Blog

/Blog

நடையிடு துணிவோடு

எல்லா விதைகளும் என்றோ முளைக்கும் என்பதே ஏற்பாடு வில்லால் தடுத்தா வீழும் காற்று….? கல்லால் அடித்தும் கனிதரும் மரங்கள் கற்பது உன்பாடு நல்லார் பொல்லார் உள்ளதே உலகம் நடையிடு துணிவோடு உன்னொரு கனவ இன்னொரு மனிதர் கலைத்திட முடியாது இன்னொரு வாய்ப்பு எவருக்கும் உண்டு ஐயம் கிடையாது தன்னில் இருக்கும் உறுதியை வளர்த்தால் தடைகள் தடுக்காது இன்னும் இன்னும் என்று நடந்தால் இதயம் களைக்காது வித்துகள் நடுபவன் விளைச்சலின் வழியே வெற்றியை அறிகின்றான் எத்தனை தடுத்தும் முயல்கிற ...

நம்பிக்கை ஜொலிக்கட்டும்

நித்தம் செய்கிற வேலைகள்தான் – அதில் நிதானம் கலந்தால் தவமாகும் புத்தம் புதியது விடிகாலை -அதில் புதுநடையிட்டால் நலமாகும் பித்து மனதின் பெருங்கவலை – ஒரு புன்னகை மருந்தில் குணமாகும் எத்தனை செல்வம் இருந்தென்ன – அட ஏழைக்குதவுதல் வளமாகும் வாழும் வாழ்க்கை பொதுவாகும் – அதில் வசந்தமும் கோடையும் நம்திறமை சூழும் வாய்ப்புகள் பொதுவாகும் – அதில் சொர்க்கம் படைப்பது நம்பொறுமை தாழ்வுகள் உயர்வுகள் வரும்போகும் – மனம் தளரா திருப்பது நம்முரிமை தோழமை பகைமை ...

வாக்களிக்க வாருங்கள்

வாசல்தேடிக் கும்பிடுவோர் விரல்கள் பாருங்கள் – அவர் விரல்களிலே என்ன கறை என்று தேடுங்கள் பேசும்பேச்சில் உண்மையுண்டா என்று கேளுங்கள் – ஒரு புதுவெளிச்சம் வரும்சுவடு தன்னைத் தேடுங்கள் ஆட்டம்காணும் ஆட்சியிங்கு தேவையில்லையே – வெறும் ஆள்பிடிக்கும் உத்திக்குநாம் அடிமையில்லையே ஓட்டு வாங்கி மறப்பவரை ஓடச் செய்யுங்கள் – நல்ல உயர்ந்த மாற்றம் தருபவரை ஆளச் செய்யுங்கள் கொள்கைகளை அடகுவைக்கும் கட்சிகள்வேண்டாம் – வெறும் கோஷ்டிகளை வளர்த்துவிடும் கட்சிகள் வேண்டாம் உள்ளபடி நல்லபடி ஆள்பவர் யாரோ – ...

வயதுக்கேற்ற வாழ்க்கை

பத்தில் ஆனந்தம் புத்தகம் பயில்வது இருபதில் ஆனந்தம் காதலில் விழுவது முப்பதில் ஆனந்தம் கல்யாணம் ஆவது நாற்பதில் ஆனந்தம் நன்மைதீமை உணர்வது ஐம்பதில் ஆனந்தம் அனுபவங்கள் சேர்வது அறுபதில் ஆனந்தம் வலிபழகிப் போவது எழுபதில் ஆனந்தம் எதிரியின்றி வாழ்வது எண்பதில் ஆனந்தம் எண்ணங்கள் ஓய்வது தொண்ணூறில் ஆனந்தம் தெய்வம்போல் ஆவது நூறில் ஆனந்தம் நன்றிசொல்லிப் போவது……… ...

இறுக்கம் எதற்கு?

கோணலென்று சிலமூடர் குற்றம் சொல்வார் குழைகிறதே நெறிகிறதே என்றும் சொல்வார் ஊனமென்றும் சிலரதனை உளறக்கூடும் உணராமல் பலவகையாய் பேசக் கூடும் நாணலது காற்றினிலே வளையும் போக்கை நாலும்தெ ரிந்தவர்கள் என்ன சொல்வார்? ஞானமென்று கொண்டாடி மகிழ்வார் – ஆமாம் நாணல்போல் வாழ்பவர்க்கு நன்மை உண்டு. எப்போதும் இரும்பைப் போல் இருப்பதென்றால் எதற்காக இதயமென ஒன்று வேண்டும்? முப்போதும் கல்போலக் கிடப்பதென்றால் மூச்சுவிட எதற்காக முயல வேண்டும்? இப்போதும் அப்போதும் மாற்றம் நூறு ஏராளம் என்பதனை உணர வேண்டும் ...

முயலுக முனைப்போடு

எட்டிப் பிடிக்க வானம் உண்டு எத்தனை பேரிங்கு தாவுகிறார்? கட்டி எழுப்பக் கோட்டைகள் உண்டு கனவுடன் வாழ்பவர் ஆளுகிறார் முட்டி முளைக்கும் தாவர முயற்சி மனிதர்கள் பலருக்கும் இருப்பதில்லை வெட்டிவிட்டாலும் வளரும் முனைப்பு வந்தால் மனிதன் தோற்பதில்லை. ஆகாயத்தில் மழையும் வெயிலும் அதிலே யாருக்கு முரண்பாடு போகும் வழியில் பகையும் நட்பும் பூமியில் அதுதான் ஏற்பாடு ஆகாதவர்கள் அவரிவர் என்பவர் அடைந்து கிடப்பார் வீட்டோடு தாகம் இருப்பவர் துணிந்து நடப்பார் நினைத்ததை முடிப்பார் துணிவோடு ஏமாற்றங்கள் எதிர்ப்படுமென்றே ...
More...More...More...More...