உன் பாதையை வகுத்திடப் போராடு! பாதம் பதிக்கும் உறுதியிலே & உன் பாதையின் பள்ளங்கள் மாறிவிடும்! தேசங்கள் ஏதும் நிகழ்ந்தாலும் & உன் செயலில் காயங்கள் ஆறிவிடும்! வீதிகள் யாரோ வகுத்ததுதான் & அட வாழ்வின் ...
மனிதர்கள் நடுவே
எதிர்ப்படும் மனிதர்கள் முகங்களிலே என்னென்ன தெரியுதுதேடுங்கள் புதையல் எடுக்கும் அவசரத்தில் புதிராய்த் திரிவதைப் பாருங்கள் இருப்பதில் சிலபேர் மகிழ்கின்றார் இருந்தும் சிலபேர் அழுகின்றார் சலிப்பில் பலபேர் நடக்கின்றார் சிலர்தான் முழுதாய் வாழ்கின்றார் விந்தை மனிதர்கள் சந்தையிது வேடிக்கை பார்த்தால் வேதாந்தம் சிந்தனை கொஞ்சம் ஓடவிட்டால் ஜெயித்திட அதுவே சித்தாந்தம் உங்கள் கண்களில் ஒளி நிறைத்து ஊரைச் சுற்றி வாருங்கள் உங்கள் கதையினைக் கேட்டாலே உலகம் சிலிர்த்திட வாழுங்க! ...