Blog

/Blog

திருக்கடவூர்-4

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே! -அவ்வை வாசுகி மேருவைக் கடைந்த வேகத்தைக் காட்டிலும் பலமடங்கு கூடுதலாய் தேவர்களின் உள்ளங்களை கலக்கம் கடைந்தது. அரிதின் முயன்று பெற்ற அமுதக்கலசம் அவர்களின் ஞான திருட்டிக்கும் அகப்படாத எல்லையில் இருப்பது மட்டும் தெரிந்தது. எப்போதும் போல் திருமாலின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது. என்ன நடந்ததென்று அவருக்குப் புரிந்தது. அதிர்ந்து நின்ற அமரர் தலைவனை அருகே ...

திருக்கடவூர்-3

கண்ணனை மாயன் றன்னைக் கடல்கடைந் தமுதங் கொண்ட, அண்ணலை அச்சு தன்னை அனற்தனை அனந்தன் தன்மேல், நண்ணிநன்கு உறைகின் றானை ஞாலமுண் டுமிழ்ந்த மாலை, எண்ணுமா றறிய மாட்டேன், யாவையும் யவரும் தானே! -நம்மாழ்வார் ஆலகாலம் பெருகிய சுவடேயின்றி மௌனம் கொண்டிருந்த பாற்கடலின் மையத்தில், மேருவை உரசி மேலெழுந்தது பேரலை, பால்நுரைகளில் மிதந்த பதுமமலர் மேலே பொன்னிறத் திருமேனி பேரொளி வீச, மின்னற் கொடிபோலும் முத்துச் சுடர்போலும் தென்றல் நடைபோலும் தேனின் மழைபோலும் அலைமகளாம் திருமகள் அசைந்தசைந்து ...

திருக்கடவூர்-2

வெண் மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா ஈர் அணி பெற்ற எழிற்தகையன் ஏரும் மாறு ஏற்கும் பண்பின் மணி மிடற்றன்! வெண்ணிற வாரிதியின் கடைசலா, வாசுகியின் சீறலா என்று இனங்காணவொண்ணாப் பேரோசை எங்கும் பரந்தது. அசுரர்கள் இதழ்களில் களைப்பையும் மீறிக் குமிழ்விட்டது புன்னகை. வானிருந்து கீழிறங்கும் விழுதென்று நீண்டு கிடந்த வாசுகியின் தலைப்பகுதியை அசுரர்கள் பற்றியிருக்க அமரர்கள் வால் பகுதியைப் பற்றியிருந்தனர். வாசுகியிடமிருந்து வெளிப்பட்ட வெப்ப மூச்சினில் அசுரர்களின் கரங்களில் ...

திருக்கடவூர்-1

நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை உலகம் முகிழ்த்தன முறையே! -ஐங்குறுநூறு பிரபஞ்சம் என்னும் பேரரும்பின் மடல்கள் அவிழத் தொடங்கிய ஆதிகாலம். அண்டத்தின் நாபியிலிருந்து பொங்கியெழுந்தது ஓங்கார நாதம். படைப்புக் கலையின் மூலநாதமாய், முடிவிலா நடனத்தின் முதல் சுருதியாய், கால வீணையின் அதிர்வாய் ஓங்கி ஒலித்தது ஓங்காரம். சிருஷ்டியின் உச்ச லயிப்பில் ஒன்றியிருந்த இடகலை பிங்கலை சக்திகள் சலனம் கொண்டன. சற்றே அசைந்தன. நாதத்தின் கருப்பையில் பிரபஞ்சக் கரு மெல்ல மெல்ல உருக்கொள்வதை உணர்ந்தன. ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

உடல், மனம், உயிர் மூன்றும் அவற்றுக்குரிய நிலைகளில் சில தீமைகளும் ஆளாகின்றன. உடல் நோய் வாய்ப்படுகிறது. மனம் துயரடைகிறது. உயிரோ வினைகளால் பற்றப்படுகிறது. ஆத்தாள் என்பது நம் அகத்தில் இருப்பவள் – அப்த்தாள் என்பதன் மரூஉ. அபிராமவல்லி அண்டமெல்லாம் பூத்து நிற்கிறாள். அவள் புவியைக் காக்கிறாள். அவளது திருக்கோலம் கண்களை விட்டகலாத கவினுறு தோற்றம். அவளுடைய அழகிய கைகளில் மலர்க் கணைகள், கரும்பு, பாசம், அங்குசம் ஆகியவை உள்ளன. மூன்று திருவிழிகளைக் கொண்ட அவளைத் தொழுபவர்களுக்கு இந்த ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

அடுத்து சொல்லக்கூடிய பாடலையும் சேர்த்து 100 பாடல்களை நாம் சொன்னால் நமக்கு என்ன நேரும்? நூறாவது பாடலில் ஒரு கும்பாபிஷேகத்தையே நிகழ்த்துகிறார் அபிராமிபட்டர். கும்பத்தில் தெய்வத்தை நாம் ஆவாஹனம் செய்கிறோம், அக்னி வளர்க்கிறோம், ஆகாயத்தில் இருக்கிற இறைவனை காற்று வழியாக அதிலே நிலைபெறச் செய்து இந்த பூமியிலே நிலை நிறுத்துவதற்குப் பெயர்தான் கும்பாபிஷேகம். இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு பெரிதோ அந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிற அத்தனையும் இந்தப் பிண்டத்தில் இருக்கிறது. இந்த உடலே ஒரு பிரபஞ்சம். இங்கே இருக்கிற ...
More...More...More...More...