Blog

/Blog

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-19

என்ன பெயர் வைக்கலாம்? குழந்தை பிறக்கவில்லை என்று கோவில் கோவிலாக ஏறி இறங்குபவர்கள், குழந்தை பிறந்தவுடன் “என்ன பெயர் வைக்கலாம்” என்று ஒவ்வொரு ஜோதிடர் வீடாக ஏறி இறங்குகிறார்கள். நட்சத்திரத்தின்படி, நியூமராலஜியின்படி, நேமாலஜியின்படி என்று எல்லாம் பார்ப்பதால்தான் படிப்படியாக ஏறி இறங்க வேண்டி வருகிறது. சிலர் வம்பே வேண்டாம் என்று குலதெய்வத்தின் பெயரையோ, பெற்றோர் பெயரையோ வைக்க முடிவெடுத்து விடுகிறார்கள். அதிலேயும் சில குடும்பங்களில் சிக்கல் வருவதுண்டு. மாமனார், மாமியாருடன் மனத்தாங்கல் உள்ள மருமகனோ, மருமகளோ குழந்தைக்கு ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-18

காலம் ஒரு காமிரா “ஸ்மைல் ப்ளீஸ்” “வாழ்க்கையும் புகைப்படக் கலையும் ஒன்றுதான்” என்று யாரோ, எங்கோ சொன்னார்கள். என்ன காரணமாம்? புகைப்படத்தில் முதலில் கிடைப்பது நெகடிவ். அதையே டெவலப் செய்கிறார்கள். எதிர்மறையான விஷயங்களை நமக்குச் சாதகமாக “டெவலப்” செய்து கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது. எனவே புகைப்படக்கலை வாழ்க்கை இரண்டும் ஒன்றுதானாம். யோசித்துப் பார்த்தால் புகைப்படக்கலைக்கும் வாழ்க்கைக்கும் இன்னும் பல பொருத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. புகைப்படம் சரியாக அமைவதற்கு காமிராவின் கோணம் மிக முக்கியம். எந்தக் கோணத்தில் காமிரா ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-17

நீங்களும்தான் வசீகரிக்கிறீர்கள்! மற்றவர்களை வசீகரிப்பவர்கள்தான் மக்கள் தலைவர்களாக உயர முடியும் என்பது பொதுவான கருத்து. உண்மையில், ஒவ்வொருவரிடமும் வசீகரிக்கிற ஆற்றல் இருக்கத்தான் செய்கிறது. ஒரு சராசரி மனிதர்கூட குறைந்தது நான்கு பேரையாவது வசீகரித்திருப்பார். வசீகரம் என்பது மாயமோ மன வசியமோ அல்ல. இன்னொரு மனிதர்பால் உங்களுக்கிருக்கும் நல்லெண்ணம். ஒரு மனிதரின் நலனை நீங்கள் விரும்பினால் அந்த மனிதர் அவரையும் அறியாமல் உங்கள் பால் ஈர்க்கப்படுகிறார். வீடுவீடாக ஏறியிறங்கும் பல விற்பனைப் பிரதிநிதிகளிடம் வீட்டில் இருக்கும் சிலர், விரட்டியடிக்காத ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-16

எழுச்சிப் பயணத்திற்கு எரிபொருள் உள்ளதா? இரு சக்கர வாகனம் ஒன்றுக்கான சமீபத்திய விளம்பரம் ஒன்று. பெட்ரோல் பங்கில் வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு, “அது குடுப்பா” என்பார். “எதை” என்பார் பெட்ரோல் பங்க்காரர். அதாவது, எரிபொருளையே மறந்துவிடும் அளவுக்கு எரிபொருள் சேமிக்க இந்த இரு சக்கர வாகனம் கை கொடுக்கிறதாம். உண்மையில், வாழ்க்கை என்கிற பயணத்தில் வேகமாகவும் தடையில்லாமலும் செல்ல எது நமக்கு எரிபொருள்? எண்ணங்கள்தான்! எண்ணங்கள் என்கிற எரிபொருளில் கலப்படம் இல்லாமல் இருந்தால்தான் இலட்சியத்தைத் தொடும் வேகத்தோடு ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-15

15. முரண்பாடுகளில் இருந்து உடன்பாடு நோக்கி… மனித மனங்களில் அதிக பட்சம் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை எவையென்று தெரியுமா? மற்றவர்களுடனான முரண்பாடுகள்தான். நம்முடைய கருத்துக்கு எதிராக ஒருவர் எதையாவது சொல்லிவிட்டால் முதலில் மெதுவாக மறுக்கிறோம். வாதம் தொடரத் தொடர உடல் பதறுகிறது. ரத்தம் கொதிக்கிறது. மூளை சூடாக வார்த்தை தடிக்கிறது. அந்தப் பதற்றம் பல மணி நேரங்களுக்கு நம்மைப் புரட்டிப்போடுகிறது. அது மட்டுமா? மீண்டும் அந்த மனிதரைப்பற்றி யோசித்தாலோ, எங்காவது பார்த்தாலோ நம்மை மறுபடியும் அதே பதற்றம் ஆட்டி ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-14

எங்கிருந்து வருகின்றன எதிர்மறை எண்ணங்கள்? ஒரு செயலைத் தொடங்கும்போது, வெளியிலிருந்து வரும் எதிர்ப்புகளைக்கூட கையாள முடியும். உங்களுக்குள்ளேயே எழுகிற எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் அவை எதிர்மறை எண்ணங்களாக உங்களுக்குள் பதிந்துவிடும். எதிர்மறை எண்ணங்கள் அடிமனதில் பதிவாகும்போது, அவை உங்களைப் பற்றிய பலவீனமான ஒரு பிம்பத்தை உங்களுக்குள் ஏற்படுத்துகின்றன. அவை, அந்தப் பிம்பத்தைத் திரும்பத் திரும்பக் காட்டி, அந்தப் பலவீனத்தை உங்கள் ஆளுமையின் ஓர் அங்கமாகவே மாற்றிவிடுகின்றன. உங்கள் ஆளுமையில் அந்த பலவீனமான அம்சம் இருந்தால், உங்களை சரியாக செயல்படவிடாது. ...
More...More...More...More...