அடுத்ததைத் தேடு
உன்னத கணங்கள் வாழ்வில் நிகழ்வதோ ஒவ்வொரு நாளும்தான்; உன்னால் என்னால் காண முடிந்தால் உயர்வுகள் தினமும்தான்; தன்னினும் பெரிதாய் ஏதோ ஒன்று துணைக்கு வருகிறது; முன்னினும் வாழ்க்கை மேம்படும் வாய்ப்பை முனைந்தால் தருகிறது! எண்ணிய தொன்று எட்டிய தொன்றா? ஏன் இப்படி ஆகும்? எண்ணப் போக்கினில் ஏற்படும் தெளிவே ஏணிப் படியாகும்; வண்ணக் கனவுகள் வசமாய் ஆவதும் வேலையின் திறமாகும்; கண்ணுக்கெதிரே வாய்ப்புகள் திறக்கும் கண்டால் வளம் சூழும்! விழுந்தும் எழுந்தும் விரைகிற அலைதான் கரையைத் தொடுகிறது; ...
எழும் நீயே காற்று!
துளை கொண்ட ஒருமூங்கில் துயர்கொண்டா வாடும்? துளிகூட வலியின்றித் தேனாகப் பாடும்; வலிகொண்டு வடுகொண்டு வந்தோர்தான் யாரும்; நலமுண்டு எனநம்பி நன்னெஞ்சம் வாழும்! பயம்கொண்டால் ஆகாயம் பறவைக்கு பாரம்; சுயம்கண்டால் அதுபாடும் சுகமான ராகம்; அயராதே; அலறாதே; அச்சங்கள் போதும்; உயரங்கள் தொடவேண்டும் உன்பாதை நீளும்! உடைகின்ற அச்சங்கள் உன்வீரம் காக்கும்; தடையென்ற எல்லாமே தூளாக்கிக் காட்டும்; படைகொண்டு வருகின்ற பேராண்மைக் கூட்டம் நடைகண்டு விசைகண்டு நாடுன்னை வாழ்த்தும்! ஊருக்கு முன்பாக உன்திறமை காட்டு; பேருக்கு முன்பாக ...
ஒருநாள் பூக்கும்!
பூஞ்சிறகில் புயல் தூங்கக் கூடும் – அது புறப்படும்நாள் தெரிந்தவர்கள் இல்லை தேன்துளியில் கலை பதுங்கக்கூடும் – அது தீப்பற்றும் நாளறிந்தோர் இல்லை வான்வெளியும் விடுகதைகள் போடும் – அது விளங்கும் பதில்சொல்பவர்கள் இல்லை ஆனாலும் நம் பயணம் நீளும் – அதில் ஆனவரை காண வேண்டும் எல்லை! காற்றின்கை காகிதமாய் திரிந்தால்- அதில் குறிப்பிட்ட இலக்கேதும் உண்டோ நேற்றினது பாதிப்பை சுமந்தால் – நம் நெஞ்சிற்கு அமைதிவரல் உண்டோ மாற்றாமல் வைத்த பணம் போலே – இங்கு மனிதசக்தி செயல்மறந்து போனால் ஏற்றங்கள் ...
வருடங்கள் மாறும்!
வருடங்கள் மாறும்; வயதாகும் மீண்டும்; பருவங்கள் நிறம் மாறலாம் உருவங்கள் மாறும் உணர்வெல்லாம் மாறும் உலகத்தின் நிலை மாறலாம் கருவங்கள் தீரும் கருணை உண்டாகும் கனிவோடு நாம் வாழலாம் ஒரு பார்வை கொண்டு ஒரு பாதை சென்று உயர்வெல்லாம் நாம்காணலாம்! பிழைசெய்வதுண்டு சரிசெய்வதுண்டு பழியேதும் நிலையில்லையே மழைகூடக் கொஞ்சம் பின் தங்கிப் போகும் அதனாலே தவறில்லையே இழைகூடப் பாவம் இல்லாத யாரும் இங்கில்லை இங்கில்லையே குழையாத சோறா குலுங்காத தேரா குறையின்றி உலகில்லையே! நீஉன்னை நம்பு நலம்சேரும் ...
மரபின் மைந்தன் பதில்கள்
இன்றைய தமிழ்ப்படங்கள் மிகவும் சிதைந்து வருகின்றன. மீண்டும் தலைநிமிர்வது எப்போது? -ஆ.ரேவதி, தாரமங்கலம். திரைப்படங்கள், தமிழ்ச்சமூகத்தின் ஒரே பொழுதுபோக்கு என்கிற நிலை மாறிவருவதால், கால மாற்றங்களை மனதில் கொண்டு திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. கேளிக்கைத் தன்மை மிகுதியாக இருப்பதை நீங்கள் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். இதே சூழலில்தான், கருத்தியல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களும் வருகின்றன. கோடிக்கணக்கில் ரூபாய்கள் புழங்கும் துறை திரைத்துறை. எனவே மொத்தமும் சிதைந்து விட்டது என்று சொல்வதும் மிகை. முழுவதும் ...
மரபின் மைந்தன் பதில்கள்
இன்றைய மாணவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறீர்களா? அ.அருள், ராமநாதபுரம். முந்தைய தலைமுறையில், சுதந்திரப் போராட்ட காலங்களிலும், தமிழகத்தில் நிகழ்ந்த மொழியுணர்வுப் போராட்டங்களிலும் பங்கேற்ற மாணவர்கள் சிலர், அரசியலில் பெரிய நிலைக்கு வந்தார்கள். அதற்குக் காரணம், அவர்களுக்கு வழிகாட்ட தன்னமில்லாத தலைவர்கள் இருந்தார்கள். இன்று, இளைஞர்களை எவ்வித உள்நோக்கமும் இன்றி வழிகாட்டவோ, வளர்த்தெடுக்கவோ சரியான தலைவர்கள் இல்லை. எனவே இந்தச் சூழலில் மாணவர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கவில்லை. ...