கனவுகள் உனது பிறப்புரிமை
இமைகள் நான்கும் கிழக்கானால் – நாம் நாம் இரண்டு விடியல்கள் சுமக்கின்றோம் தமையை உணராதிருப்பதனால் – நாம் துயரம் என்று தவிக்கின்றோம் சிமிழின் உள்ளே சிறைகிடக்க – அட சிங்கங்கள் தாமாய் புகுவதென்ன? சுமைகள் மனதில் ஏற்பவனே – அதை சுட்டுப் பொசுக்கத் தயக்கமென்ன? உள்ளே இருக்கும் கனவுகள்தான் – நல்ல உரம்தரும் உனது தோள்களுக்கு பள்ளிப் பருவத்து உற்சாகம் – அதப் பரிசாய்க் கொடு உன் கால்களுக்கு வெள்ளி உறைக்குள் போட்டாலும் – புகழ் வெளியே ...
கையில் விழுந்த விதை
வானம் நமக்கோர் இலக்கானால் வளரும் நம்பிக்கை விளக்காகும் நானும் நீயும்முடிவெடுத்தால் நாளைய விடியல் நமக்காகும் ஒவ்வொரு நாளும் விதைபோல உனது கைகளில் விழுகிறது எவ்விதம் விதைப்பாய் வளர்த்தெடுப்பாய் என்பதும் உன்னிடம் இருக்கிறது மனிதன் அடைகிற வெற்றிகளும் மற்றவர் கொடுத்து வருவதல்ல மனிதன் இழக்கிற வாய்ப்புகளும் மற்றவர் தடித்து மறைவதல்ல உன்னில் தொடங்கும் ஒருகனவு உன்னால்தானே நிஜமாகும் இன்னும் தயக்கம் எதற்காக எண்ணியதெல்லாம் வசமாகும். ...
எதுவும் கைகூடும்
சுவர்கள் எழுந்த மனதுக்குள்ளே சுற்றும் காற்று நுழைவதில்லை! கவலைகள் வல்ர்ந்த இதயத்திலே கனவின் வெளிச்சம் விழுவதில்லை! எட்டுத் திசையும் திறந்திருக்கும் இதயத்தில் வெற்ர்ப் விளைகிறது! கட்டிவைக்காத கனவுகளே காரியமாய் அங்கு மலர்கிறது! தன்னைத் தீவென மாற்றுபவன் தனக்குள் மூழ்கித் திணறுகிறான்! என்றும் எங்கும் கலப்பவனே எல்லா வகையிலும் உயருகிறான்! ஆமையின் ஓடு சுமையாகும் ஆதலினால் நடை மெதுவாகும்! பூமி முழுவதும் உறவென்றால் புதுமைகள் தினமும் உருவாகும்! மூடிகள் இல்லா மனதோடு முன்னேற்றங்கள் எளிதாகும்! தேடிய எதுவும் கைகூடும் ...
தீயாய் எழுந்தால்……
உன்னில் எழுகிற கனலில் – இந்த உலகே ஒளிபெற வேண்டும் மின்னில் எழுகிற சுடராய் – உன் முயற்சிகள் மழை தர வேண்டும் தன்னில் கனல்கிற தணலால் -எட்டுத் திசைகளைத் திறந்திட வேண்டும் இன்னும் என்கிற தேடல் – உன்னை இயக்கி விசைதர வேண்டும் ஊக்கச் சிறகுகள் விரிந்தால் – உன்னை உயர்த்தத் துடிக்கும் வானம் தூக்கம் உதறி எழுந்தால் – உன் தோள்விட்டோடிடும் பாரம் ஆக்கும் காரியம் எதிலும் -அட ஆர்வம்தானே மூலம் ஏக்கம் இனியும் ...
வாழ்க்கையின் பாதை
புன்னகை வரைபடம் கைவசமிருந்தால் புலப்படும் வாழ்க்கையின் பாதை தன்னிடம் இருப்பது என்னென்று தெரிந்தால் உண்மையில் அவன்தான் மேதை இன்னொரு திருப்பம் எதிர்ப்படும் என்று ஏங்கி நடப்பதா வாழ்க்கை? எண்ணிய திருப்பம் ஏற்படும் விதமாய் இன்றே நடந்திடு வாழ்வை காலத்தின் புதையல் காற்றிலும் இருக்கும் கண்களில் படும்வரை தேடு தோல்வியின் கைகளில் துவண்டுவிழாதே திசைகளைத் துளைத்தே ஓடு நீலத்தை வானம் தொலைத்துவிடாது நீ உந்தன் சுயத்தினை நாடு கோலங்கள் புனைந்து மேடைகு வந்தோம் குழப்பங்கள் மறந்தே ஆடு பொன்னொரு ...
நல்ல நாள்
காற்றில் தவழ்கிற ஒருபாடல் -அது காதில் விழுந்தால் நல்லநாள் நேற்று மலர்ந்து ஒருதேடல் – அது நெஞ்சில் இருந்தால் நல்லநாள் ஊற்றெனப் பொங்கும் உற்சாகம் -அது உந்தித் தள்ளினால் நல்லநாள் போற்றிய கனவுகள் நிஜமானால் – உங்கள் பாதையில் அதுமிக நல்லநாள். முன்பின் தெரியா ஒருகுழந்தை – சிறு முறுவல் சிந்தினால் நல்லநாள் தன்னைத் தேடும் ஒரு மனிதர் – உங்கள் தோள்களைத் தொட்டால் நல்லநாள் இன்னகள் சுமக்கும் ஒருகிழவர் – அவர் இரைப்பை நிரப்பினால் நல்லநாள் ...