பின்னுரையாய் என்னுரை
சில ஆயிரம் பேர்களே வசிக்கும் சின்னஞ்சிறிய கிராமம்தான் திருக்கடவூர். அதனுள் பொதிந்து கிடக்கும் புராணப் பின்புலமும் அங்கு நிகழ்ந்த சம்பவங்களுக்குக் கிடைக்கும் சான்றாதாரங்களும், அந்த மண்ணில் நின்று அருளாளர்கள் இசைத்த அற்புதமான பாடல்களும் அந்தச் சிறிய கிராமத்தை பண்பாட்டின் களஞ்சியமாய் ஆக்கின. பூமியின் மார்பில் புதைந்த காலச்சுவடுகளில் பல, காலச்சுவடுகளாய் ஆன கதைதான் திருக்கடவூரின் கதை. திருக்கடவூர் அபிராமியம்மை ஆலயத்தின் பரம்பரை அறங்காவலரின் பெயரனாகப் பிறந்தபோதே இந்நூலை எழுதும் பணி எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் என்று திண்ணமாக எண்ணுகிறேன். ...
திருக்கடவூர்-27
திருக்கடவூர் பிள்ளையெனப் பெயர்பெற்றவர் – துன்பம் தீர்ப்பதிலே கர்ணனென வளம் பெற்றவர்! திருக்கடைக்கண் அபிராமி அருள்பெற்றவர் – இன்று திருக்கயிலை நாதனிடம் இடம் பெற்றவர்! -அருளிசைக்கவிமணி.சொ.அரியநாயகம் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருமுகத்தில் சிந்தனை ரேகைகள் ஓடின. பூம்புகார் பண்பாட்டுக் கல்லூரி நிர்வாகத்தில் தன்னுடைய உழுவலன்பர் கே.கனகசபைப் பிள்ளையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஒருவருக்கொருவர் பேசித் தீர்வு காணும் ஒத்திசைவு நிலையையும் தாண்டி கருத்து பேதங்கள் வலுத்தன. அடிகளாரை தலைவராகக் கொண்ட தெய்வீகப் பேரவை அரசின் அங்கீகாரம் ...
திருக்கடவூர்-25
கோகனக மலர்மாதிருவர் அருளுடையார் பொறையுடையார் கேகனக சபைப்பிள்ளை எனும் பேருடையார் மதுர வாக்கார்! -பிச்சைக்கட்டளை ஆஸ்தான புலவர் நாராயணசாமி செட்டியார் வடக்கு வீதியிலிருந்து சந்நிதித் தெரு நோக்கி வரிசையாய் சில பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வருவது தெரிந்தது. வேட்டியும் முண்டாசும் மட்டும் அணிந்த ஆகிருதியான ஆட்கள் அவற்றைத் தாங்கி வந்து கொண்டிருந்தார்கள். அரைக்கை பனியனும் மடித்துக் கட்டிய வேட்டியுமாய் இருவர் பின்தொடர நடுநாயகமாய் கோயில் நோக்கி சென்று கொண்டிருந்தார் கனகசபைப்பிள்ளை. பிச்சைப்பிள்ளை நிறுவிய பிச்சைக் கட்டளையின் அதிபர். ஆனால் ...
திருக்கடவூர்-24
“கைப்போது கொண்டுன் முகப்போது தன்னில் கணப்போதும் அர்ச்சிக் கிலேன்; கண்போதி னாலுன் முகப்போது தன்னை யான் கண்டு தரிசனை புரிகிலேன்; முப்போதில் ஒருபோதும் என்மனப் போதிலே முன்னி உன் ஆலயத்தின் முன்போது வார்தமது பின்போத நினைகிலேன்; மோசமே போய் உழன்றேன்; மைப்போத கத்தின் நிகரெனப் போதும்எரு மைக்கடா மீதேறி யே மாகோர காலன் வரும்போது தமியேன் மனங்கலங் கித்தி மயங்கும் அப்போது வந்துன் அருட்போது தந்தருள் ஆதிகட வூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! ...
திருக்கடவூர்-23
கலையாத கல்வியும் குறையாத வயதுமொரு கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் சலியாத மனமும்அன் பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில் லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய அலையாழி அறிதுயில்கொள் மாயனது தங்கையேல் செய்! ஆதிகட வூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி; அருள்வாமி; அபிராமியே! -அபிராமி பட்டர் (அபிராமியம்மை பதிகம்) பலகையில் ...