திருக்கடவூர்-16
அழிவந்த வேதத்தழிவு மாற்றி அவனி திருமகட்காக மன்னர் வழிவந்த சுங்கந் தவிர்த்த பிரான் மகன்மகன் மைந்தனை வாழ்த்தினவே செருத்தந் தரித்துக் கலிங்கரோடத் தென்தமிழ் தெய்வப் பரணிகொண்டு வருத்தந் தவிர்த்து உலகாண்டபிரான் மைந்தற்கு மைந்தனை வாழ்த்தினவே! -இரண்டாம் இராஐராஐனை வாழ்த்தும் பழங்காலப் பாடல் மாமன்னர் குலோத்துங்கச்சோழ தேவர் அரசாணையினை சிரமேற்கொண்டு செயல்படும் திருக்கடவூர் மகாசபை இன்று மாலை வேலைக் காணன் திரு மண்டபத்தில் கூடுகிறது. உறுப்பினர் அனைவரையும் வந்துசேரசொல்லி முரசறைய உத்தரவு! உத்தரவு!திருக்கடவூரின் நான்கு முக்கிய வீதிகளிலும் மடவிளாக ...
திருக்கடவூர்-15
திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலையின் கலமறுத்தருளி வேங்கைநாடும் கங்கபாடியும் தடிகைபாடியும் நுளம்ப்பாடியும் குடமலைநாடும் கொல்லமும் கலிங்கமும் முரட்டொழிற் சிங்களர் ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை யிலக்கமும் முந்நீர்ப்பழந்தீவு பனராயிரமுந் திண்திறல் வென்றித் தண்டாற்கொண்டதன் எழில்வலர் ஊழியுளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள்கோ ராசகேசரி வர்மரான உடையார் ராசராச தேவர்க்கு! -இராஐராஐ சோழன் மெய்க்கீர்த்தி தண்டுக்குக் கீழே தண்ணீர் குறைந்தாலும், புதுப்புனல் வந்து புகுந்தாலும் தன்னிலை மாறாத தாமரை ...
திருக்கடவூர்-14
புல்லன வாகா வகைஉல கத்துப் புணர்ந்தனவும் சொல்லின வும்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி வில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலைபுக் கான்என்பரால் கல்லன மாமதில் சூழ்கட வூரினிற் காரியையே! -நம்பியாண்டர் நம்பிகள் (திருத்தொண்டர் திருவந்தாதி) வீரட்டானத்து வித்தகனைத் தேடி அருளாளர்கள் திருவடி நிலந்தோய திருக்கடவூர் வந்து செல்லும் போதெல்லாம் விழாக்கோலம் பூணுந் திருக்கடவூரில் அன்றும் ஆனந்தம் அலைவீசியது. தம்பிரான் தோழராம் நாவலூர்க்கோன் திருக்கடவூருக்கு எழுந்தருளியிருக்கிறார் என்றறிந்து தாமரையை மொய்க்கும் வண்டுகளாய் தெய்வத் தமிழ் பருக திரண்டது சைவ அன்பர்கள் ...
திருக்கடவூர்-13
பாலனாம் மறையோன் பற்றப் பயங்கெடுத் தருளு மாற்றால் மாலுநான் முகனுங் காணா வடிவுகொண் டெதிரே வந்து காலனார் உயிர்செற் றார்க்குக் கமழ்ந்தகுங் குலியத் தூபம் சாலவே நிறைந்து விம்ம இடும்பணி தலைநின் றுள்ளார். -சேக்கிழார் திருக்கடவூர் வீதிகளெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. வாசல்களெங்கும் மாக்கோலங்கள் மின்னின. பூரண கும்ப உபசாரங்களுடன் நெற்றி நிறைய திருநீறு பூசிய கோலத்தில் ஊரெல்லையில் மக்கள் திரண்டிருந்தனர். ஆளுடைய பிள்ளையாம் மக்கள் திரண்டிருந்தனர். ஆளுடைய அடிகளாம் திருநாவுக்கரசரும் வழிபாட்டுக்காக திருக்கடவூர் எழுந்தருளப் போவதாய் செய்தி ...
திருக்கடவூர்-12
பெரும்புலர்க் காலைமூழ்கி பித்தர்க்குப் பத்தராகி அரும்பொடு மலர்கள் கொய்து ஆங்குநல் ஆர்வத்தை உள்ளே வைத்து விரும்பிநல் விளக்குத்தூபம் விதியினால் இடவல்லார்க்கு கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே! -திருநாவுக்கரசர் சதுரமறைகள் அரண்செய்யச் சூழ்ந்ததுபோல் சதுர வடிவில் நான்கு பிரதான வீதிகளுடன் அமைந்திருந்தது திருக்கடவூர். திருக்கோவிலுக்கு நேரெதிரே சந்நிதித்தெரு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்குவதுபோல் தோற்றமளித்தது. திருக்கோவிலைச் சுற்றி உள்சதுரமாய் நான்கு வீதிகள். அவற்றுக்கு மடவிளாகங்கள் என்று பெயர். திருக்கோவிலுக்கு வலப்புறம் பிரியும் மட விளாகம் வடக்குத் தெருவில் சென்று ...
திருக்கடவூர்-11
“அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன் வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் குரவர் பணியன்றியும் குலப்பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் பிழையோய் போற்றி” -சிலப்பதிகாரம் (மாதவி கோவலனுக்கு வரைந்த இரண்டாம் கடிதம்) தாதிப்பெண்கள் சூழ வயந்தமாலை திருக்கடவூர் வீதிகளில் வீடுவீடாய் ஏறி இறங்கிக் கொண்டிருந்தாள்.பண்ணியங்களும் இனிப்புகளும் விநியோகிக்கப்பட்டன.”உங்கள் மாதவிக்குப் பெண்குழந்தை பிறந்திருக்கிறது”. பெருமையும் மகிழ்ச்சியும் பொங்கப் பொங்க ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தகவல் தந்தாள் வயந்தமாலை. ஒவ்வொருவரும் வெளிப்படுத்திய மகிழ்ச்சியும் ...