Blog

/Blog

மனிதர்கள் தான் உலகம்

யாரோ உருட்டிய பகடையிலே ஏதோ விழுவதா உன்வாழ்க்கை? ஊரோ உலகோ கொடுப்பதல்ல உனக்குள் இருப்பதே உன்வாழ்க்கை நீரோ நெருப்போ எதுவரினும் எல்லாம் நமது செயலாலே போரோ புகழோ எல்லாமே பழகும் நமது இயல்பாலே பத்து நிமிடம் பேசியதும் பழக சிலரிடம் பிடிக்கிறது எத்தனை வருடமாய் தெரிந்தாலும் ஏனோ சிலரை வெறுக்கிறது வித்தைகள் காட்டத் தேவையில்லை வெளிப்படையான பேச்சிருந்தால் முத்திரை மனங்களில் பதித்திடலாம் மனிதரை நம்வசம் ஈர்த்திடலாம் வெள்ளைப் பேச்சால் வெற்றி வரும் வெகுளிச் சிரிப்பால் வெற்றி வரும் ...

விசுவம் எங்கும் அவன்நாதம்

கருவி இசைத்துக் கற்றானா கருவில் இருந்தே பெற்றானா சரிகம பதநி சுரங்களெல்லாம் சுடர்விரல் நுனிகளில் உற்றானா வரிகளில் இசையைக் கண்டானா வானின் அமுதம் தந்தானா ஒருமுறை வந்த இசை மன்னன் உலகுக்கு மீண்டும் வருவானா ஆர்மோனியத்தின் ஆளுமையாய் அமர கவியின் தோழமையாய் வேறொன்றெதுவும் அறியாமல் வேர்விட்டிருந்த மேதைமையாய் தாரா கணமாய் ஒளிர்ந்தானே தன்னிகர் இல்லா எம்.எஸ்.வி பாரோர் அழுது கேட்டாலும் பரமன் மீண்டும் தருவானா நாடக உலகில் நுழைந்தவனை நாளும் பாடுகள் பட்டவனை மூடச் சிலபேர் முயன்றாலும் ...

வெற்றிகள் குவித்திடு

வீசும் புயலை வெளியில் நிறுத்து பேசும் பேச்சில் பேரொளி மலர்த்து ஈசல் போலே இறகுதிராதே வாசல் திறக்கும் வாடி விடாதே தடங்கல்கள் எத்தனை தாண்டியிருக்கிறாய் மயங்கி நிமிர்ந்து மீண்டிருக்கிறாய் நடுங்கும் அவசியம் நமக்கினி இல்லை தொடர்ந்து நடையிடு! திசைகளே எல்லை ஆகச்சிறந்த ஆக்கங்கள் வளர்த்து வேகத்தை நிறுத்தும் வேதனை விலக்கு யோகம் பயின்று ஏற்றங்கள் நிகழ்த்து வாகைகள் சூடி வாழ்வினை நடத்து எல்லைகள் எல்லாம் நாமே வகுப்பது இல்லா எதிர்ப்புகள் இதயம் நினைப்பது வில்லாய் மனதை விரும்பி ...

நாளும் இங்கே நிகழ்த்திவிடு

உள்ளங்கால்கள் வலித்தால் கூட ஓய்வு கொள்ள நேரமில்லை வெள்ளம் போலக் கனவுகள் வந்தும் வடிகால் மறந்தால் வாழ்க்கையில்லை முள்ளும் மலரும் நிறைந்தது பாதை மயங்கி நின்றால் பயணமில்லை தள்ளிப் போட்டால் தேங்கிப் போகும் தொடர்ந்து முயன்றால் தோல்வியில்லை முடியா தென்னும் முனகல் குரலை முளைக்கும் போதே நசுக்கிவிடு கிடையாதென்றவை கிடைக்கும் இந்த கணக்கின் சூட்சுமம் கையிலெடு தடையாய் தெரிந்த தயக்கம் எல்லாம் தொட்டால் நொறுங்கும் தெளிந்துவிடு நடையாய் நடந்தோ கிடையாய் கிடந்தோ நாலும் இங்கே நிகழ்த்திவிடு தன்னால் ...

முளைக்கும்

“வானில் ஒருவன் விதைவிதைத்தால் வயலில் அதுவந்து முளைத்திடுமா?” ஏனோ இப்படி ஒரு கேள்வி எழுந்தது ஒருவன் மனதினிலே ஞானி ஒருவர் முன்னிலையை நாடிச் சென்றே அவன் கேட்டான் தேனாய் சிரித்த பெரியவரோ தெளிவாய்ச் சொன்னார். “முளைக்கும்” என்று வீசிய விதைக்கு உரமிருந்தால் வீசும் காற்றும் துணையிருந்தால் ஓசையின்றி அந்த விதை ஒரு வயல் தன்னைச் சேர்ந்துவிடும் ஆசைப்படுவது என் உரிமை அதற்கென உழைப்பது உன் கடமை பேசும் வார்த்தைக்கு வலியுண்டு பொலிவுடை சொற்களே பேசிடுவாய் எண்ணம் சொல் ...

பழகும் அழகுகள்

காற்றில் ஏறும் குளிரழகு காலை வானத்தின் நிறமழகு நேற்றைய வாழ்வின் வலியழகு நாளையின் நம்பிக்கை ஒளியழகு வெய்யில் பருகும் குளமழகு வியர்வை பருகும் நிலமழகு வையம் வழங்கும் வாய்ப்பழகு வெல்லும் நேரத்தில் பணிவழகு நீரில் அலையும் கயலழகு நீளும் பாதையின் வளைவழகு நேரில் சவால்கள் நல்லழகு நேர்மையின் வெற்றி நிலையழகு பார்த்தன் வில்லின் கணையழகு பாரதி மீசையின் முனையழகு மூத்தவர் அனுபவச் சொல்லழகு முயற்சியின் தீவிரம் மிக அழகு ...
More...More...More...More...