ஆண்டினை ஆளுங்கள்
புதிதாய் திருமணம் ஆனவர்க்கு பணமோ பொருளோ தருவீர்கள் புதுமனை புகுகுற உறவினர்க்கு பரிசுப் பொருட்கள் தருவீர்கள் புதிதாய் வாடிக்கையாளர் எனில் பரிசும் சலுகையும் தருவீர்கள்.. புதிதாய் ஆண்டு வருகிறதே புதிதாய் என்ன தருவீர்கள். உங்கள் உழைப்பை பரிசளித்து உயர்வுகள் ஆயிரம் பெற்றிடுங்கள் உங்கள் நம்பிக்கை பரிசளித்து உலகத்தின் பார்வையில் பட்டிடுங்கள் உங்கள் நேரத்தைப் பரிசளித்து உன்னத பலன்கள் ஈட்டிடுங்கள் உங்கள் இலட்சியம் தொடுவதற்கு உங்களை முழுதாய் கொடுத்திடுங்கள் வந்துவிட்டோம் பூமிக்கு வழங்க வேண்டும் எதையேனும் தந்தனர் பலரும் ...
நீயே நினை…….
உன்னுடைய பீடத்தை நீயே அமை; உன்னுடைய வேதத்தை நீயே சமை; உன்வலிமை உன்சிறுமை நீயே நினை; உன்கனவு மெய்ப்பட நீயே துணை; பொன்னுரசிப் பார்க்கையிலேபுரியுமதன் தரம் மின்னுரசி மழைபொழிய மண்ணெல்லாம் வளம் உன்னைவிதி உரசுகையில் உணர்த்திடு உன பலம் உன்னைநீ உணருவதே உனக்கென்றும் நலம் கல்லுக்குள் சிலையிருக்கும்; கண்டறியும் உளி நெல்லுக்குள் மணியிருக்கும்; நீக்கிடுக பசி சொல்லுக்குள் பொருளிருக்கும்; உணர்ந்தவர்க்கே ஒளி எல்லையில்லா உன்பெருமை எட்டுவதே வழி விலலிலிருந்து அம்பொன்று விடைபெறலே விதி எல்லாமும் இடம்பெயரும் இவ்வுண்மை ...
விட வேண்டாம்
பெய்யும் பனியை வெயில் தின்னும் படர்கிற கோடையை மழைதின்னும் செய்கிற பணியை காலம் தின்ன சிறிதும் வாய்ப்பு தர வேண்டாம் தூண்டில் புழுவை மீன்தின்னும் துடிக்கும் மீனை நாம் தின்போம் நீண்ட கனவை தயக்கம் தின்ன நிச்சயம் வாய்ப்பு தரவேண்டாம் மண்ணின் சத்தை மரம்தின்னும் மரம்விழுந்தாலோ மண்தின்னும் எண்ணிய வெற்றியை எந்த எதிர்ப்பும் எடுத்துத் தின்ன விடவேண்டாம் கவிழ்கிற இருளோ பகல்தின்னும் கதிரவன் எழுந்து இருள்தின்னும் தவமாய் வளர்த்த கனவை அச்சம் தாவித் தின்ன விடவேண்டாம் ...
குருவெனும் முழுநிலவு
குருவெனும் முழுநிலவு வளர்பிறை அதன்பரிவு அருள்நிழல் தரும் பொழுது அகிலமும் அவன்விழுது ஒளியினில் உயிர்நனைய ஒலியினில் இசைநனைய களிதரும் அமுதமென குருவருள் வரும்பொழுது நடுநிசி வரையினிலே நாதனின் குடிலினிலே உடைபடும் வினைமுழுதும் உன்னதன் அடிதொழுது சுகங்களில் உடல்பழுது சுமைகளில் மனம் பழுது சகலமும் சுகம்பெறுமே சத்குரு வரும்பொழுது புன்னகை நந்தவனம் புனிதனின் குளிர்வதனம் என்மனம் கரைந்துவிடும் இறையவன் முன்னழுது தென்றலின் இதமிதுவா தெய்வத்தின் குரலிதுவா மன்னவன் குருநாதன் மன்றத்தில் வரும்பொழுது விண்மதி பொலிந்திருக்க விரல்களும் குவிந்திருக்க கண்களும் ...
சிரிப்பெனப்படுவது…
“கலகல” வென்று சிரித்தால் என்ன கவலை வரும்போது “சிடுசிடு” வென்று இருப்பதாலே எதுவும் மாறாது ஒருசில நாட்கள் சூரியன் தூங்கும் ஒருசில நாட்கள் தவறாய்ப்போகும் நடக்கும் தவறு நமது லீலை சிரித்து விட்டுத் தொடர்க உன் வேலை பிடித்து வைத்த களிமண்போல இருக்கக் கூடாது சிரித்துவிட்டால் இதயக்கோவிலில் குப்பை சேராது பாதையின் வளைவு வழியைக் காட்டும் புன்னகை விளைவு வலியைப் போக்கும் வேதனை இல்லா வீடுகள் இல்லை வாழ்வோ தாழ்வோ நிரந்தர மில்லை மனசைக் கொட்டிக் கவிழ்க்கும் ...
மும்மத வேழமாய் இங்கிருந்தான்
மூடிக் கிடந்த குளிர்பெட்டி – அதில் மூச்சினைத் தொலைத்துக் கிடந்தானே பாடி முடிந்த கீர்த்தனையாய் – எங்கள் பாட்டுடைத் தலைவன் தெரிந்தானே மேடுகள் ஏறிய ஜீவநதி – நெடும் மௌனத்தில் தூங்கிய தருணமிது கூடு கிடத்தி சிறகடித்தான் – ஒரு கனல்பறவை கொண்ட மரணமிது மீசை வருடும் இருகரங்கள் – அவன் மார்புக் கூட்டினில் கோர்த்திருக்க வீசும் வெளிச்ச விழியிரண்டும் – ஒரு விடுகதை போலத் துயின்றிருக்க பேசி உலுக்கிய இதழிரண்டும் – ஒரு பிரளய முடிவென ...