கறுப்பு வெள்ளை
கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் கனவின் வண்ணம் நூறு! கறுப்பு வெள்ளை திரைப்படத்தில் காவியங்கள் நூறு! கறுப்பு வெள்ளை கனவுகள்தான் காணுகின்றோம் நாமும்! கறுப்பு வெள்ளை சித்திரங்கள் காலம் தாண்டி வாழும்! வண்ண வண்ணப் பூக்கள் உண்டு வேரின் வண்ணம் என்ன? கண்கள் ரெண்டும் கறுப்பு வெள்ளை ஆன போதும் என்ன? விண்ணில் என்றும் கறுப்பு வெள்ளை வந்து போவதென்ன? எண்ணிப் பார்த்தால் சதுரங்கத்தில் இருக்கும் நிறங்கள் என்ன? வயது போக மனிதன் தலையில் வண்ணம் கறுப்பு வெள்ளை! ...
எது பெரிசு?
ஒற்றை வானம் ரெட்டைச் சிறகு பறவை தானே பெரிசு ஒற்றைப் பாறை ரெட்டைக் கைகள் உளிகள் தானே பெரிசு ஒற்றைப் பாதை ரெட்டைக் கால்கள் பயணம்தானே பெரிசு ஒற்றைக் கடவுள் ரெட்டைக் கால்கள் பக்திதானே பெரிசு எண்ணிக்கைதான் பெருமை என்றால் இதுதான் இங்கே உண்மை எண்ணிப் பார்த்தால் எல்லாம் உன்னில் நம்பி வாழ்ந்தால் நன்மை வண்ணம் நூறு வந்து போகும் வானம் போலே வாழ்க்கை எண்ணம் மட்டும் நலமாயிருந்தால் என்றும் வெற்றிச் சேர்க்கை உன்னைச் சிறிதாய் எண்ணிக் ...
கூவி அழைக்குது பார்
நிலவின் கிரணம் பருகும் விழிகள் நட்சத் திரங்கள் எண்ணட்டும் ஒளிரும் கதிரின் விடியல் பொழுதில் உலகில் நுழைந்து வெல்லட்டும் மலரும் அரும்பில் மதுவின் புதையல் மனமே வாழ்வும் அதுபோலே உலரா உறுதி உனக்குள் இருந்தால் உயர்வுகள் எல்லாம மனம்போலே பரவிக் கிடக்கும் இயற்கை அழகைப் பருகும் மனதில் பலம்கூடும் புரவிக் குளம்பின் ஒலியை நொடியின் நகர்வில் உணர்ந்தால் விசைகூடும் அருவிக் குளியல் போன்றது வாழ்க்கை அரைகுறை நாட்டம் போதாது குருவிக் கிருக்கும் குறுகுறு வேகம் நமக்கேன் இருக்கக் ...
கலங்கரை விளக்கம்
கலங்கரை விளக்கம் எங்கே? கல்வியின் கனிவு எங்கே? உலகுக்குத் தமிழர் மேன்மை உயர்த்திய செம்மல் எங்கே? குலவிடும் காந்தீயத்தின் குன்றத்து தீபம் எங்கே? மலையென நிமிர்ந்த எங்கள் மகாலிங்க வள்ளல் எங்கே? என்னென்ன தொழிற்கூடங்கள் எத்தனை கல்விச் சாலை பொன்பொருள் வாரித் தந்த பெற்றிக்கோ எல்லை இல்லை மன்னர்க்கும் மன்னராக மண்மிசை ஒருவர் வாழ்ந்தார் அன்னவர் அருட்செல் வர்தான் அவருக்கு நிகரே இல்லை வித்தகத் தலைவர் போனார் வள்ளலே போனார் – அந்தோ புத்தகப் பிரியர் போனார் ...
உன் பேர் எழுதட்டும்
சின்னச் சின்ன தோல்விகளை சொல்லித் திரிவேன் நானாக “என்ன? எப்போ?” என்றபடி எதிரிகள் எல்லாம் கதை கேட்பார் இன்னும் கொஞ்சம் சுவைசேர்த்து இட்டுக் கட்டிப் பரப்பிடுவேன் தன்னை மறந்த மகிழ்ச்சியிலே தாமும் கதைசொல்லப் புறப்படுவார் “சேதி தெரியுமா” என்றவரும் சேர்த்துப் பரப்பிய கதையெல்லாம் காதில் வந்து விழும்முன்னே களத்தில் இறங்கி நடந்திருப்பேன் மீதி வெற்றிகள் எதையும்நான் மறந்தும் வெளியே சொல்வதில்லை நீதி இதிலே உண்டென நான் நீட்டி முழக்கவும் போவதில்லை நம்மைப் பற்றிப் பேசுபவர் நாக்குச் சுகத்தில் ...
ஆண்டினை ஆளுங்கள்
புதிதாய் திருமணம் ஆனவர்க்கு பணமோ பொருளோ தருவீர்கள் புதுமனை புகுகுற உறவினர்க்கு பரிசுப் பொருட்கள் தருவீர்கள் புதிதாய் வாடிக்கையாளர் எனில் பரிசும் சலுகையும் தருவீர்கள்.. புதிதாய் ஆண்டு வருகிறதே புதிதாய் என்ன தருவீர்கள். உங்கள் உழைப்பை பரிசளித்து உயர்வுகள் ஆயிரம் பெற்றிடுங்கள் உங்கள் நம்பிக்கை பரிசளித்து உலகத்தின் பார்வையில் பட்டிடுங்கள் உங்கள் நேரத்தைப் பரிசளித்து உன்னத பலன்கள் ஈட்டிடுங்கள் உங்கள் இலட்சியம் தொடுவதற்கு உங்களை முழுதாய் கொடுத்திடுங்கள் வந்துவிட்டோம் பூமிக்கு வழங்க வேண்டும் எதையேனும் தந்தனர் பலரும் ...