கோடைக் காலச் சாரலாய்…
கனிமொழி.ஜி.யின் முந்தைய தொகுதி குறித்தும் நான் எழுதியிருக்கிறேன். “கோடை நகர்ந்த கதை” என்றும் அவரின் இரண்டாம் தொகுதியும் எழுதத் தூண்டுகிறது. “சிவிகை சுமப்பவனுக்கு தன் காய்ப்பேறிய தோள்களைக் கொத்தும் காகம் குறித்து புகார்களேதும் இல்லை” இந்த வரிகள், மேலக்காரிகளுக்கு சாமரம் வீசும் குறப்படும் இடைநிலை அதிகாரிகளால் குதறப்படும் கீழ்நிலை பணியாளர்களில் இருந்து, எத்தனையோ திசைகளை சுட்டும் விரல்களாய் சுழல்கின்றன. இந்தத் தொகுப்புக்குத் தலைப்புத் தந்த கவிதை, “காற்றில் பறந்து என் மேசைக்கு வந்த இலைச்சருகு கோடை நகர்ந்த ...
குமரகுருபரன் – பறந்துபோன தாவரம்
மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது என்கிற கவிதைத் தொகுதியை குமரகுருபரன் அறிந்தே சொன்னார் போலும்! “மிக மிக நிதானமாக நாம் ஒரு வாழ்க்கையை யோசிக்க வேண்டியிருக்கிறது!.. குறிப்பேட்டின் பலபக்கங்களில் ஒற்றைப் புள்ளி கூட இருப்பதில்லை. காட்டின் ஒரு மூலையில் நாம் வாழாத வாழ்க்கை, பெருமரமென கிளைவிட்டிருக்கிறது. அதன்த் துளைகளில் சில பறவைகள் நம்மைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றன. உயிரை இடம் மாற்றுவது பற்றி நமக்கு யாரேனும் போதித்தால் தேவலை” என்றும் வரிகளை, அநேகமாக அவர் தன் மரணத்திற்குப் ...
திருமயிலை கற்பகத்தாள்
(திருக்குட முழுக்குக்குப் பின்னர் கற்பகாம்பாள் தரிசனத்தில் கனிந்த கவிதை) நீயென்னும் உண்மையை நினைந்தவர் உயிருக்குள் நீலமாம் சுடர்கூட்டினாய் நீலியிவள் காளிதிரி சூலியென வருவார்க்கு நீளுகிற வினைபோக்கினாய் தாயென்றும் சேயென்றும்தீயென்றும் ரூபங்கள் திரிபுரை நீமாற்றினாய் தானென்னும் தருக்கங்கள் தவிடுபொடி யாகவே தாண்டவப் பதம் காட்டினாய் காயங்கள் ஆறாமல் கதறுகிற போதுனது குங்குமம் களிம்பாக்கினாய் கடுகிவரும் நஞ்சுதனைக் கருதாமல் சிவன்பருக கைவைத்துத் தழும்பாக்கினாய் தாவென்று கேட்குமுனம் தருகின்ற கற்பகத் தாயேஉன் பதம் போற்றினேன் தொன்மயிலை ஆள்கின்ற பொன்மயிலைப் போற்றியென் தமிழுக்கு ...
மீனாட்சி வெண்பா அந்தாதி
வைர வடிவழகே வண்ணக் கலையழகே மைவிழி பூத்த மலரழகே-பைரவி மாடக்கூ டல்நகரின் மாதங்கி மீனாட்சி பாடத் தருவாய் பதம் பதந்தருவாய் தேவீ! பழக இனந் தந்து நிதந்தருவாய் நூறு நலன்கள்-இதந்தருவாய் ஆலவாய் ஆளும் அழகியே மீனாட்சி மூலக் கனல்தூண்ட முந்து முந்து நகைமழையும் மூக்குத்தி வெய்யிலும் அந்தியில் ஆதவன் ஆக்குமே-சுந்தரி! வண்ணத் திருவடியில் வைத்தவிழி மாறாமல் எண்ணம்போல் வாழ்வைநீ ஈ. ஈகை உனக்கழகு;என்தாயே நீவழங்கும் வாகை எனக்கழகாய் வாய்க்காதோ-தேகமெனும் புல்லாங் குழல்துளைகள் பொங்கும் அருள்ஸ்வரங்கள் எல்லாமும் நீயாய் ...
புலியைத் தின்ற பசு
இந்தத் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ உருவகக் கட்டுரை என்று நினைத்துவிடாதீர்கள். பலம்பொருந்திய ஒரு மனிதரை சாதுவான மனிதர் தேர்கடித்ததைப் பற்றி என்று கருதி விடாதீர்கள். நான் சொல்வது நான்கு கால்கள் கொண்ட பசுவைத்தான். இப்போது புலியா புளியா என்று குழம்புவீர்களே.. தெரியும். புலிதான் சுவாமி. புளியல்ல. இது எங்கோ காட்டு வழியில் நடந்தாலும் கூட எப்போதோ நடக்கும் அதிசயம் என்று விட்டுவிடலாம். பெருநகரம் ஒன்றில், காலைவேளையில், என் நடைப்பயிற்சியின் போது நான் பார்த்த காட்சி. எனவேதான் பூசி ...
கண்ணதாசன் -எந்த ஆலயத்து மணியோ!
54 வயது வரை உலக வாழ்வு. கவிதை, கட்டுரை,திரைப்பாடல்,புதினம்,பத்திரிகைகள் அரசியல்,ஆன்மீகம் என எத்தனையோ தளங்களில் அசகாய முத்திரை. வாசிப்பு வளர்ந்து எழுத்தாகி, அனுபவம் பழுத்து கருத்தாகி, அமர எழுத்துகளாய் ஒளிவீசச் செய்த உன்னதப் படைப்பாளி,கவியரசு கண்ணதாசன். திறந்த ஏடாய் விரிந்த வாழ்வில் கண்ணீரும் வியர்வையும் கலந்து காலம் அழிக்க முடியாத விதமாய் கவிதை வரிகளை வடித்த அமரத்துவம் அவருடைய எழுத்துகளின் மகத்துவம்.. நான்கு வரிகளை வாசித்தாலும், அவரின் பாடல் வரிகளை யோசித்தாலும் வாழ்வின் பாதையில் பளீரென்று பாயும் ...