பழகும் அழகுகள்
காற்றில் ஏறும் குளிரழகு காலை வானத்தின் நிறமழகு நேற்றைய வாழ்வின் வலியழகு நாளையின் நம்பிக்கை ஒளியழகு வெய்யில் பருகும் குளமழகு வியர்வை பருகும் நிலமழகு வையம் வழங்கும் வாய்ப்பழகு வெல்லும் நேரத்தில் பணிவழகு நீரில் அலையும் கயலழகு நீளும் பாதையின் வளைவழகு நேரில் சவால்கள் நல்லழகு நேர்மையின் வெற்றி நிலையழகு பார்த்தன் வில்லின் கணையழகு பாரதி மீசையின் முனையழகு மூத்தவர் அனுபவச் சொல்லழகு முயற்சியின் தீவிரம் மிக அழகு ...
அடைந்துவிடு
தூவிய விதையில் வான்மழையின துளிகள் படுவது யாராலே ஏவிய கணைகள் இலக்குதனை எட்டி விடுவதும் எதனாலே மேவிய ஒழுங்குகள் எத்தனையோ மேதினி இயக்கத்தை ஆள்கிறது ஆவல் வளர்க்கும் விந்தையிது ஆண்டுகள் பலவாய் தொடர்கிறது! யாரோ முயற்சி தொடங்குகையிலே எவரோ துணையாய் வருகின்றார் ஊரோ உலகோ அறியு முன்னே உதவிக்கு அந்நியர் எழுகின்றார் சீராய் முயற்சி முன்னெடுத்தால் சரியாய் பாதை அமைந்துவிடும் நேராய் கடவுள் தெரிவதில்லை நடப்பவை அவர்துணை காட்டிவிடும் வீணாய்த் தயங்கிக் கிடக்காதே விருப்பம் நோக்கி நடைபோடு ...
களத்தின் சூட்சுமம்
எனக்குள் இருக்கிற நிர்வாகி எழுந்து பார்க்கிற நேரத்தில் கணக்குகள் நிரல்கள் திட்டங்கள் கண்ணைக் கட்டும் காலத்தில் தனக்குள் திட்டம் பலதீட்டி தாளில் கணினியில் அதைக்காட்டி கனக்கும் இமைகள் கசக்குகையில் களத்தின் சூட்சுமம் விரிகிறது, கேடயம் கவசம் துணையின்றி கத்தியை எடுப்பது வீரமல்ல பாடம் இதிலே புரிகிறது புதிதாய் வியூகம் அமைகிறது மூடிக் கிடக்கும் திசைதிறந்து முன்னே முன்னே நடைநடந்து தேடலைத் தொடர்தல் வாழ்வென்னும் திடமும் அதிலே வளர்கிறது, சீறும் அலைகள் சவால்களெனில் செய்யும் தொழிலே ஒருபடகு மாறும் ...
இன்று
இன்று முளைத்தது இன்று.. இதன் கன்றாய் துளிர்விடும் நாளை…. அன்றே முடிந்தது அன்று-அதன் அச்சம் சுமப்பவன் கோழை நன்றே நிகழ்ந்தது வாழ்வு – இந்த நிலையே தொடரட்டும் நாளை என்றே தொடருக யாவும் – இந்த எண்ணம் இறைவனின் லீலை ஒவ்வொரு நிமிடமும் வைரம் – அதை உணர்பவர் தொடுவார் உயரம் செவ்விய செயல்களின் சேர்க்கை – ஒன்று சேர்த்தால் அமைவதே வாழ்க்கை கருதிடும் கனவுகள் உண்டு – அவை கைவர வேண்டும் நன்று உறுதியை நெஞ்சினில் ...
போதனை போதாது
காலம் எழுதும் குறிப்பேட்டில் – உன் கனவுகள் நிலுவையில் உள்ளன! ஆலாய் பறக்கும் மானிடனே – உன் ஆசைகள் எங்கே போயின நீலம் நுரைக்கும் ஆகாயம் – நீ நிமிரும் நாளெதிர் பார்த்திடும் வேலைகள் தொடங்கிடு வேகமாய் – உன் வெற்றிகள் அழகாய்ப் பூத்திடும்! நானா செய்வேன் என்றிருந்தால் – நீ நிற்கிற இடத்தில் நின்றிடு தானாய் வரும் பலம் தெளிந்திருந்தால் – நீ திசைகள் எட்டும் வென்றிடு! ஏதோ இதுவரை சோம்பி நின்றாய் – அட ...
வருகிற காலம்
பிரளயம் எழுந்தே அடங்கும் பிரபஞ்சம் புதிதாய்த் தொடங்கும் நரக வலிகளும் முடங்கும் வருகிற காலம் விளங்கும் தீர்ப்பின் நிறங்கள் மாறும் தீர்வை நோக்கிப் போகும் போர்கள் முடிந்து மௌனம் போதனை தேடும் இதயம் மோதலின் சுவடுகள் மறையும் மூர்க்கத் தனங்கள் குறையும் ஆதலால் நம்புக நெஞ்சே ஆதவக் கிரணம் தெரியும் தவறுகள் திருத்தும் தருணம் தலைவர்கள் திருந்தும் தருணம் அவதிகள் மெதுவாய்க் குறையும் அனைவர்க்கும் ஒருநாள் விடியும் ...