Blog

/Blog

திருக்கடவூர்-22

சின்னஞ்சிறிய மருங்கினில் சார்த்திய செய்யபட்டும் பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த கன்னங்கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில்வைத்துத் தன்னந்தனி யிருப்பார்க்கு இதுபோலும் ஒரு தவமில்லையே! -அபிராமி பட்டர் அபிராமி சந்நிதியில் தனியொருவராய் முதுகு நிமிர்த்தி அமர்ந்திருந்த சுப்பிரமணியன் அசைவற்றிருந்தார். கைகள் மேல்முகமாய் விரிந்த நிலையில் துடைகள் மீதிருந்தன. உள்ளங்கைகளின் மேல் அதீதமான சக்தியின் மெல்லிய அழுத்தத்தை உணர்ந்தார். தன்னிரு கரங்கள்மீதும் சிற்றாடை உடுத்திய சின்னஞ் சிறுமியின் பாதங்கள் ஜதி சொல்லி அசைவது போல் தோன்றியது. சற்றே நிமிர்ந்திருந்தது. நெற்றிக்கு ...

திருக்கடவூர்-21

தானே எழுந்தஇத் தத்துவ நாயகி வானேர் எழுந்து மதியை விளக்கினள் தேனார் எழுகின்ற தீபத்து ஒளியுடன் மானே நடமுடை மன்றறி யீரே! -திருமந்திரம் “ஏன் ஓய்! இந்த ஸ்வார்ஷ் பாதிரியார் நம் சரபோஜி மன்னருக்கு அனுகூலரா? சத்துருவா? அல்லது அனுகூல சத்துருவா?” சட்டநாதக் குருக்கள் கேட்ட கேள்வி அப்பு குருக்களுக்குப் புரியவில்லை. “ஏன் கேட்கிறீர்?” என்றார். “கும்பினி அரசாங்கத்திடம் போராடி இவரை பாதிரியார் மன்னராக்கினாரே, இப்போது மகாராஜாவுடன் கும்பினி அரசாங்கமே நேரடியாக ஆட்சி செய்யுமாம். ஐயாயிரத்து அறுபத்தியிரண்டு ...

திருக்கடவூர்-20

திருக்கடவூர்-20 தன்னை அறியார் தலைவன் தனையறியார் முன்னை வினையின் முடிவறியார் – பின்னைக் குருக்களென்றும் பேரிட்டுக் கொள்ளுவர்கள் ஐயோ தெருக்கள் தனிலே சிலர்! -ஸ்ரீ குருஞானசம்பந்தர் (சிவபோகசாரம்) திருக்கடவூர்க்காரர்களின் வாழ்வை இயக்கும் ஆதார மையங்களே உழுவதும் தொழுவதும்தான். ஊரின் நடுநாயகமாய் விளங்கிய திருக்கோயில் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும் புகுந்து ஊடாடியது. வீதி நடுலே நிற்கும் பசுவைத் தொட்டுக் கொண்டும் வருடிக்கொண்டும் செல்பவர்களைப் போல் அமுதகடேசரையும் அபிராமியையும் சார்ந்தே வாழ்ந்த வாழ்க்கை அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. முப்போக விளைச்சல் ...

திருக்கடவூர்-19

காணரிய தில்லை கடவூரை யாறுகச்சி சோணகிரி வேளூர் துவாரசக்திகோணகிரி தண்டாத காசி தலத்துவிடை பஞ்சசக்தி கண்டானெல் லன்காலிங் கன்! -திருவண்ணாமலை திருக்கோவிலில் உள்ள கல்லெழுத்துப் பாடல் திருக்கடவூர் அம்பாள் ஆலயத்தின் முன் பத்மாசனமிட்டு அமர்ந்திருந்த குழுவினர் கண்மூடி மந்திர ஜபத்தில் ஈடுபட்டிருந்தனர். செந்நிற வஸ்திரங்கள் பூண்டு, கழுத்தில் உருத்திராக்கம் அணிந்திருந்தனர். அம்பிகையை முழுமுதற் பொருளாக வழிபடும் சாக்த மார்க்கத்தினர் என்பது பார்த்தாலே புரிந்தது. அவர்களில் சிலர் சோழி மாலைகள் அணிந்திருந்தனர். சிலர் சோழி மாலைகளைக் கைகளில் வைத்து ...

திருக்கடவூர்-18

திருக்கடவூர்-18 நற்றமிழ் வரைப்பின் ஓங்கும் நாம்புகழ் திருநாடென்றும் பொற்தடந் தோளால் வையம் பொதுக்கடிந்து இனிது காக்கும் கொற்றவன் அன்பாயன் பொற் குடைநிழல் குளிர்வதென்றால் மற்றதன் பெருமை நம்பால் வரம்புற விளம்பலாமோ! -தெய்வச் சேக்கிழார் “நம்முடைய மன்னர் பெருமானின் மனங்கவர்ந்த அமைச்சராகிய அருண்மொழித்தேவர், தமிழகத்தில் வாழ்ந்து வந்த நாயன்மார்களின் வரலாற்றை திருத்தொண்டர் மாக்கதை என்று புராணமாகப் பாடியிருக்கிறாராம். நம்முடைய ஊரில் வாழ்ந்த குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் ஆகியோரைப் பற்றி அதில் விரிவாக வருகிறதாம்!” என்றார் ஒரு புலவர். ...

திருக்கடவூர்-17

நின்றபடி நின்றவர்க்கு அன்றி நிறந்தெரியான் மன்றினுள்நின் றாடல் மகிழ்ந்தானும் – சென்றுடனே எண்ணுறும்ஐம் பூதமுதல் எட்டுருவாய் நின்றானும் பெண்ணுறநின் றாடும் பிரான்! -திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயணார் அமுதகடேசர் சந்நிதியில் அன்று பெருங்கூட்டம் திரண்டிருந்தது. முழுநீறு பூசி உருத்திராக்கம் அணிந்து சிவச்சிந்தையராய்த் திரண்டிருந்த அடியவர்களும், இல்லற நெறியில் இருந்தபடியே இறைநெறியில் இதயம் தோய்ந்த சிவநெறிச் செல்வர்களும் ஒருங்கே திரண்டிருக்க, அவர்கள் நடுவில் கனிந்த சிவப்பழமாய், கனலும் அருட்தவமாய் வீற்றிருந்தார் ஒருவர். ஆளுடைய தேவநாயனார் என்பது, அவருடைய தீட்சாநாமம். திருவியலூர் ...
More...More...More...More...